23 September, 2011

தடம்மாறுது தேமுதிக.., உள்ளாட்சியில் கூட்டணி அமைக்க காங்கிரஸிடம் திடீர் ரகசியப் பேச்சு


உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்தது.

பின்னர் சமரசப் பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து, இன்று எதிர்க்கட்சியாகியுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீட்டுக்காக கூட்டணிக் கட்சிகள் காத்திருந்த நேரத்தில் அத்தனை இடங்களுக்கும் அதிரடியாக தனது வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சியில் மூழ்கியது. தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டதால் என்ன செய்வது, எங்கு போவது, எப்படிப் போவது என்பது தெரியாமல் தேமுதிகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

தற்போது இடதுசாரிகளை மட்டும் அழைத்து அதிமுக பேசி வருகிறது. அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தேமுதிக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்புடன் ரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து வந்தது. ஆனால் திமுக திடீரென தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டதால் காங்கிரஸ் குழம்பிப் போய் நிற்கிறது. இரு கட்சிகள் சார்பிலும் யார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி திமுக, அதிமுகவால் திராட்டில் விடப்பட்ட காங்கிரஸும், தேமுதிகவும் திடீரென பேசத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்கள் கனிந்து, புதுக் கூட்டணி உருவாகுமா, அதில் இடதுசாரிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

17 comments:

  1. பாவம் கேப்டன் தனியாவே நிக்கலாம் அப்போதான் அவருடைய பலம் என்னன்னு அவருக்கும் தெரியும் நமக்கும் தெரியும்..

    ReplyDelete
  2. அம்மாவே பார்த்து ஒரு நல்ல வழிய காட்டி இருக்காங்க தனியா நின்னு உங்க பவரை காட்டுங்க அத விட்டுட்டு அந்த நாசமாபோன காங்கிரஸ் கூட கூட்டு வச்சா உங்களுக்கு பூட்டு கூட மிச்சமிருக்காது....

    ReplyDelete
  3. மாப்ள இது நடந்தா இது கூட்டணி இல்ல....இன்னொரு வேட்டணி ஹிஹி!....ஒன்னுத்துக்கும் உதவாத பசங்களோட ஒரு கள்ளு(!) வண்டி சேரப்போகுதா ஹிஹி!

    ReplyDelete
  4. கல்லைக் கட்டிக் கொண்டு
    கிணற்றில் விழபுபோகிறாரா
    கேப்டன் பாவம்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. கழட்டி விடப்பட்டவங்க கட்டிப் பிடுச்சுக்கிறாங்க!

    ReplyDelete
  6. காங்கிரசோடு விஜயகாந்த் கூட்டணி வச்சா அவர் கட்சி இருக்காது மக்கள் அதை விரும்பவும் மாட்டார்கள்....

    ReplyDelete
  7. அம்மாவே பார்த்து ஒரு நல்ல வழிய காட்டி இருக்காங்க தனியா நின்னு உங்க பவரை காட்டுங்க அத விட்டுட்டு அந்த நாசமாபோன காங்கிரஸ் கூட கூட்டு வச்சா உங்களுக்கு பூட்டு கூட மிச்சமிருக்காது..../// கரெக்டு ))

    ReplyDelete
  8. பாவம் கேப்டன்.

    வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..

    ReplyDelete
  9. போகட்டும்
    போய்பார்க்கட்டும்
    பட்டுத் தானே தெரியவேண்டும்...

    ReplyDelete
  10. ஓட்டிட்டேன்

    ReplyDelete
  11. அவங்க நடுத்தெருவில் நிக்கறதுக்கு துணை தேடுராங்கலாம் கேப்டன் என்ன செய்ய போறார்?பாப்போம்!

    ReplyDelete
  12. ஏதோ திமுக எதிர்ப்பு ஓட்டுல ஜெயிச்சு வந்தாரு.... இப்ப பழைய எடத்துக்கே போக போறாரு.... !

    ReplyDelete
  13. அத்தெல்லாம் வுடு தல!
    ரொம்ப நாளா பூங்கொத்த
    கையில புடிச்சுகினுகீறயே
    நீ யார்கூட கூட்டணிக்கு
    ப்ளான் பண்றப்பா?

    ReplyDelete
  14. தனியாகவே கச்சேரி செய்யலாம் தே.மு.தி.க

    ReplyDelete
  15. ///////
    ஷீ-நிசி said... [Reply to comment]

    தனியாகவே கச்சேரி செய்யலாம் தே.மு.தி.க
    /////////

    அதைதாங்க செய்யுது தற்போதைக்கு...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!