07 October, 2011

தன்னை மறந்த நிலையில் தான்...


தன்னை மறந்த நிலையில் தான்....
      ஒருவன் கவிதை எ‌ழுதுகிறான்      
      ஒருவன்  கழுத்தை அறுக்கிறான்
      ஒருவன் தீயிடுகிறான்
      ஒருவன்  தீமிதிக்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் சக்தி பெறுகிறான்
      ஒருவன் முக்தி பெறுகிறான்
      ஒருவன் வாழ்வை வெல்கிறான்
      ஒருவன்  மரணத்தை கொள்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் அமைதி இழக்கிறான்
      ஒருவன்  கோவம் கொள்கிறான்
      ஒருவன் சாபம் கொடுக்கிறான்
      ஒருவன்  நியாயம் மறக்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் வீடுதுறந்து துறவியாகிறான்
      ஒருவன்  தன்னை மறந்து துரோகியாகிறான்
      ஒருவன் காதலித்து பித்தனாகிறான்
      ஒருவன்  கடவுளின் பக்தனாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் போதி மரத்தடியில் ஞானமடைகிறான்
      ஒருவன்  மரத்தை வெட்டி பாவியாகிறான்
      ஒருவன் இம்சை செய்து இட்லராகிரான்
      ஒருவன்  அகிம்சை செய்து மாகாத்மாவாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் ஆசைக் கொண்டு திருடனாகிறான்
      ஒருவன்  காமம் கொண்டு காமூகனாகிறான்
      ஒருவன் சட்டம் இயற்றி மேதையாகிறான்
      ஒருவன்  சட்டைக் கழற்றி ஞானியாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் பணத்திற்காக கொலை செய்கிறான்
      ஒருவன்  நாட்டுக்காக உயிர் கொடுக்கிறான்
      ஒருவன் ஆட்சியேறி அடிமை செய்கிறான்
      ஒருவன்  அடிமையாயிருந்தே புரட்சி செய்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் நாட்டை துறந்து காடுபோகிறான்  (ராமாயணம்)
      ஒருவன்   சூதாடி சூழ்ச்சியில் விழுகிறான் (மகாபாரதம்)
      ஒருவன்  கொலைபழிக்கு ஆளாகிறான் (சிலப்பதிகாரம்)
      ஒருவன்  முல்லைக்கெல்லாம் தேர் கொடுக்கிறான்  (பாரி)

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் நபிகள் மீது கல்‌லெறிகிறான்
      ஒருவன்  ஏசுவை சிலுவையில் அறைகிறான்
      ஒருவன் சிலைகளை கல்லென்கிறான்
      ஒருவன்  சிவன் தலை மீதே கை வைக்கிறான்

      அனுமன் அமைதியாய் இருந்ததும்...
      ராவணன் மதி இழந்ததும்....
      மகாவீரர் அரண்மனையில் இருந்ததும்...
      ஆதிமனிதன் குரங்கில்  இருந்ததும்...
      அ‌லெக்சண்டர் ஆசைக் கொண்டதும்...
      சிவன் சக்தியை எரித்ததும்...
      கண்ணதாசன் மதுவில் இருந்ததும்...

தன்னை மறந்த நிலையில் தான்...     




 (மீள் பதிவு)

தேர்தல் பணி காரணமாகவே பதிவுகள் எழுத நேரம் போதவில்லை.
நண்பர்களின் பதிவுகளுக்கும்  வந்து வாசிக்க நேரமில்லை.
தவறாக என்ன வேண்டாம்...
 

22 comments:

  1. தன்னை மறந்த நிலையில்தான் ஒருவன்

    பதிவு போடுறான்!

    ReplyDelete
  2. தன்னை மறந்த நிலையில்தான்

    ஒருவன் ஓட்டுப் போடுறான்!

    ReplyDelete
  3. தன்னை மறந்த நிலையில்தான்


    ஒருவன் கமெண்டு போடுறான்!

    ReplyDelete
  4. தன்னை மறந்த நிலையில்தான்


    ஒருவன் மைனஸ் ஓட்டுப் போடுறான்!

    ஹா ஹா ஹா ஹா இப்படியெல்லாம் சொல்லலாம் போல! அருமையான தொகுப்பு சௌந்தர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நீர் நார்மலா இருக்கிறா இல்லையா முதல்ல அதை சொல்லும் ஒய்...??

    ReplyDelete
  6. செய்த தவறுகளை "தன்னை மறந்த நிலையில்" என்று சொன்னால் ஏற்க முடியுமா?

    ReplyDelete
  7. அய்யய்யோ நான் இல்ல..கவிஞ்சனுக்கு என்னமோ ஆயிடுச்சி!

    ReplyDelete
  8. கண்ணதாசன் டச்சிங்..

    கவிதை அருமை

    ReplyDelete
  9. //கண்ணதாசன் டச்சிங்..

    கவிதை அருமை//
    ரிப்பீட்டு

    ReplyDelete
  10. பரவாயில்ல மாப்ள நீ வேலைய கவனி இன்னும் ஒரு வாரம் தான் சம்பாதிக்க முடியும் ஹீ ஹீ

    ReplyDelete
  11. தன்னை மறந்த நிலையில் கவிதை போட்டுருக்கிறீர்

    அருமை

    ReplyDelete
  12. நல்ல தொகுப்பு சூப்பர் பாஸ்

    ReplyDelete
  13. தன்னை மறந்தால் என்னெல்லாம் நடக்குது?
    நன்று.

    ReplyDelete
  14. தன்னை மறக்க வைக்கும் கவிதைக்கு நன்றி .... என்னுடைய பதிவு 50 ... ஐ வந்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன் ...

    ReplyDelete
  15. தன்னை மறந்த நிலை எனச் சொல்லித் தப்பித்துக்கொள்வது இயலுமா ?

    ReplyDelete
  16. //ஒருவன் சட்டைக் கழற்றி ஞானியாகிறான்//

    நீங்க நித்யானந்தரை சொல்ல வில்லை அல்லவா?

    ReplyDelete
  17. ஒருவன் சக்தி பெறுகிறான்
    ஒருவன் முக்தி பெறுகிறான்
    ஒருவன் வாழ்வை வெல்கிறான ஒருவன் மரணத்தை கொள்கிறான்
    அருமையான வரிகள் சகா. . .

    ReplyDelete
  18. கவிதை படித்து நானும் என்னை மறந்தேன். நல்லதொரு தேடல்.

    "தன்னைமறந்து தண்ணியடிச்சு
    தன்னை மறக்கிறான்."

    இதுவும் ரொம்ப அதிகமாக நடக்கிறதே.

    ReplyDelete
  19. ஐயோடா தன்னை மறந்த நிலையில் என்னல்லாம் நடக்குது?

    ReplyDelete
  20. என்னை மறந்துட்டேன்... :p

    ReplyDelete
  21. தன்னை மறந்த நிலையில் தேர்தல் பணியை செய்துவிடப்போகிறீர்கள்....
    கட்சிகாரனுங்க தன்னை மறந்த நிலையில் காஞ்சி காய்ச்சிவிடுவார்கள்...

    ஒவ்வொருவனும் தன்னைத்தான் உணரவேண்டும் என்பதை வலியுறுத்தும் நல்ல பதிவு....

    ReplyDelete
  22. தன்னை மறந்த நிலைகளில் நடக்கின்ற தவறுகளை மறக்கலாம்,

    கருத்தாழம் மிக அதிகம் இந்த படைப்பில். வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!