07 September, 2011

எரித்துவிடலாம் என் கவிதை தாள்களை...



ணவைத்தேடி உழலுகின்ற வாழ்க்கை
இன்னும் இருக்கிறது இங்கு...!

ச்சங்களிலும் மிச்சங்களிலும்
தொலைத்துவிட்ட நிம்மதியை
கிளறிக்கொண்டிருக்கும் மனிதப் பட்சிகள் 
ஏராளம் ஏராளம்...

தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
இன்னும் தீர்ந்தப்பாடில்லை
நம் தேசத்தில்...

ற்போதைக்கு...
இரவலாய் கிடைத்த அரிசியை
கொதிக்க வைக்க ஆவலாய் இருக்கும்போது...

ர விறகை பற்ற வைக்க 
ஊதியே வலியை உணரும்
அந்த ஏழை உதடுகளுக்காக
எரிந்து விடாதோ...?

என் கவிதை தாள்...

தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி...!

37 comments:

  1. நம் நாட்டில் பசிப்பிணி மருத்துவர்கள் சுற்றுலா போய்விட்டார்கள் நண்பா.

    இப்போது இருக்கும் வள்ளல்கள் எல்லாம்

    தொலைக்காட்சியிலும் அதன் செய்திகளிலும்
    திரைப்படங்களிலும் தான் கொடை கொடுக்கிறார்கள்.

    சமூக அவலத்தை அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. ஏழ்மையின் உச்சத்தை யாராலும் இவ்வளவு எளிமையாக சொல்லுவது கணினமே..
    பாராட்டுகள் சகோ..

    ReplyDelete
  3. கொடிது கொடிது இளமையில் வறுமை....கவிதை கலங்க வைக்குதுய்யா!

    ReplyDelete
  4. கடைசி பத்தி கலங்க வைக்கிறது

    ReplyDelete
  5. வறுமையை, வாழ்க்கையை சொன்ன கதை.

    ReplyDelete
  6. வறுமையின் உச்சம் உங்கள் கவிதையில்...

    ReplyDelete
  7. //தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
    இன்னும் தீர்ந்தப்பாடில்லை
    நம் தேசத்தில்...//


    இது எனக்குப் புரியவில்லை. சற்று விளக்க முடியுமா???

    ReplyDelete
  8. //ஈர விறகை பற்ற வைக்க
    ஊதியே வலியை உணரும்
    அந்த ஏழை உதடுகளுக்காக
    எரிந்து விடாதோ...?
    என் கவிதை தாள்...//


    நச் வரிகள்.

    ReplyDelete
  9. /////////
    இந்திரா said... [Reply to comment]

    //தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
    இன்னும் தீர்ந்தப்பாடில்லை
    நம் தேசத்தில்...//
    ///////////

    அரிசியை கடன்வாங்கி பார்த்திருப்போம்
    கிராமங்களில் தீப்பெட்டிக்கூட இல்லாதவர்கள் பக்கத்து வீட்டில் எரியும் அடுப்பிலிருந்து தீயை கொண்டுவாருவார்கள்...

    அப்படி ஒரு அர்த்தத்திலும்..

    சமைப்பதற்க்கான பொருட்கள் இருந்தால்தான் அடுப்பு பற்றவைக்கமுடியும் ஆனால் உணவு சமைக்க அரிசியில்லாத சூழலில் கடன் வாங்க வேண்டிய அல்லது யாசகம் கேட்க வேண்டிய சூழல் இருக்கிறது...
    அப்படி யாசகம் பெற்று பொருட்களை வாங்கியப்பின் தான் அடுப்பு மூட்ட செய்வார்கள்....

    பொருளை கடன் வாங்கும் தேசம் என்று சொல்லவும்.. அல்லது பொருள் வாங்கினால் எரியும் அடுப்பை பொருள்படுத்தவும்
    தீயை கடன்வாங்கும் அடுப்புகள் என்று குறிப்பிட்டுள்ளேன்...

    ReplyDelete
  10. எறிந்து கொண்டிருக்கும் மனங்கள் பொறுத்திருப்பது
    பொறுமை இல்லை,
    வெடிக்கும் பொழுது
    பட்டாசாய் இராமல்
    எரிமலையாய் மாறுவதர்க்கே..

    ReplyDelete
  11. நல்லதொரு விளக்கம்.
    நன்றி.
    பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  12. எச்சங்களிலும் மிச்சங்களிலும்
    தொலைத்துவிட்ட நிம்மதியை
    கிளறிக்கொண்டிருக்கும் மனிதப் பட்சிகள்
    ஏராளம் ஏராளம்...

    வறுமையின் உச்சத்தை விளக்கிய
    கவிதை வரிகள் அருமை

    ReplyDelete
  13. எரிந்து விடாதோ...?
    என் கவிதை தாள்...//

    செம டச்சிங்கான வரிகள்...!

