06 September, 2011

பிரதமர் நியமனத்தில் திமுக-வின் தலையீடு... விக்கிலீக் பரபரப்பு செய்தி


கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது' என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், "காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர்.
 
 அதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என, வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம்; தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.
மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க., ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார். இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 comments:

  1. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

    ReplyDelete
  2. அவருக்கு ஒண்ணுமே தெரியாது சார் அவர் ஒரு அடிமை எப்பிடி எல்லாம் கதைவிடுறாரு

    ReplyDelete
  3. அடுத்த முறை சோனியாவை முன்னிறுத்த காங்கிரஸ் கூட விரும்பாது. மீண்டும் மன்மோகனை நிறுத்தவே விரும்புவார்கள். அப்போது திமுக என்னச் சொல்லக்கூடும் என்று பார்க்கலாம்.( மூழ்கும் கப்பலில்...)

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  5. நாசமாப்போன அரசியல்ல இதெல்லாம் சகஜம் மக்கா...!!!

    ReplyDelete
  6. கதை வசனம் எழுத இன்னும் கரு கிடைக்கலை போலும்..

    ReplyDelete
  7. இந்த விகிலீஸ்காரங்க எப்படிதான் இந்த தகவல்களை எடுக்கிறாங்களோ?
    நல்ல பதிவு நண்பா.

    ReplyDelete
  8. இந்திய அரசியலில் எங்கையாவது தாத்தா கரக்டா எண்டர் ஆகிடுறாரில்ல.ஹி.ஹி.ஹி.ஹி.பாவம்யா மனுசன்.

    இன்று என் கடையில்
    (கில்மா)கற்பு உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?
    http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html

    ReplyDelete
  9. அரசியல்ல இதென்ன சாதாரணம்.

    ReplyDelete
  10. மன்மோகன் விவரமானவர்ந்னு அன்னிக்கே தாத்தாவுக்கு தெரிஞ்சிருக்கு... மன்மொஹனால் தான் இப்ப எல்லா தி.மு.க மந்திரிகளும் உள்ள இருக்காங்கன்னு என்னிக்கு சொல்லப் போறார்னு தான் காத்துகிட்டு இருக்கேன்... டண்டணக்கா தனக்க தக்கா

    ReplyDelete
  11. யாரா இருந்தா என்ன? இப்போதான் கூடா நட்பா ஆகிடுச்சே?

    ReplyDelete
  12. எல்லோரும் சொல்வது போல் இதெல்லாம் சகஜம்!

    ReplyDelete
  13. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இப்ப மட்டும் என்னவாம்?

    பேருக்குத்தான் மன்னு(சிங்) மற்றதெல்லாம் அந்த பொண்ணு.

    tamil manam 10

    ReplyDelete
  15. தங்கள் வலைப்பூவின் பதிவுகள் "தேன்கூடு" திரட்டியால் திரட்டப்படுகிறது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  16. ஆளாளுக்கு ஆட்டம் போடுராங்கைய்யா

    ReplyDelete
  17. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!