26 August, 2011

இந்த மனைவிகளே இப்படித்தான்.... சில சமயங்களில்...

வளுக்காகவே
‌செடியில் பூக்கள் பூக்கிறது
சிலசமயம் நிலவுகளும்...!  
kavithaiveedhi.blogspot.com
வள் நடக்கையில்
பூக்களை தூவுகிறது பூமரங்கள்
சிலசமயம் இலைகளை...!
 
திகாலை விடியலில் பிரகாசிக்கும் 
அவளின் முகம்
சிலசமயம் சூரியன்...!
 
  ருடும் தென்றலாய்
அவளின் பார்வைகள்
சிலசமயம் புயலாய்...!

கூர்மையான விழிகளால்
‌அதிகம் பேசுவாள்
சிலசமயம் மொழிகளால்...!

ன் கவிதைகளுக்கு
அவள்தான் கருப்பொருள்
சிலசமயம் தமிழ்...!
  
தினமும் அவளுக்காகவே
சுவாசிக்கிறேன்
சிலசமயம் எனக்காகவும்...!



 வளின் புன்னகைகள்
புதிராகவே இருக்கும்
சிலசமயம் அழுகைகள்...!


கிழ்ச்சியும் சந்தோஷமும்
எங்களின் துணைகள்
சிலசமயம் ஊடல்கள்...!

நான் சிந்தும்
வியர்வையும் கண்ணீரும் அவளுக்காகவே
சிலசமயம் உதிரங்கள்...!


னைவியாய் அவளை
நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
சிலசமயம் தாயாய்...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

49 comments:

  1. நீண்ட நாளைக்கு அப்புறம் வருகிறேன் .....சுகம்தானா அண்ணா

    ReplyDelete
  2. ஈடு இணையற்ற கவிதை !

    ReplyDelete
  3. அப்படிப்போடுய்யா மாப்ள கவித கவித...கவிஞ்சா நீ வாழி!

    ReplyDelete
  4. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.

    ReplyDelete
  5. அழகிய கவிதை நண்பரே
    மாற்றான் தோட்டத்தில் விளைந்து
    நம் தோட்டத்தில் மணக்க வந்த
    மனைவியின் பெருமை கூறும்
    அழகிய கவிதை.
    மனத்தைக் கவர்கிறது.

    ReplyDelete
  6. மனைவியாய் அவளை
    நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
    சிலசமயம் தாயாய்

    உண்மை நண்பரே!
    கட்டிய மனைவியிடம் கணவன்
    இப்படித்தான் இருக்க வேண்டும்
    நல்ல கருத்து!
    அருமை!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. அழகு கவிதை சௌந்தர்

    // நான் சிந்தும்
    வியர்வையும் கண்ணீரும் அவளுக்காகவே
    சிலசமயம் உதிரங்கள்...!

    ரொம்ப புடிச்சு இருக்கு நண்பா...

    ReplyDelete
  8. நிலவு அழகு
    விண்மீன் அழகு
    இப்போது தங்கள் கவிதைகளும்!!

    ReplyDelete
  9. என் கவிதைகளுக்கு
    அவள் தான் கருப்பொருள்
    சிலசமயம் தமிழ்...!

    என்னைக் கவர்ந்த வரிகள் இவை..

    ReplyDelete
  10. கவிதையைப் படித்து முடித்தபின்னர் தலைப்பின் மதிப்பு அதிகரிக்கிறது..

    சில சமயம் இடுகைக்கான வடிவமைப்பும்!!

    ReplyDelete
  11. சௌந்தர் சார் வணக்கம் அருமையான படைப்புகள்

    ReplyDelete
  12. நல்லாய் இருக்கு பாஸ்

    ReplyDelete
  13. கூர்மையான விழிகளால்
    அதிகம் பேசுவாள்
    சில சமயம் மொழிக(லா)ல்...
    (அண்ணே...
    ஸ்பெல்லிங் மிஸ்டேக்ணே...)

    ReplyDelete
  14. கவிதை மிக அருமை. திட்டி இருப்பீங்கன்னு நினைத்து வந்தேன்.

    ReplyDelete
  15. மனைவியாய் அவளை
    நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
    சிலசமயம் தாயாய்...!//

    அழகு கவிதை

    ReplyDelete
  16. இது அது என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
    கவிதை முழுதும் முத்து!

    ReplyDelete
  17. கவிதை அருமை..ஆனால் சாரி பாஸ் மனைவியை பத்தி கவிதையை ரசிக்க இன்னும் எனக்கு வயசு வேணும் நான் ரொம்ப சின்னப்பையன் பாஸ்.ஹி.ஹி.ஹி.ஹி.

