03 September, 2011

கண்டிப்பாக இவர்களை தூக்கிலிட வேண்டும்... எங்கே செல்கிறது நம்நாடு...


இந்திய பார்லிமென்ட் வரலாற்றில், முதல் முறையாக விசாரணைக்காக, பார்லிமென்டில் நிறுத்தப்பட்டு, சாதனை படைத்தவராகிவிட்டார் கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென். வேலியே, பயிரை மேய்ந்த கதையாக, குற்றம் புரிபவர்களை தண்டிக்கும் நீதிபதியே, குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவது காலத்தின் கோலம். ஊழல் என்ற கறையான் இன்று நீதி துறையையும் விட்டுவைக்க வில்லை.

"இவர் நிதியை கையாடல் செய்தவர், நீதி விசாரணைகளில் தவறான தகவல்களை தந்தவர்' என, இவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நம் இந்திய அரசியல் சாசனப்படி, தவறு செய்யும் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் பதவிகளை பறிக்கும் அதிகாரம் பார்லிமென்டிற்கு மட்டுமே உண்டு.ஊழல்களின் விசுவரூபங்கள், புற்றீசல் போல் வெளிவந்து, அவைகளுக்கு கோர்ட் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், நீதிபதி ஒருவரே, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, பார்லிமென்டில் விசாரிக்கப்படுவது, நம் இந்திய ஜனநாயக தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி.


அன்னா ஹசாரேவின் தார்மீக போராட்டம், இந்திய அரசியல் களத்தை தூய்மைப் படுத்தி, லஞ்ச லாவண்யம் இல்லாததும், ஊழல்கள் அற்றதுமான ஒரு எதிர்காலத்திற்கு வித்திட்டுள்ள வேளையில், சவுமித்ரா சென் போன்றோர், நீதித்துறையில் ஊழல் களுக்காக அடையாளம் காட்டப்படுவது, அன்னாவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதே வேளையில், குற்றப்பின்னணியுடைய சவுமித்ரா சென் எப்படி நீதிபதியானார் என்ற வினாவையும் எழுப்பியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறைகளையும், மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


அதற்கு, தேசிய நீதித்துறை கமிஷன், ஒரு அமைப்பை உருவாக்கி, நீதிபதிகள் நியமனங்களை, முறையாக கையாளப்படுத்துவதே, எதிர்காலத்தில், சவுமித்ரா போன்ற ஊழல் பேர்வழிகள் நீதி தேவதையின் கோவில்களில், பூசாரிகளாய் நடமாடுவது தடுக்கப்படும்.

அரசிடம் பயம் இல்லையென்றால்... நம்முடைய சட்டதிட்டங்கள் மீது சிலர் அஜாக்கிரதை காட்டும் போது அதை வலுப்படுத்த நாடும் சமூக ஆர்வளர்களும் முன்வரவேண்டும். ஊழல் மட்டும் மல்ல நீதிமருப்பும் ஒரு வித சமூகக்கொடுமையே... இன்னும் என்ன என்ன சமூக அவலங்களை நான் காணப்போகிறோமோ..

ராஜீவ் கொலைக்கு தனக்கே ‌ தெரியாமல் உதவி செய்து விட்ட தமிழருக்கு தூக்கு என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் இந்தேசத்தில் உண்மையான தூக்கிலிடப்படவேண்டியவர்கள் இவர்கள்தான்... ஊழல் புரிந்து விட்ட சுகபோகங்களுடன் இவர்கள் சிறையில் கழிப்பதை விட நான் எதிர்ப்பார்க்கும் முடிவைத்தான் தாங்களும் வழிமொழிவீர்கள் என்று நம்புகிறேன்....

தங்கள் வருகைக்கும் வாக்கிற்க்கும்.. கருத்திற்க்கும் மிக்க நன்றி... மக்களே...

