03 August, 2011

உன் உறவால் சிதைந்துக்கூடப் போகலாம்....


ஓ... பறவைகளே...!
சிறகுகளை சிதரடித்துவிட்டு கிடைக்கும்
ராஜ்யங்களை விட

லி‌கொண்டு பறந்தெழும் சுதந்திர
வானமே அழகு...
கவிதை வீதி
ஓ...வண்ணத்து பூச்சிகளே...!
மகுடங்களுக்கு ஆசைப்பட்டு
கருப்பு வெள்ளையில் வாழ்வதை விட

வாடிய பூவில் தேனைத்தேடினாலும்
வண்ணங்களே அழகு...
கவிதை வீதி
ஓ... குயிலினமே...!
சுரங்களுக்கு கட்டுப்பட்டு
சுயநினைவின்றி வாழ்வதைவிட

ராகங்களை சுகமாகச் சொல்லும்
சோகங்கள் கூட அ‌ழகு...
கவிதைவீதி
 
ஓ...மலரினமே...!
வசந்தம் மாறாமல்
கொடியிலே வாடுவதைவிட
 

ன்பத்திலோ துன்பத்திலோ
அடைக்கலமாவதே அழகு...!

 கவிதைவீதி
ஓ... மனிதமே...!
முகத்தில் மட்டுமே பூக்கும்
சிரிப்‌போடு சிலாய்ப்பதைவிட...


கத்தில் மலர்ந்து அர்த்தப்படும்
நல்ல நட்போடு சிதைந்துபோவதுகூட அழகு....



நண்பர்களுக்கு வணக்கம்
வெகுநாளாக திருக்குறளை மையப்படுத்தி கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆசையை தற்போது துவங்கியுள்ளேன். அதை பேராசையாக்குவது தங்களிடம்தான் உள்ளது.

 
இன்றைய கவிதைக்கு பயன்படுத்திய குறள்


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு. 
 திருக்குறள் 786
தங்களுடைய கருத்துக்களை பதிவுச் செய்யுங்கள்..

47 comments:

  1. முதல் விதை முளைத்ததே...

    ReplyDelete
  2. திருக்குறளை மையப்படுத்தி கவிதை அருமை நண்பா

    ReplyDelete
  3. இப் புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. //அகத்தில் மலர்ந்து அர்த்தப்படும்
    நல்ல நட்போடு சிதைந்துபோவதுகூட அழகு...

    டச்சிங் வரிகள்

    குறளுக்கு நீங்கள் தரும் புது அர்த்தம் படிக்க ஆவல்

    தொடருங்கள் நண்பா வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ஒரு புது தொகுப்பு தயார் ஆகுது ...முதல் பிரதி எனக்கே எனக்கு

    ReplyDelete
  6. வானத்தில் வண்ணச்சிறகு விரித்துப் பறந்த அழகுக்கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கவிதையும் குறளும் சிறப்பு.

    ReplyDelete
  8. அந்த வீணாப் போனவுடன் சேர்ந்து திரிந்தால்
    உருப்படாமல் போய் விடுவாய் என்றார்...
    என் அப்பா என் வீட்டில்..
    என் நண்பன் வீட்டில் அவன் அப்பாவும்...

    ReplyDelete
  9. அன்பின் சௌந்தர் - நல்ல்தொரு முயற்சி - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ( இயன்ற வரை சந்திப்பிழை தவிர்க்கவும் )

    ReplyDelete
  10. கவிதை நாயகன் சவுந்தர் வாழ்க வாழ்க

    ReplyDelete
  11. இன்பத்திலோ துன்பத்திலோ
    அடைக்கலமாவதே அழகு...!
    >>
    சரியான வரிகள். திருக்குறளை வத்து கவிதையா? புது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் சகோ.

    ReplyDelete
  12. ஓ... மனிதமே...!

    ஓகோ மனிதமே...! முத்து!
    முயற்சித் திருவினை யாக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. very good concept. தொடர்ந்து அசத்துங்க....

    ReplyDelete
  14. இதயத்தை இழுக்கிறது!!!

    ReplyDelete
  15. pl change the yellow colour in the beginning. it will be pleasant to read. kavithai muyarchi sirappu

    ReplyDelete
  16. பின்றீங்க. சத்தியமா நமக்கெல்லாம் இது வரவே வராது.

    ReplyDelete
  17. மிகவும் நன்றாக உள்ளது பாஸ் ...