    ReplyDelete
  14. கவிதை கண் கலங்க வச்சிருச்சே மக்கா...

    ReplyDelete
  15. அருமையான படைப்பு. . .சகா. . .

    ReplyDelete
  16. //தீயை கடன்வாங்கும் அடுப்புகள்
    இன்னும் தீர்ந்தப்பாடில்லை
    நம் தேசத்தில்...//


    படித்ததும் மனம் எழுந்து கிட்ட ஆரம்பித்தது.
    பிணிக்கு மருந்துண்டு
    பசிப்பிணிக்கு மருந்துண்டா??
    ஏழ்மையின் உச்சம் பசிக்கொடுமை.
    களையவேண்டும்.
    கவிதை போற்றுதற்குரியது.

    ReplyDelete
  17. //
    தற்போதைக்கு...
    இரவலாய் கிடைத்த அரிசியை
    கொதிக்க வைக்க ஆவலாய் இருக்கும்போது...

    ஈர விறகை பற்ற வைக்க
    ஊதியே வலியை உணரும்
    அந்த ஏழை உதடுகளுக்காக
    எரிந்து விடாதோ...?
    என் கவிதை தாள்.///
    நெஞ்சை தொட்ட வரிகள்.நாங்களும் எங்கள் ஊரில் இதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளோம் சகோ

    ReplyDelete
  18. இதயம் கனக்கிறது. வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை,

    ReplyDelete
  19. ஈர விறகை பற்ற வைக்க
    ஊதியே வலியை உணரும்
    அந்த ஏழை உதடுகளுக்காக
    எரிந்து விடாதோ...?
    என் கவிதை தாள்...:///

    அருமையான கவிதைங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. மீசைக்கவியின் சினம் வார்த்தைகளில் தெரிக்கிறது. தரணியை எரிக்காமல் தாளினை எரித்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  21. //ஈர விறகை பற்ற வைக்க
    ஊதியே வலியை உணரும்
    அந்த ஏழை உதடுகளுக்காக
    எரிந்து விடாதோ...?
    என் கவிதை தாள்.//
    என்ன சொல்லிப் பாராட்ட?

    ReplyDelete
  22. நிதர்சனமான உண்மை

    ReplyDelete
  23. அவலத்தின் உச்சம்!
    அறிவிக்கும் அழகிய கவிதை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. உண்மை உண்மையிலேயே சுடுகிறது... இதுபோன்ற அவலங்கள் இன்னும் பல இடங்களில் இருக்கின்றன.... வறுமையை வார்த்தைகளிலேயே வடித்து விட்டீர்கள் மிகவும் அருமை

    ReplyDelete
  25. ஒருவருக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை எரித்திடுவோம் என்றான் பாரதி.
    ஆனால் இன்று பல வீடுகளில் அடுப்புக்கு பதில் அவர்களின் அடிவயிறு மட்டும் தான் எரிகிறது.. பசியால்..

    கவிதைக்கு வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  26. நல்ல கருப்பொருள், அருமையான சொல்லாட்சி, அணைந்துவிட்ட தீச்சாம்பலின் கீழ் அணையாத கனல் போல் அடக்கமாக ஒரு அடங்கா கோபம், வாழ்க !


    மரபுவழி வடிவக் கவிதைகளையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் !

    ReplyDelete
  27. "அந்த ஏழை உதடுகளுக்காக
    எரிந்து விடாதோ...?
    என் கவிதை தாள்..."அருமை அன்பரே !

    ReplyDelete
  28. //தீயைக் கடன் வாங்கும் அடுப்புகள்// எத்தனை வலி மிகுந்த வார்த்தைகள்! மூன்று வேளையும் தொடர்ந்து உணவு சமைத்தால் அடுப்பு ஏன் அணைந்துபோகிறது? கனன்றுகொண்டே இருக்குமே நீறு பூத்தாகிலும். பசிக்கொடுமையைப் பறைசாற்றும் வரிகள் ஒவ்வொன்றும் பதறவைக்கிறது மனத்தை! அதிலும் கடைசி பத்தி இன்னும் நெகிழவைக்கிறது. மனம் தொட்ட கவிதை.

    ReplyDelete
  29. எவ்வளவு முயன்றாலும் இது போன்ற அழுத்தமான கருத்துக்களை உமிழும் வார்த்தைகளால் என்னால் ஒரு கவிதை கூட எழுத முடியாது.
    மிக மிக சிறப்பு !!! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. மனதை அழுத்தும் வரிகள்..

    //உணவைத்தேடி உழலுகின்ற வாழ்க்கை
    இன்னும் இருக்கிறது இங்கு...!//

    உண்மை தான்.. ஆனால், உணவை வீணாக்குபவர்களும் இங்கு தான் இருக்கிறார்கள்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!