06 October, 2011

இதை விடவா மனிதன் உயர்ந்தவன்...!



ரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...

ஓ... மனிதா
நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....

நான்...
சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...




ரு பாறையின் மூச்சு....

ஓ.. மனிதா...
நீ வலிகளால் கோழையாகிறாய்....

நான் வலிகளால்
கடவுளாகிறேன்...




ரு பனித்துளியின் சுவாசம்..

ஒ.. மனிதா.. 
நீ நீரில் மூழ்கையில் 
மூர்ச்சையாகிறாய்...

நான் மூச்சடக்கி 
முத்தாகி‌றேன்....


 தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

32 comments:

  1. கவிதை வரிகளில் தத்துவம்....

    ReplyDelete
  2. ஓ.. மனிதா...
    நீ வலிகளால் கோழையாகிறாய்....

    நான் வலிகளால்
    கடவுளாகிறேன்...//

    அருமை அருமை நல்ல தத்துவம் சொல்கிற கவிதை.

    ReplyDelete
  3. வரிகளுக்கேற்ற படம் சூப்பர்

    ReplyDelete
  4. மிக அருமை...
    தன்னம்பிக்கை வரிகள்..
    ரசித்தேன்.இயற்கையிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்...

    ReplyDelete
  5. கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  6. //ஒரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...

    ஓ... மனிதா
    நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....

    நான்...
    சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...//
    ----------------
    ஓ!.. செங்கல்லே...
    உன்னை சுட்டு உயிர் வாழ்கிறோம்...
    செங்கற்சூளை கொத்தடிமைகள்....

    ===================================

    ஒரு பாறையின் மூச்சு....

    ஓ.. மனிதா...
    நீ வலிகளால் கோழையாகிறாய்....

    நான் வலிகளால்
    கடவுளாகிறேன்...
    ----------------
    நீ கடவுளாவதற்கு....
    அடிவாங்கியது நானல்லவா...
    புலம்பியது உளி...

    ==========================
    ஒரு பனித்துளியின் சுவாசம்..

    ஒ.. மனிதா..
    நீ நீரில் மூழ்கையில்
    மூர்ச்சையாகிறாய்...

    நான் மூச்சடக்கி
    முத்தாகி‌றேன்....

    ----------------

    உன்னைக்காத்து முத்தாக்கிய நான்...
    சிப்பியாகி குப்பையில்....
    நீயோ இன்று அழகிய குப்பியில்....

    ஒவ்வொன்றும் அருமையான கருத்தாழமிக்க கவிதைகள்...

    ReplyDelete
  7. அருமையான வரிகள். புகைப்படங்களும் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  8. //ஒரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...

    ஓ... மனிதா
    நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....

    நான்...
    சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...//

    சிந்திக்க வேண்டிய வரிகள் தோழரே
    அருமை அருமை

    ReplyDelete
  9. ஒரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...

    ஓ... மனிதா
    நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....

    நான்...
    சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...//

    சாவுரதுக்கு முன் ஏதாவது நல்லது செய்துட்டு சாகனும்ய்யா, அதுதான் இந்த கவிதையின் நோக்கம்....!!!

    ReplyDelete
  10. நச்சுனு நாலுவரிகளில் பல தத்துவங்களை சொல்லியிருக்கீங்க பாஸ் சூப்பர்

    ReplyDelete
  11. கலக்கல் கவிஞ்சரே!

    ReplyDelete
  12. அருமையாக உள்ளது கவிஞர் அவர்களே...!!!

    ReplyDelete
  13. வலிகளைத்தாங்காமல் வெற்றி இல்லை என நறுக்காய் உணர்த்துகிறது .

    ReplyDelete
  14. மூன்றும் முத்துக்கள்!

    ReplyDelete
  15. அருமையான தத்துவ முத்துக்கள்

    ReplyDelete
  16. அருமையான கருத்துக்கள். அதை இன்னும் அழகாக்குகிறது புகைப்படங்களும், வடிவமைப்பும்.

    ReplyDelete
  17. அருமை அருமை
    வித்தியாசமான சிந்தனை
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அற்புதப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

    ReplyDelete
  19. மூன்று வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நல்ல கவிதைகள் பாஸ்.//

    ReplyDelete
  20. மனிதனை வெல்லும் இயற்கையின் இயல்புகளைக் கவிதை தாங்கி வந்திருப்பது கவிதைக்குச் சிறப்பினைத் தருகின்றது.

    ReplyDelete
  21. ஒ.. மனிதா..
    நீ நீரில் மூழ்கையில்
    மூர்ச்சையாகிறாய்...

    நான் மூச்சடக்கி
    முத்தாகி‌றேன்....////

    முத்தான வரிகள்!!!

    ReplyDelete
  22. செளந்தர்
    பாறை
    செங்கல்
    பனித்துளி
    வச்சிட்டோம்ல உயர்ர்ரத்துல?
    எப்பூடி!

    ReplyDelete
  23. அன்பின் க.வீ.சௌந்தர் - படங்கள் குறுங்கவிதைக்க்காகத் தேர்ந்தெடுத்து போடப் பட்டிருக்கின்றன. கவிதை - படம் இரண்டுமே அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. அழகான அர்த்தமுள்ள வரிகள் அண்ணா.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. அழகிய தத்துவ வரிகள் வாழ்த்துக்கள் சகோ .இன்று என் தளத்தில் ஒரு பக்திப் பாடலுடன் கூடிய இரகசியம்
    காத்திருக்கின்றது வாருங்கள் சகோ .வந்து வாழ்த்துங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

    ReplyDelete
  27. அட செம கவிதை மச்சி...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!