23 August, 2011

தமிழ் புத்தாண்டு..! தமிழக அரசு அதிரடி மாற்றம்...



சித்திரை மாதம் முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வகை செய்யும் மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு' என்ற நடைமுறையை ரத்து செய்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மூலம், ஏற்கெனவே இருந்த வழக்கத்தின்படி, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு வகை செய்யப்படுகிறது.
இந்த மசோதாவை சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன் தாக்கல் செய்தார். 2011-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) நீக்க சட்ட முன்வடிவின் விவரம்:

2008-ம் ஆண்டு தமிழ் நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டமானது தமிழ் திங்களான தைத் திங்கள் முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும் என்று கூறுகிறது.

பொதுமக்களும், தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும், மற்றும் பல்வேறுபட்ட துறைகளில் உள்ள அறிஞர்களும் 2008-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு சட்டமானது தமிழ் திங்களான சித்திரை திங்களின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிவரும் வழக்க நடைமுறைக்கு மாறாக உள்ளது என்று கருத்துக்கூறி உள்ளனர்.

 தங்களது கருத்துக்களை வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாகவும் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் மேற்சொன்ன சட்டத்தை நீக்கம் செய்யுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்த் திங்களான சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாய்ந்த வழக்கத்தை மீட்டுத் தருமாறும் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே, மேற்சொன்ன சட்டமானது தமிழ் திங்களான தைத்திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பின்பற்றுவதை பொறுத்த அளவில் பொதுமக்களிடையே நடைமுறை இடர்பாடுகள், தடை, எதிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி உள்ளது. 
 
எனவே தமிழ் திங்களான சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் காலத்தால் முந்தைய வழக்கத்தை மேற்கொள்ள சட்டத்தை நீக்கம் செய்வதன் மூலம் மீட்டளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த சட்ட முன்வடிவு, மேற்காணும் முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விளைகிறது," என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இந்த மசோதா விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
ஆளாளுக்கு மாத்திக்கிட்டு இருங்க உண்மையான தமிழ்ப்புத்தாண்டு எப்பொழுது என்று தமிழ்களுக்கு மறந்துப்போக போகிறது..

29 comments:

  1. எனக்குத்தான் வடையா?

    நான் வெளியூர் என்பதால் கருத்துரை இல்லை.
    அப்பறம் நேரம் கிடைத்தால் கொஞ்சம் என்கடைப்பக்கமும் வந்து பாருங்க தலை.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள!

    ReplyDelete
  3. ஜெயின் 5 வருஷ ஆட்சியில கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை ரத்து பண்றதுலையே முடிச்சுடுவாங்க போல!!!

    ReplyDelete
  4. அம்மா வந்ததுக்கு பின்னாடி என்னமோ மாறிடுச்சு இது மாறாட்டி நல்லா இருக்காதுல்ல..

    ReplyDelete
  5. கூடிய சீக்கிரம் 2 தமிழ் புத்தாண்டு வந்தாலும் வரும் ரெண்டும் வெள்ளி/ திங்கள் கிழமையில வந்தா ஜாலி 2 நாளு லீவு கெடைக்குமே!!

    ReplyDelete
  6. அம்மா செய்தது நல்லதுதான்.

    ReplyDelete
  7. ஏனுங்க.. போன ஆட்சியில் பண்ணின கல்யாணம் இந்த ஆட்சியில் செல்லாதுன்னு ஏதாவது சட்டம் வருமா?
    டிஸ்கி: எனக்கு இல்லை நண்பர்கள் பாவம் கேட்கிறாங்க..

    ReplyDelete
  8. கலைஞர் தேவையில்லாத வேலை பார்த்தார்ன்னா - ஜெ வும் அதே வழியில்.

    ReplyDelete
  9. மக்கள் நிலை பரிதாபம் ...((

    ReplyDelete
  10. April foolன்னு நினைச்சேன்...

    ReplyDelete
  11. நல்ல செய்திதான்

    ReplyDelete
  12. என்னைக்கு வேணா மாத்திட்டு போறாங்க ! அன்னா ஞாயித்துக்கிழமை ல வராத மாதிரி பாத்துக்க`சொல்லுங்க!

    ReplyDelete
  13. எனவே தமிழ் திங்களான சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் காலத்தால் முந்தைய வழக்கத்தை மேற்கொள்ள சட்டத்தை நீக்கம் செய்வதன் மூலம் மீட்டளிக்க முடிவு செய்துள்ளது. /

    இரணடையும் அறிவித்து விட்டு வேறு வேல பார்க்கலாமே.

    ReplyDelete
  14. கடைசியில ஒரு பன்ச் வெச்சீங்க பாருங்க அற்புதம்!

    ReplyDelete
  15. //ஆளாளுக்கு மாத்திக்கிட்டு இருங்க உண்மையான தமிழ்ப்புத்தாண்டு எப்பொழுது என்று தமிழ்களுக்கு மறந்துப்போக போகிறது..//

    கஷ்டம்தான்!

    ReplyDelete
  16. இப்பவே கண்ண கட்டுது
    என்னவெல்லாம் மாறப்போகுதோ?????

    ReplyDelete
  17. புத்தாண்டே வேணாம் ஆள விடுடா சாமி!

    ReplyDelete
  18. ஏற்கெனவே சித்திரையில் இருந்த தமிழ்ப்புத்தாண்டை தாத்தா தை”க்கு மாற்றினார்,இவர் மீண்டும் சித்திரைக்கு மாற்றுகிறார்.மாற்றி,மாற்றி,மாற்றிக்கொண்டேயிருங்கள்,மாறாமல் மக்கள் அறிவு இருக்கும் வரை.

    ReplyDelete
  19. நல்ல தகவல் நண்பரே

    ReplyDelete
  20. யாரு துக்ளக்? முதல்ல புத்தாண்டு மாத்துனவரா?திருப்பி வெச்சவரா?

    ReplyDelete
  21. போட்டிக்கு போட்டி போடறாங்க...

    ReplyDelete
  22. காலம் வீணாகிறது கேட்பதற்கு ஆள் இல்லை.

    நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது இந்த ஜெயலலிதாவிற்கு வேர வேலை இல்லையா?

    பட்டி தொட்டிகளில் வறுமையை ஒழிக்க சொல்லி மனு கொடுத்தால்...

    பயபுள்ளைக என்ன விளையாட்டு விளையாடுதுக.

    எங்கே... கேப்டன்?
    உன் சிவந்த கண்கள் அக்னியாக தெரிந்ததால் நாங்கள் உம்மை எதிர்கட்சி தலைவனாக்கினோம்.

    எதற்கு...? எரிப்பதற்கு.

    ReplyDelete
  23. மாற்றி மாற்றி ஓட்டுபோடு தமிழா
    மாற்றி மாற்றி ஆடுவாங்க தமிழா
    காற்று வீசும் பக்கம்தானே தமிழா
    காற்றாடி பறக்க வேண்டும் தமிழா

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. அருமையான தகவல் நன்றி சகோ பகிர்வுக்கு .என் தளத்திற்கும்
    வாருங்கள் .நிறைய ஆக்கம் காத்திருக்கின்றது உங்கள் வருகைக்காகா.
    நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  25. இனிமே சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டா..
    மகிழ்ச்சியான செய்தி,.

    நீண்ட காலமாக இருந்து வந்த குழப்பத்திற்குத் தற்போது தீர்வு கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  26. கலிங்கர் தமிழ் புத்தாண்டை மாற்றியது தவறான ஒன்று ... மாற்றுவதற்க்கு இவர் யார் .... நல்ல செய்தி சொல்லிருக்கீக நன்றி அண்ணா...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!