    ReplyDelete
  18. கவிதை அருமை...

    மனைவியை காதலித்தால் இப்படித்தான்
    கவிதை மழை பொழியும்...
    மரங்கள் பூத்தூவும்...
    சூரியன் பிரகாசிக்கும்...
    இன்னும்... இன்னும்...

    ReplyDelete
  19. அவளின் புன்னகைகள்
    புதிராகவே இருக்கும்
    சிலசமயம் அழுகைகள்...!


    .....super!!!!

    ReplyDelete
  20. தங்கள் வலைப்பூ "தேன்கூடு" திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  21. அசத்தலான கவிதை.. ஜூப்பரு.

    ReplyDelete
  22. தங்கள் வலைப்பூ "தேன்கூடு" திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  23. ஒவ்வொரு மூன்றாவது வரியும் அழகு சேர்க்கிறது

    ReplyDelete
  24. ஆகா! மனைவி மீது என்ன காதல்!

    ReplyDelete
  25. அருமையான கவிதை நண்பரே.

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  26. நச் கவிதை நண்பரே...

    ReplyDelete
  27. //கூர்மையான விழிகளால்
    ‌அதிகம் பேசுவாள்
    சிலசமயம் மொழிகளால்...!//

    அதுதானே பெண்களின் சிறப்பு கவிஞரே.

    ReplyDelete
  28. //கூர்மையான விழிகளால்
    ‌அதிகம் பேசுவாள்
    சிலசமயம் மொழிகளால்...!//

    அதுதானே பெண்களின் சிறப்பு கவிஞரே.

    ReplyDelete
  29. //அவளின் புன்னகைகள்
    புதிராகவே இருக்கும்
    சிலசமயம் அழுகைகள்...!//


    அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுடுமா? புரியாத புதிரின் முழுவடிவும் பெண்களே.

    ReplyDelete
  30. அருமை அருமை, எனக்கு மட்டும் கல்யாணம் ஆயிருந்தா இத என் மனைவிக்கு காட்டலாம், இப்போ என்ன செய்ய? அது சரி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

    ReplyDelete
  31. அழகிய கவிதை.அருமை.

    ReplyDelete
  32. கூர்மை மொழியில் பிழிந்தெடுத்து
    நேர்மை வழியில் அதை இணைத்து
    முத்து சுவடாக இனிக்கிறது கவிதை.

    வாழ்த்துக்கள்!

    மணம் ஓட்டும் போட்டாச்சு.

    ReplyDelete
  33. காதலியை மனைவியாகக் கொண்டவர்களைவிட
    மனைவியை காதலியாகக் காண்பவர்கள்தான்
    உண்மையான சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. நல்ல கவிதை. இந்த கவிதையை வர்ணிக்க இந்த கவிதையில் உள்ள வார்த்தைகளைவிட இன்னுமா வேறு வார்த்தைகள் உள்ளன? எழிலன்

    ReplyDelete
  35. //மனைவியாய் அவளை
    நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
    சிலசமயம் தாயாய்...!//

    ஆஹா அழகு

    தமிழ்மனம் 16

    ReplyDelete
  36. மிகவும் அருமையான கவிதை. மனை
    விக்கு மறியாதை.

    ReplyDelete
  37. அசத்தலான கவிதை

    ReplyDelete
  38. கவிதைக்கும் மனைவிக்கும் பாராட்டுக்கள்.

    மனைவிக்குக் கவிதை!!!!

    ReplyDelete
  39. அவளுக்கான கவிதை.. அழகு!

    ReplyDelete
  40. வணக்கம் பாஸ்,
    மனைவியின் மகத்துவத்தினை, கவிதை, சோகம், பரிதாபம், மகிழ்ச்சி, இரக்கம், காதல் முதலிய உணர்வுகளினூடே சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  41. அன்பின் வெளிப்பாடு மிகவும் அருமை. அதுவும் கவிதை வரிகளில் வெளிப்பட்ட விதம் அழகு. பாராட்டுகள்.

    ReplyDelete
  42. செல்வன் அவர்களின் இணைய தளத்தில்
    இந்தக் கவித்கையைப் பார்த்தேன்.யாத்தது யார் என்று கேட்டென். தெரியாது என்று சொல்லி
    விட்டார். இந்தக் கவிதை நாளை முதல் worldtamilnews.com என்ற
    இணைய வானொலியில் “கவிதை
    கேளுங்கள்” என்ற நிகழ்ச்சியில்
    ஒலிபரப்பாகவிருக்கிறது.

    அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!