44 comments:

  1. சட்டத்தை கண்ணுறக் காக்கவேண்டியவர்களே
    மீறும்போது சாமானியர்களை சொல்லி என்ன பயன்,
    வேலியை பயிர் தாண்டுகையில் அதை வெட்டி விடுவதே நல்லது,
    இந்திய சாசனச் சட்டம் நன்கு அறிந்தவர்கள் அல்லவா????
    அதுதான் துணிந்து ஆட்டம் போடுகின்றனர்...
    தண்டனை கொடுமையாக இருக்க வேண்டும்
    அடுத்து குற்றம் புரிவோருக்கு பாடமாக அமைய வேண்டும்.

    ReplyDelete
  2. இவர்களை போடுங்கள் தூக்கில் என்று சொல்லவில்லை..ஆனால் ஆயுள் தண்டனையாச்சும் கொடுங்கள்!!

    ReplyDelete
  3. விஷயங்களுக்கு நன்றி...அது ஏன் கடைசில ஒரு குட்டு....!

    ReplyDelete
  4. நல்ல பதிவு பாஸ்!

    ReplyDelete
  5. உண்மையான வார்த்தைகள் உள்ளது உங்கள் பதிவில் உங்களோடு நானும் முடிவை ஆதரிக்கிறேன்....

    ReplyDelete
  6. இவர்களே தூக்கு கயிற்றுக்கு சொந்தக்காரர்கள்.

    ReplyDelete
  7. மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது .அது ஒழிக்கப்படவேண்டும் .

    ReplyDelete
  8. ஸலாம் சகோ.சௌந்தர்,

    நிரூபிக்கப்பட்ட ஊழல்வாதிக்கு அரசின் லோக்பாலில் அதிக பட்ச தண்டனை 10 வருடங்கள் என்றால்...

    அண்ணா ஹசாரேவின் ஜன்லோக்பாலில் அதிகபட்சமோ ஆயுள் தண்டனை..!

    ஆனால்...

    சகோ.செளந்தர்,

    "திருட்டுக்கு கை வெட்டும் தண்டனையே" காட்டுமிராண்டித்தனம் என்று எதிர்க்கப்படும் இவ்வுலகில்...

    ஊழலுக்கு 'உயிர்வெட்டு தண்டனை' (தூக்குத்தண்டனை) கேட்கிறீர்கள்..!

    ReplyDelete
  9. ///////
    நண்டு @நொரண்டு -ஈரோடு said... [Reply to comment]

    மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது .அது ஒழிக்கப்படவேண்டும் .
    ///////////


    ஒருவரை கொலை செய்தல் என்பது ஒரு கொலைக்குற்றம் இது ஒருவருக்கு எதிராக நிகழ்ந்த அநியாயம்...

    ஊழல் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு எதிராக செய்த தூரகம் கொலைக்கு மன்னிப்பு வழங்கி விடலாம்...

    தூரோகத்திற்க்கு ஆயுள் தான் சரியானதா...

    மரண தண்டனை என்பது கொடுமைதான் ஆனால் அது எல்லா விஷயத்தில் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று என் மனம் நினைக்கவில்லை....

    சில விஷயங்களில் கண்டிப்பாக அதிகப்பட்ச தண்டனை இருக்க வேண்டும்...

    ReplyDelete
  10. /////////
    ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said... [Reply to comment]

    ஸலாம் சகோ.சௌந்தர்,

    நிரூபிக்கப்பட்ட ஊழல்வாதிக்கு அரசின் லோக்பாலில் அதிக பட்ச தண்டனை 10 வருடங்கள் என்றால்...

    அண்ணா ஹசாரேவின் ஜன்லோக்பாலில் அதிகபட்சமோ ஆயுள் தண்டனை..!

    ஆனால்...

    சகோ.செளந்தர்,

    "திருட்டுக்கு கை வெட்டும் தண்டனையே" காட்டுமிராண்டித்தனம் என்று எதிர்க்கப்படும் இவ்வுலகில்...

    ஊழலுக்கு 'உயிர்வெட்டு தண்டனை' (தூக்குத்தண்டனை) கேட்கிறீர்கள்..!

