04 August, 2011

சீமானை அலைக்கழிக்கும் விஜய்... பகலவன் படத்தின் நிலை என்ன..?


புலி வருது கதையாக சீமான் - விஜய் இணையப் போகிறார்கள் என்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. காவலன் முடிந்த பிறகு, வேலாயுதம் முடிந்த பிறகு, இல்லையில்லை நண்பனுக்குப் பிறகு என்றெல்லாம் சொல்லி வந்தார்கள்.

இப்போது சீமானுக்கு படமே இல்லையோ என்று கேட்கும்படியாகிவிட்டது நிலைமை.

காரணம் 2013 வரை விஜய் அடுத்தடுத்த படங்களுக்கு ஒப்பந்தமாகி, அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

வேலாயுதம் படத்தை அடுத்து ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இயக்குனர் ஹரிதான் இந்தப் படத்தை இயக்குகிறார் என்கிறார்கள்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் அக்டோபரில் துவங்கக்கூடும். 2012-ல் கெளதம் மேனன் படம் தொடங்கி 2013 பொங்கல் வெளீயிடாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியெனில் சீமான் படம்? சீமான் இரண்டு வெவ்வேறு க்ளைமாக்ஸ்களைச் சொல்லியும் விஜய்க்கு திருப்தியில்லையாம். இப்போதைக்கு அதுபற்றி விஜய் பேச மறுக்கிறாராம்.

விஜய்யின் இந்த மவுனம் தொடர்ந்தால், கைவசம் தயாராக உள்ள 'கோபம்' படத்தினை தொடங்கிவிடுவார் சீமான். இதை ஏற்கெனவே அவர் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

தற்ப்போது பரப்பரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பகலவன் கேள்விக்குறியாகியிருக்கிறது. பகலவன் கதை யாருக்கு மாற்றப்படும் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

23 comments:

  1. முதல் விதை முளைத்ததே....

    ReplyDelete
  2. //விஜய்யின் இந்த மவுனம் தொடர்ந்தால், கைவசம் தயாராக உள்ள 'கோபம்' படத்தினை தொடங்கிவிடுவார் சீமான். //



    அலார்ட்டா இருங்க விஜய்.. (அப்டிதானே??)

    ReplyDelete
  3. ரெண்டு கிளைமாக்ஸ் சொல்லியும் திருப்தி வரலையின்னா... அவருக்கு பில்டப் இல்லாம இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. ரொம்ப கவலைப்படுறீங்க...

    ReplyDelete
  5. பாத்து விஜய் சீமானுக்கு''கோபம்''வந்த்துடப்போகுது

    ReplyDelete
  6. அநேகமாக விஜய் சீமான் இயக்கத்தில் நடிக்கமாட்டார்!

    ReplyDelete
  7. கதை எங்கே இருந்தும் சுட்டது இல்லை போல இருக்கு அதான் அவரு முழிக்கிறார்ன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. மாப்ள பகல்ல வருமா வராதா!

    ReplyDelete
  9. கதையை முதலில் தெலுங்குல எடுத்திட்டு அதுக்கு அப்புறமா டப்பிங் பன்னுனாத்தான் நடிப்பார் இந்த தமிழ் நடிகர் ....

    ReplyDelete
  10. தப்பிக்க போறது சீமானா டாகுடரா?

    ReplyDelete
  11. ஆமாம். இவரு எத்தனை படங்கள் நடிச்சாலும், இவரு பஞ்ச் வசனங்கள் பேசாம 'நடிக்கமாட்டாரு'.

    ReplyDelete
  12. பகலவன் இருட்டிலேயே இருக்குதே!

    ReplyDelete
  13. என்ன பாஸ் இப்படி சொல்லுறீங்க...

    ReplyDelete
  14. சீமான் படத்துக்கும் விஜய்க்கும் சம்மந்தமே இல்லையே. . .

    ReplyDelete
  15. அப்போ பகலவன் அம்போவா

    ReplyDelete
  16. பகலவன் படத்தில் பவர் ஸ்டார் நடிக்க உள்ளார் என உளவுத்துறை தகவல் வந்துள்ளது.

    ReplyDelete
  17. விஜய் "வேண்டாம்" என்று தள்ளிய படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கின்றன.... பார்க்கலாம் என்னதான் நடக்கிறது என்று.

    ReplyDelete
  18. //பாரத்... பாரதி... said...
    விஜய் "வேண்டாம்" என்று தள்ளிய படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கின்றன.... பார்க்கலாம் என்னதான் நடக்கிறது என்று.

    August 5, 2011 4:35 PM//

    ஆமா...ஆமா...பொருத்திருந்து பார்ப்பதுதான் புத்திஷாலித்தனம்

    ReplyDelete
  19. ///////
    ! சிவகுமார் ! said... [Reply to comment]

    பகலவன் படத்தில் பவர் ஸ்டார் நடிக்க உள்ளார் என உளவுத்துறை தகவல் வந்துள்ளது.
    //////

    அப்ப வசூல் சாதனைதான்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!