06 August, 2011

மங்காத்தா, வேலாயுதம் - எதிர்கால பயத்தில் அஜித், விஜய்..


எம்.ஜி.ஆர்- சிவாஜி,  ரஜினி-கமல், என்ற தமிழ் சினிமாவில் இரட்டைகுழல் துப்பாக்கிப்போன்று தமிழ் திரைஉலகை தன் பக்கம் திரும்ப வைத்தவர்களின் பட்டியலில் அடுத்து வந்தவர்கள் விஜய்-அஜித்.

1992-ல் நாளைய தீர்ப்பில் விஜயும், அதே ஆண்டில் பிரேம புஸ்தம் என்ற தெலுங்கில் அறிமுகமாகிய அஜித் அமராவதி படத்தின்மூலம் தன்னுடைய தமிழ்பட வரலாற்றில் இணைந்துக் கொண்டார். ஆரம்பக்காலங்களில் இருவருக்கும் நிறைய பின்னடைவுகள் இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்ச்சியால் இருவரும் தமிழ் திரைவுலகின் பிரபல நட்சத்திரங்கலாக உயர்ந்தனர். தற்போது வரை அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டும் இருக்கின்றனர்.

விஜயை பொருத்த வரை மசாலா படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்னை ஒரு அதிரடி ஹீரோவாக முன்னிருத்திக் கொண்டார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் தான் விஜயை தமிழகத்தின் பட்டித்தொட்டிக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்தது. அதை தொடர்ந்து விஜய் நடித்தால் அது கண்டிப்பாக வெள்ளிவிழா படமாகத்தான் இருக்கும் என்ற நிலையை விஜயும் அவரது ரசிகர்களும் உறுவாக்கினார்கள். குஷி, திருமலை, கில்லி, திருப்பாச்சி,  போன்ற படங்கள் வசூலில் சாதனைகள் புரிந்தது.

ஆனால் தற்போது தன்னுடைய நடிப்பு பாணியை மாற்றாததாலும் ஒரே மாதிரியான கதையை தேர்ந்தெடுப்பதினாலும் சாதாரண ரசிகன் கூட நம்ம முடியாத காட்சி அமைப்பாலும் விஜயின் படங்கள் தொடர் ‌தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. சமீபத்தில் வெளியான அழகிய தமிழ்மகன் (2007), குருவி (2008),  வில்லு, வேட்டைக்காரன் (2009), சுறா (2010) போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்விப்படங்களாக அமைந்து விட்டன. ‌மேற்கண்ட படங்கள் காட்சி அமைப்புகளில்  ஒரே மாதிரியான படங்கள் என்பதால் இந்த பிண்ணடைவு என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு படம் என்றாலும் கூட அதை வெற்றிபடமாக மாற்றமுடியாமல் திண்டாடிய விஜய்க்கு ஒரு ஆறுதலாக இறுதியாய் வெளிவந்த காவலன் ஒரு ஆறுதல் படமாக இருந்தது.....

அஜித்தை பொருத்த வரை ஆரம்பக்கட்டத்தில் கொஞ்சம் நிதானமாய் ஆரம்பித்து பின் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற வெற்றிப்படங்களின் மூலம் தன்னுடைய சுயமுன்னேற்றத்தின் விளைவாக தன் பெயரை தமிழ் திரைவுலகில் தடம்பதித்தார். வாலி, முகவரி, தீனா, சிட்டிசன், வில்லன் என வசூலில் சாதனைப்படைத்த படங்கள் அஜித்திடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது. படத்திற்க்கு படம் வித்தியாசம் என காட்டியும் அவருடைய சிலப்படங்கள் அவருக்கு பின்னடைவை கொடுத்தது.

சமீபத்தில் வெளிவந்த  ஆழ்வார், கிரீடம், ஏகன, அசல், போன்ற தொடர் தோல்வி படங்களுக்கு பிறகு மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் அஜித். அவருடை பில்லா-1 மட்டும் கைகொடுத்தபிறகும்  அடுத்து வந்த ஏகனும், அசலும் இவருக்கு சறுக்கலாகவே அமைந்திருக்கிறது.