    /////////////


    திருட்டுக்கு மன்னிப்புகூட வழங்கலாம் ஏன்னென்றால் திருட்டு என்புது தன்னுடைய அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு சாமானியன் செய்வது...

    ஆனால் ஊழல் என்பதும் அதிகார துஷ்பிரயோகம் என்பதும் ஒரு படித்த பதவியில் இருக்கும் ஒருவன் தெரிந்தே மேற்க்கொள்வது.. அதனால்தான் எனக்கு இந்த கோவம்...

    ReplyDelete
  11. //திருட்டு என்புது தன்னுடைய அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு சாமானியன் செய்வது...//---???

    அதிர்ச்சிகரமாக இருக்கிறது உங்கள் வார்த்தைகள்.

    திருட்டில் பறிகொடுத்த பாதிக்கப்பட்டவன் மேல் அக்கறை அற்ற... திருட்டை மன்னிக்கும் உங்கள் மனோபாவம் ஊழலை மன்னிக்காததற்கு...

    //ஊழல் என்பதும் அதிகார துஷ்பிரயோகம் என்பதும் ஒரு படித்த பதவியில் இருக்கும் ஒருவன் தெரிந்தே மேற்க்கொள்வது..//---இதுதான் காரணமா..?

    ஊழலுக்கும் திருட்டுக்கும் என்ன வித்தியாசம்..?

    எத்தனை ரூபாய்க்கு கீழே திருடினால் அது திருட்டு..?

    எத்தனை ரூபாய்க்கு மேலே திருடினால் அது ஊழல்..?

    தங்களின் "அத்தியாவசியத்தேவைகள்" என்பதன் வரையறை என்ன..?

    எதற்காகவெல்லாம் உங்களிடம் ஒருவன் திருடினால் நீங்கள் மன்னிப்பீர்கள்..?

    ReplyDelete
  12. ராஜீவ் கொலைக்கு தனக்கே ‌ தெரியாமல் உதவி செய்து விட்ட தமிழருக்கு தூக்கு என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் இந்தேசத்தில் உண்மையான தூக்கிலிடப்படவேண்டியவர்கள் இவர்கள்தான்... //

    இவர்களேதான்.

    ReplyDelete
  13. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~


    திருட்டில் பறிகொடுத்த பாதிக்கப்பட்டவன் மேல் அக்கறை அற்ற... திருட்டை மன்னிக்கும் உங்கள் மனோபாவம் ஊழலை மன்னிக்காததற்கு...

    திருட்டை மன்னிக்க வேண்டும் என்பதை கூட தாங்கமுடியாத உங்களுக்கு ஊழலை சாதாரணமான எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்...

    ReplyDelete
  14. சராசரி குற்றவாளிகளுக்குரிய தண்டனை இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் ...

    ReplyDelete
  15. ஒரு திருட்டை செய்பவனுக்கு காவல் நிலையத்திலும் சிறையில் நடக்கும் நடவடிக்கைக்கும்...

    கோடிகணக்கில் ஊழல் செய்பவருக்கு அதே காவல் நிலையத்திலும் சிறையிலும் தரப்படும் நடவடிக்கைகளுக்கும் நிறைய வித்தியசம் இருக்கிறது...

    திருட்டை சரி என்று சொல்லவில்லை...
    ஒரு கோழி திருடியவனுக்கு கிடைக்கும் தண்டைனைகள் கூட ஒரு கோடி திருடியவனுக்கு கிடைப்பதில்லை

    அதுதான் என் ஆதங்கம்...

    ReplyDelete
  16. //திருட்டை மன்னிக்க வேண்டும் என்பதை கூட தாங்கமுடியாத உங்களுக்கு ஊழலை சாதாரணமான எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்...//

    எப்படி சகோ... நான் ஊழலை ஆதரிப்பவன் என்று முடிவு கட்டிவிட்டீர்கள்..!

    அடப்பாவமே..!

    நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி இருந்தால் நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்திருக்கும்.

    ஊழலுக்கு மரண தண்டனை வேண்டும் என்கிறீர்கள்.

    அண்ணா ஹசாரே கூட சொல்லாத 'இந்த தண்டனை சரியா' என்றுதான் கேட்டேனே அன்றி... தண்டனை தரக்கூடாது என்றோ ஊழலை ஆதிரிக்கிறேன் என்றோ எப்படி புரிந்து கொள்கிறீர்கள்..?


    திருட்டை மன்னிக்கும் மனோபாவம் கொண்ட உங்களிடம்
    இன்னொரு கேள்வி...

    உங்களிடம் ஒருவன் எத்தனை ரூபாய் திருடினால் மன்னிப்பீர்கள்..?

    ReplyDelete
  17. //எதிர்காலத்தில் இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்யும் நடைமுறைகளையும், மறுபரிசீலனை செய்ய வேண்டும்.//

    ஆமாம். நிச்சயமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
  18. சகோ...

    இக்கேள்விக்கு யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்.

    "உங்களிடம் ஒருவன் எத்தனை ரூபாய் திருடினால் மன்னிப்பீர்கள்..?"

    ReplyDelete
  19. நண்பரே, இந்தத் தூக்குத்தண்டனை தொடர்பாக பல மாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன என்பதில் வியப்பில்லை. லண்டனில் நிகழ்ந்த கலவரங்களுக்குப் பிறகு, அங்கு மீண்டும் மரண தண்டனை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆக, இந்த மரணதண்டனை குறித்த கருத்துக்கள், அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ காணப்படுவதுதான் முரண்பாடாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக மரண தண்டனை என்பதே இருக்கக் கூடாது என்பதே ஒருமித்த கருத்தாக மலர வேண்டும்.

    ReplyDelete
  20. நண்பரே..

    இவர்களுக்கு ”சிட்டிசன்” ஸ்டைலில் தீர்ப்பு வந்தால் வரவேற்கும் முதல் ஆளாக இருப்பேன்

    இவருக்கான தண்டனை கடுமையாகப்பட வேண்டும்

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  21. //அன்னாவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.//

    என்ன வெற்றி? ஜன்லோக்பால் சட்டம் அமலுக்கு வந்து விட்டதா? :-)

    அண்ணா ஹஜாரேயின் ஜன் லோக்பால் வந்தால் கூட, ஊழலுக்கு மரணதண்டனை கிடையாது. ஆனால், அவர் பின்பற்றும் சத்ரபதி சிவாஜிக்கு அப்படியொரு கொள்கை இருந்தது. : -)

    ReplyDelete
  22. நானும் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  23. சூப்பர் பதிவு சௌந்தர்

    ஆனா தூக்கு தண்டனை கூடாதுன்னு சொல்லுறாங்க, அது கூட சரி தான் ஏன்னா அது கொஞ்ச நேர வலி, பேசாம
    சிங்கப்பூர் ஸ்டைல்-ல ஒரு ரூபாய் ஊழல் பண்ணா 1 பிரம்படி அப்பிடி வச்சுக்குலாம் உயிர் போகாது ஏண்டா உயிர் போகலைன்னு வலிக்கிற அளவுக்கு வலி இருக்கும் எப்புடி?

    ReplyDelete
  24. தூக்கு தண்டனைக்கு தூக்கு போடுங்கையா.. இஞ்ச அந்த தண்டனையே ரத்தாகி எவ்வளவோ வருசமாச்சு.. இலங்கை இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் குற்றங்கள் குறைவே.. அடிமட்டத்தில் இருந்து நல்ல கல்வியை கொடுத்து வந்தால் கட்டாயம் குற்றங்கள் குறையும் .. படிச்சவன் பாவம் செய்தால் ஐய்யோன்னு போவான்..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  25. சபாஷ் நல்ல கேள்விதான்..

