25 September, 2011

குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு 10 ஆயிரம் பரிசா.. அமைச்சரவை அதிரடி....



"மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: 

பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். 
கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார். (தினமலர்)

சில மாநிலங்களில் அரசே குடிப்பதற்க்கு தூண்டிவிடு இந்த சூழலில் இதுப்போன்று மதுவுக்கு எதிரான பிரச்சாரம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தொடரட்டு இந்த பணி...

இதை தமிழகத்தில் அறிவித்தால் எல்லா கணவரும் வடிவாங்குவாங்க போல...

24 comments:

  1. சாதாரணமாவே அடி தூள கிளப்புறாங்க!
    இப்ப அடிக்கு ஆயிரம் வேறையா?
    தாரை தப்பட்டைஎல்லாம் கிழிந்து தொங்கப்போகிறது.

    ReplyDelete
  2. இந்தியாவிலேயே மது விற்பனையில் முதலிடம் ஆந்திர அரசு என்று மார் தட்டிய அரசிடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை... மனைவியிடம் நீ பத்து அடி அடிச்சு 5000 ரூபா நீ எடுத்துக்க மீதி நான் எடுத்துக்கிறேன் என்று கணவன் டீல் போடாமல் இருந்தால் சரி

    ReplyDelete
  3. இதை தமிழகத்தில் அறிவித்தால் எல்லா கணவரும் வடிவாங்குவாங்க போல...//

    என்னது வடிவாங்குவாங்களா யோவ்...............!!!

    ReplyDelete
  4. அரசாங்கமே கடையை திறந்து வச்சிகிட்டு, அரசாங்கமே பரிசும் தருதா...?? நாசமா போச்சு போ....!!!

    ReplyDelete
  5. அட... மனைவிமார்களே... அடிச்சு தூள் கிளப்புங்க

    ReplyDelete
  6. அடப்பாவிங்களா என்னடா அநியாயம் இது

    ReplyDelete
  7. ////
    சசிகுமார் said... [Reply to comment]

    அடப்பாவிங்களா என்னடா அநியாயம் இது
    /////////

    கொஞ்சம் உஷாரா இருப்பா....

    ReplyDelete
  8. காசு கிடைக்கும் என்றால் பொண்டாட்டிக்கிட்ட எத்தனை அடியும் வாங்க நாராயணன் தயார்.

    ReplyDelete
  9. குடி அடி கொடுக்கும்!

    ReplyDelete
  10. நல்ல பதிவு , மனைவியும் குடித்து விட்டு அடிக்காமல் இருந்தால் சரி...

    ReplyDelete
  11. நல்ல பதிவு காதுக்க இனிமையான செய்தி...........

    ReplyDelete
  12. ஆகா...இனிமே குடிகாரங்களுக்கு வீட்டுக்குள்ளேயே ஆப்பா....

    ReplyDelete
  13. தல உனக்கு அடி உண்டா?ச்சீ ச்சீ குடி உண்டான்னு கேக்க வந்தேன் ட்ங்கு ஸ்லிப் ஆயிடுச்சு!ஹி...ஹி...

    ReplyDelete
  14. அமைச்சர் குடிச்சிட்டு பேசலையே?

    ReplyDelete
  15. //தல உனக்கு அடி உண்டா?ச்சீ ச்சீ குடி உண்டான்னு கேக்க வந்தேன் ட்ங்கு ஸ்லிப் ஆயிடுச்சு!ஹி...ஹி...//


    இது சூப்பரு..

    ReplyDelete
  16. அய்யோ அய்யோ இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ் ஊத்தியும் கொடுப்பாங்க கவுத்தும் விட்ருவாங்க ஹிஹி!

    ReplyDelete
  17. எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாடு, MLA வாழ்க. . .

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!