    ReplyDelete
  18. வணக்கம் மாப்ளே, வித்தியாசமான முயற்சியோடு ஒரு கவிதையினைப் படைத்திருக்கிறீங்க.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. ஓ...மலரினமே...!
    வாசந்தம் மாறாமல்
    கொடியிலே வாடுவதைவிட//

    வசந்தம் என்று வந்தால் அழகாக இருக்கும் அல்லவா.

    ReplyDelete
  20. நட்பின் முக்கியத்துவத்தை, வாழ்க்கைப் பாடத்திற்கான அர்த்தத்தினை உங்களின் கவிதை நச்சென்று தாங்கி வந்துள்ளது.

    ReplyDelete
  21. முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ஓ நண்பரே..
    பதிவு நன்றாக உள்ளது..

    ReplyDelete
  23. நல்ல முயற்சி.அற்புதமான குறளுக்கு அருமையான கவிதை.வாழ்த்துக்கள் சௌந்தர்.உங்கள் முயற்சி தொடரட்டும்.

    ReplyDelete
  24. நட்பு ஒரு மனிதன் மதிக்க முடியும் என்று மிகவும் விலைமதிப்பற்ற விஷயங்கள் உள்ளது. ரஜினி விட யார், அதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
    http://bit.ly/n9GwsR

    ReplyDelete
  25. வித்தியாசமாக திருக்குறளை மையப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள்... நன்றாகவிருக்கிறது

    ReplyDelete
  26. திருக்குறளை மையப்படுத்தி எழுதியிருக்கும் முயற்சி வெற்றி வாழ்த்துக்கள், கவிதைகள் மிக அருமை,
    அப்புறம் நம்ம ப்ளாக் பக்கமும் வாங்க

    ReplyDelete
  27. முதல் விதையே முத்து.
    தொடர்ந்து விதையுங்கள்.

    ReplyDelete
  28. ஆஹா திருக்குறளை தொட்டிருக்கிறீர்கள்..நன்றி இந்த முயற்சி பாராட்டதக்கதே...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. மிகச் சிறந்த நட்பு வரிகளில் இதுவும் ஒன்று.........மிகவும் நன்று !

    ReplyDelete
  30. நல்லாயிருக்கு

    ReplyDelete
  31. ராகங்களை சுகமாகச் சொல்லும்
    சோகங்கள் கூட அ‌ழகு...
    அருமையான வரிகள் சகா. . .

    ReplyDelete
  32. கவிதையும் அருமை படங்களும் அருமை

    ReplyDelete
  33. படங்களுடன் கூடிய கவிதை சூப்பர்!!

    ReplyDelete
  34. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்(அப்பாடி.. பேராசையை தூண்டி விட்டாச்சு)..

    கவிதை மிக அழகு..நட்பு சிதைக்காது..சேர்க்கும்...

    நட்புடன்,
    ரங்கன்

    ReplyDelete
  35. கவிதையும் அருமை ...படங்களும் அருமை ....

    ReplyDelete
  36. நல்ல முயற்சி சௌந்தர்.கவிதையின் ஒவ்வொரு வரியும் அர்த்தத்தோடு...அதுவும் கடைசியாக மனிதனைப் பற்றிச் சொன்னது
    அற்புதம் !

    ReplyDelete
  37. குறளுக்கு கவிதை எழுதிய விதம், அருமை.
    வான் புகழ் வள்ளுவனுக்கு கவிதை ஆறாம்
    படைத்திருக்கிறீர்கள்.
    தொடரட்டும் உங்கள் பயணம்....

    ReplyDelete
  38. அற்புதமான முயற்சி நண்பா, இதை புத்தகமாக வெளியிடும் வகையில் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.....!

    ReplyDelete
  39. ////////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    அற்புதமான முயற்சி நண்பா, இதை புத்தகமாக வெளியிடும் வகையில் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.....!
    ////////

    கண்டிப்பாக தங்கள் வேண்டுக்கோள் நிறைவேற்றப்படும்....

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  40. ''...மனிதமே...!
    முகத்தில் மட்டுமே பூக்கும்
    சிரிப்‌போடு சிலாய்ப்பதைவிட...

    அகத்தில் மலர்ந்து அர்த்தப்படும்
    நல்ல நட்போடு சிதைந்துபோவதுகூட அழகு......''
    நல்ல முயற்சி. வாழ்வியல் குறள் என்று நானும் எழுதுகிறேன் வந்து பாருங்கள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  41. நல்லமுயற்சி. இருவரிகளைக் கருவாய்க் கொண்டு எழும் கவித்தரு அருமை. தொடரட்டும் திருக்குறள் கவிதைகள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!