    ReplyDelete
  26. @முஹம்மத் ஆஷிக்_citizen of world
    @சேட்டைக்காரன்

    சிறந்த கருத்துக்கள்.

    ReplyDelete
  27. நியமாக தண்டனை இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் ...

    ReplyDelete
  28. என்ன கொடுமை சரவணன்.............நச்சுனு ஒரு பதிவு.

    ReplyDelete
  29. தண்டிக்கப்படவேண்டியவர்கள்!

    ReplyDelete
  30. சகோதரம் எது எப்படியிருந்தாலும் மரணதண்டனை தீர்வாகாது. குற்றவாளியை தண்டிக்கலாமே ஒழிய ஒரு குற்றவளி உருவாகுவதை தடுக்க முடியாது. காரணம் உப்பு சாப்பிடுபவன் இனிக்கும் என்று நினைத்து சாப்பிடுவதில்லை.

    ReplyDelete
  31. இந்த வழக்கிலிருந்து அவர் தப்பிக்க எவ்ளோ லஞ்சம் தர போறாரோ?

    ReplyDelete
  32. அடபோங்கப்பா,அப்பிராணி,ஏமாளிகளைத்தான் துாக்கில்போடுவோம்.இவர்களையெல்லாம் துாக்கில் போடமாட்டோம் இவுங்களெல்லாம் கெட்டாலும் மேன்மக்கள்கள்.

    ReplyDelete
  33. தப்பில் சின்ன தப்பு பெரிய தப்புனு என்ன வேண்டி கிடக்கு.

    பசிக்கு திருடுகிறவனை மன்னிக்கலாம் ருசிக்கு திருடுகிறவனை எப்படி மன்னிக்க முடியும்?

    நான் வியாபாரத்தில் ஊழல் செய்திருந்தால் என்னை சிறையில் அடையுங்கள்.

    நான் கல்வி துறையில் ஊழல் செய்திருந்தால் என்னை நாடு கடத்துங்கள்.

    நான் நீதி துறையில் ஊழல் செய்திருந்தால் என்னை தூக்கில் இடுங்கள்.

    காரணம் முதலில் செய்த குற்றத்திற்க்காக வியாபார ரீதியில்தான் பலர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அதற்கு சிறை தண்டனை போதும்.

    இரண்டாவது செய்த குற்றத்திற்க்காக என்னை நாடு கடத்தி விடுங்கள் இதற்குமேலேயும் நான் இங்கு இருந்தால் கல்வி என்பது இருண்டு விடும் குற்றமும் அதிகரித்து விடும்.

    மூன்றாவது ஊழலில் சிக்கிய என்னை கொன்று விடுங்கள் இதன் மூலம் பாதிக்கப்படவரின் மனம் குளிரட்டும்.

    நான் லஞ்சம் வாங்கி தவறான தீர்ப்பு கூறியதில் இரு குடும்பங்கள் தற்கொலை செய்துள்ளது.

    பல குடும்பங்கள் சீரழிந்து விட்டது இன்னும் எத்தனையோ மனிதர்கள் பைத்தியம் பிடித்து அழைகின்றார்கள் நான் கொல்லப் படுவதின் மூலம் ஒரு வேளை இவர்களின் மனம் குளிரலாம்.

    சகோ ஆசிக்கின் கருத்து என்னவென்றால் இஸ்லாமிய சட்டத்தில் திருடியவனின் கையை வெட்டச்சொல்லி இஸ்லாம் கட்டளை இடுகிறதே...

    இதை விட காட்டுமிராண்டித்தனம் வேறு எங்கேயும் கிடையாது என்று சில பேர்கள் கூறுகிறார்கள்.

    அதே நேரத்தில் பசிக்காக ஒருவன் திருடியால் இஸ்லாம் அவனை தண்டிக்காது

    மாறாக அவனை தத்தெடுத்து பசியை போக்குவதற்க்கான வழியை காண்பிக்கும்.