இந்நிலையில் தமிழில் தன்னுடைய இமேஜை தக்கவைத்துக் கொள்ள அவர்கள் அதிக அக்கறைக்காட்டி நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்தான் வேலாயுதம், மங்காத்தா, இப்படங்களில் எந்தப்படம் வெற்றி பெறும் எந்தப்படம் தோல்வியடையும் என்று தற்போது சொல்லுவதற்க்கு இல்லை.

எந்த நேரத்தில் ‌வெளிவந்தாலும் இவர்கள் படம் ஓடும் என்ற நிலைமாறி எப்போது வெளியிடலாம் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிற காலத்தில் இவர்கள் இருக்கிறார்கள்.

விஜய்க்கு அடுத்து சங்கரின்-நண்பன், கவுதம்மேனனின்-ரோஹன், மணிரத்தினத்தின்-பொன்னியின் செல்வன் பெரிய இயக்குனர்கள் புண்ணியத்தில் வலுவான படங்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

அஜித்தை பொருத்தவரை லிங்சாமி தயாரிப்பில் பில்லா-2, வாசுவின் இயக்கத்தில் சந்திரமுகி-2 என இரண்டுப்படங்கள் அவருடைய இமேஜை தூக்கி நிறுத்தக்கூடிய படங்கலாக இருக்கும் என இவரது ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

இரண்டு ஜாம்பாவன்கள் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பை மேம்படுத்தி நடித்து தன்னுடைய ரசிகர்களை உற்சாகத்தில் ‌வைத்துக் கொண்டிருந்தால் ஆரோக்கியமான போட்டியுடன் இருதரப்பு ரசிகர்களின் ஆதரவில் தமிழ் திரைவுலகம் அணிவித்த கிரிடத்தை இவர்கள் என்றன்றைக்கும் கழட்டாமல் இருக்கலாம். இது இருதரப்பு ரசிகர்களின் ஆதங்கம்.

35 comments:

  1. ///விஜய் பொருத்தவரை லிங்சாமி தயாரிப்பில் பில்லா-2,////
    அஜித்தை பொறுத்தவரை பாலாஜி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பில்லா-2

    நண்பா தவறை சரி செய்யவும் ..நன்றி
    hope u dunt mind

    ReplyDelete
  2. எனக்கும் அந்த தப்பு தெரிஞ்சது ரியாஸ்.. மாத்துங்க சௌந்தர்..

    ReplyDelete
  3. தல .. சந்தரமுகி-௨ ல நடிக்கிறாரா?

    பாத்துக்க சொல்லுங்க.. ஏற்கெனவே அந்த படம் தெலுங்குல வெங்கடேஷ் நடிச்சு ஊத்திகிச்சு..

    ReplyDelete
  4. /\
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]
    ///விஜய் பொருத்தவரை லிங்சாமி தயாரிப்பில் பில்லா-2,////
    அஜித்தை பொறுத்தவரை பாலாஜி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பில்லா-2

    நண்பா தவறை சரி செய்யவும் ..நன்றி
    hope u dunt mind
    //////

    தவறை சுட்டிகாட்டியதற்க்கு மிக்க நன்றி ரியாஸ்

    ReplyDelete
  5. பயம் இருக்கட்டும்
    அப்போதான் முயற்சி அதிகரிக்கும்
    விளைவும் பயனளிக்கும்.

    ReplyDelete
  6. சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

    ReplyDelete
  7. சந்திரமுகி -2 ஆ வரட்டும், very good analysis

    ReplyDelete
  8. வரட்டும்மையா அப்புறம் பாக்கலாம்.

    ReplyDelete
  9. /////சமீபத்தில் வெளியான அழகிய தமிழ்மகன் (2007), குருவி (2008), வில்லு, வேட்டைக்காரன் (2009), சுறா (2010) போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்விப்படங்களாக அமைந்து விட்டன////////

    ஆதி என்ற அற்புதமான திரைக்காவியத்தை வேண்டுமென்றே கண்டுக்காமல் விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  10. rendu perume waste boss

    ippodhaikku SURYA the best :)

    ReplyDelete
  11. அன்பின் சௌந்தர் - ஒப்பு நோக்கியமை நன்று - இருவருமே அவரவர் பாணியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. எது எப்படியோ, வெளிவரப்போற ரெண்டு பேரோட படமும் ஹிட்டானா நல்லாஇருக்கும்.