    நான் ஒரு ஏழை ரொம்ப கஷ்ட்டமான வாழ்க்கையில் ஒரு சிறிய அற்ப்ப வருமானத்தில் எனது குடும்பத்தை ஓட்டிகொண்டும் ஒரு சாதாரன மனுஷன்.

    இரு சகோதரிகளின் திருமண செலவிற்கு வழியில்லாமல் எனது சொந்த வீட்டை விற்று எனது சகோதரிகளின் திருமண செலவிற்க்காக மூன்று லட்சம் தோது பண்ணி வழியில் வந்து கொண்டு இருக்கும் போது எனது பணப்பையை ஒருவன் அபகரித்துகொண்டு ஓடி விட்டான்.

    மனம் தளர்ந்து மயக்கம் அடைந்து தள்ளாடி எனது வீட்டிற்கு வந்து நிலவரத்தை எனது தாயிடமும் எனது சகோதரிகளிடமும் சொன்ன போது...

    எனது தாயின் இதயம் நின்று போயிவிடுகிறது எனது சகோதரியின் வாழ்க்கையும் கேள்வி குறியாகிவிடுகிறது என்னை இந்த சூழ் நிலைக்கு தள்ளிய அந்த திருடனை என்ன செய்ய வேண்டும்?

    நீங்களே சொல்லுங்கள்.

    ReplyDelete
  34. @அந்நியன் 2///சகோ ஆசிக்கின் கருத்து என்னவென்றால் இஸ்லாமிய சட்டத்தில் திருடியவனின் கையை வெட்டச்சொல்லி இஸ்லாம் கட்டளை இடுகிறதே...

    இதை விட காட்டுமிராண்டித்தனம் வேறு எங்கேயும் கிடையாது என்று சில பேர்கள் கூறுகிறார்கள்.

    அதே நேரத்தில் பசிக்காக ஒருவன் திருடியால் இஸ்லாம் அவனை தண்டிக்காது

    மாறாக அவனை தத்தெடுத்து பசியை போக்குவதற்க்கான வழியை காண்பிக்கும்.///

    ---சரியான கருத்தை கூறினீர்கள் சகோ.அந்நியன். மிக்க நன்றி.
    -----------------------------------

    என்னால் திருட்டையும் ஊழலையும் வேறுபடுத்தி பார்க்க இயலவில்லை.

    ஒரு முதலாளி தன் தொழிலாளிக்கு உணவு சாப்பிடக்கூட காசும் நேரமும் தராமல் வேலை வாங்குகிறான் எனில், அங்கே அதற்குரிய காசையும் நேரத்தையும் ஊழல் செய்து முதலாளிக்கு தெரியாமல் நிறைவேற்றிக்கொண்டால்... அது அனுமதிக்கப்பட்டதே. ஏனெனில், இங்கே தண்டனைக்குட்படுத்த வேண்டியது முதலாளியே.

    அதேநேரம், அனைத்து வசதிகளையும் செவ்வனே செய்து கொடுத்த நிலையில் ஒருவன் ஊழல் செய்கிறான் எனில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    சரி... தண்டனை என்றால் என்ன தண்டனை. சகலரையும் தூக்கில் தொங்க விடுவதா..?

    இல்லை.

    என்னமாதிரியான ஊழல் அது என்பது விசாரிக்கப்பட வேண்டும். ஓர் அப்பாவிக்கு இன-மொழி-மத-சாதி துவேஷத்தாலோ அல்லது பணத்துக்கோ தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனத்தெரிய வந்தால்... நிரூபிக்கப்பட்டால்... நிச்சயமாக அது கொலைக்குற்றம்.
    இந்த நீதிபதிக்கு தூக்குத்தனடனைதான் வழங்க வேண்டும் என்பேன்.

    வேறு ஏதாவது விஷயத்தில் வேண்டுமென்றே ஊழல் கொண்ட தீர்ப்பு வழங்கப்படுமேயானால் அந்த தீர்ப்பு ஒருவரின் இயற்கையான இறப்புக்கு காரணமாகி விட்டது என்றால் கூட... இந்த ஊழலுக்கு மரணதண்டனை வழங்கப்படுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

    இதேபோலத்தான் அரசியல்வாதிகளின் அதிகாரிகளின் ஊழலும்.

    ஆக... ஊழல் எப்படிப்பட்டது என்ன விளைவை ஏற்படுத்தியது என்று பார்த்து அதன் அடிப்படையில் தண்டனை வேண்டுமே அன்றி பொத்தாம்பொதுவாக மரணதண்டனை என்று சொல்வதில் உடன்பாடு இல்லை எனக்கு.

    -----------------------------------

    நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.

    //"உங்களிடம் ஒருவன் எத்தனை ரூபாய் திருடினால் மன்னிப்பீர்கள்..?"//

    ---பதில்: "திருடியவர் யார்... எதற்காக திருடினார்... காரணம் என்ன என்று ஆராய்ந்து... பார்த்தால்தான் மன்னிப்பதா தண்டிப்பதா-என்ன தண்டனை என்று கூற இயலும்." --என்று சொல்ல வேண்டும்.

    மாறாக....

    பொத்தாம் பொதுவாக "பத்து ருபாய் திருடினால் மன்னிப்பேன்" என்றால்... அதுதான் இந்திய அளவில் அனைவரின் கருத்து என்றால்... ஒரு அரசியல்வாதி இந்திய மக்கள் தொகையான 120 கோடி X 10 ருபாய் = 1200 கோடி ரூபாய் ஊழல் செய்யலாமா..? மன்னிப்பீர்களா..? என்று நான் கேட்க இருந்தேன்..!

    என்னால் திருட்டையும் ஊழலையும் வேறுபடுத்தி பார்க்க இயலவில்லை.

    ReplyDelete
  35. அன்பின் சௌந்தர் - கோபம் புரிகிறது. ம்ம்ம்ம்ம் மந்தையில் ஒரு கருப்பாடு புகுந்து விட்டது. கண்டு பிடித்து தண்டனை கொடுக்கட்டும் - உச்ச பட்ச தண்டனையாகவே வழங்கட்டும் - தூக்குத் தண்டனை எல்லாம் வேண்டாம். நட்புடன் சீனா

    ReplyDelete
  36. வேலியே பயிரை மேய்ந்தால்
    வேடிக்கைப் பார்க்க இயலாது
    ஆனால் இனி தூக்கு என்பதே
    வேண்டாமே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. உங்கள் கருத்தை நிச்சயமாய் வழிமொழிகிறோம் சௌந்தர்.

    ReplyDelete
  38. சபாஷ் முஹம்மத் ஆஷிக்_citizen of world நான் உங்கள் கருத்தை 100% ஆதரிக்கிறேன். நாம் பொதுக் கருத்தாக ஒன்றை நினைத்து, அது நியாயதர்மத்திற்க்கு விரோதமாயிருந்தாலும், அதை ஒட்டி பேசுவது தவறு.

    திருடனை நியாயப்படுத்துவது, வழிபாதையை ஆக்கிரமிக்கும் கடைகள், இப்படி நாம் பல விசயங்களை முன்னோக்கிய‌ பார்வை என நினைத்து, அவர்கள் மீது கருணை கொள்வதாய் நினைத்து, தவறான நிலைபாடை எடுக்கிறோம்.

    இது நான் அந்த (திருடன், வழிபாதை வியாபாரி) நிலையில் இல்லை என்பதால் தோன்றியதல்ல. என் போன்றவரை அப்படி குற்றம் சொன்னால், இவர்களை ஆதரிப்பர்கள் உணரவேண்டியது, திருடனின் பசி நிலைக்கு திருட்டுக் கொடுத்தவன் காரணமாயில்லாத போது நஷ்டப்பட்டு நிற்க வேண்டிய அவசியம் என்ன? இயற்கை நீதியை, கருணை என்ற பெயரில் வளைக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவில்லாது போய் விடும்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!