    ReplyDelete
  13. அருமையான ஒரு ஒப்பீட்டு பதிவு

    ReplyDelete
  14. //விஜய்க்கு அடுத்து சங்கரின்-நண்பன், கவுதம்மேனனின்-ரோஹன், மணிரத்தினத்தின்-பொன்னியின் செல்வன் பெரிய இயக்குனர்கள் புண்ணியத்தில் வலுவான படங்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.//

    பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டு விட்டது நண்பா

    ReplyDelete
  15. ம்ம் இருவரின் ஆரம்ப சினிமா காலத்தில் இருந்து அலசியுள்ளீர்கள்..

    ReplyDelete
  16. ///////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    /////சமீபத்தில் வெளியான அழகிய தமிழ்மகன் (2007), குருவி (2008), வில்லு, வேட்டைக்காரன் (2009), சுறா (2010) போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்விப்படங்களாக அமைந்து விட்டன////////

    ஆதி என்ற அற்புதமான திரைக்காவியத்தை வேண்டுமென்றே கண்டுக்காமல் விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்!
    /////////


    தோல்விப்படங்களை குறிப்பிட்டுள்ளேன்..
    தாங்கள் சொன்னது படு தோல்வி பட்ம்...

    ReplyDelete
  17. //////
    மதுரன் said... [Reply to comment]

    //விஜய்க்கு அடுத்து சங்கரின்-நண்பன், கவுதம்மேனனின்-ரோஹன், மணிரத்தினத்தின்-பொன்னியின் செல்வன் பெரிய இயக்குனர்கள் புண்ணியத்தில் வலுவான படங்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.//

    பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டு விட்டது நண்பா
    //////

    தகவலுக்கு நன்றி மதுரன்..

    ReplyDelete
  18. இந்த இருவருமே தற்போது ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள் !

    ReplyDelete
  19. நல்ல அலசல் நன்றி

    ReplyDelete
  20. சமீபத்தில் வெளிவந்த ஆழ்வார், கிரீடம், ஏகன, அசல், போன்ற தொடர் தோல்வி படங்களுக்கு பிறகு மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் அஜித். அவருடை பில்லா-1 மட்டும் கைகொடுத்தபிறகும் அடுத்து வந்த ஏகனும், அசலும் இவருக்கு சறுக்கலாகவே அமைந்திருக்கிறது.///

    வரலாறு படம் ஹிட் ஆச்சுங்க அதை மறந்துடீங்க ....

    ReplyDelete
  21. தமிழ் திரையுலகம் இப்பொழுதுதான் நல்ல படைப்புகளை தந்துகொண்டு இருக்கின்றது, இவர்களும் அந்த வழியை பின்பற்றினால் நல்லது. . .

    ReplyDelete
  22. இமேஜை நகர்த்தி வைத்துவிட்டு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் கிரீடங்கள் எப்பொழுதும் அவர்கள் தலையில் இருக்கும்

    ReplyDelete
  23. என்னது ஆழ்வார், ஏகன், அசல் எல்லாம் தோல்விப்படமா??????????????

    "வெற்றி நடைபோடுகிறது" ன்னு பேப்பர்ல படிச்சிருக்கேன். பொய் சொல்லாதீங்க!

    ReplyDelete
  24. நல்ல அலசல்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. நல்லதொரு அலசல்


    சௌந்தர் நண்பருக்கு

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. வணக்கம் தோழா அற்புதமான படைப்பு

    ReplyDelete
  28. வேட்டைக்காரன் அதிக வசூல் எண்டெல்லோ கேள்விப்பட்டம்... எது உண்மை?

    ReplyDelete
  29. Mankatha Movie will be released soon.For

    Advance Mankatha Movie ticket Booking, goto this

    Site : http://www.ticketnew.com/OnlineTheatre/online-movie-ticket-booking/tamilnadu-chennai/Mankatha.html

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!