04 October, 2011

கவனம் தேவை மக்களே... பின் வேண்டாம் விபரீதம்...



“என்ன சார் இது... தபால் பெட்டிக்கு முன்னாடி தலைகுனிஞ்சி நின்னுகிட்டிருக்கீங்க...?”

“ஹி!.. ஒண்ணுமில்லே.... மனுஷனுடைய ஞாபக சக்தியைப் பத்தி யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்..!”

“சில பேருக்கு அது குடுத்து வச்சிருக்கு சார்...!”

“லண்டன்லே ஒரு பெரிய உணவு விடுதி. அங்கே ஒரு பணியாளர். தினமும் நிறையப் பேர் சாப்பிட வருவாங்க அப்படி வர்றவங்களோட குடை, கைப்பபை, இவற்றையெல்லாம் வாங்கி இவர் பத்திரமா வச்சிக்குவார். சாப்பிட்டுவிட்டு வெளியே வர்றப்ப, அவங்க அவங்க பொருளை அவங்க அவங்கிட்டே சரியா ஒப்படைப்பார்.!”

“அப்படி எப்படி..? எல்லா குடையும் ஒரே மாதிரிதானே இருக்கும்?”

“இருந்தாலும் அவருக்கு அது ஞாபகம் இருக்கும் வர்றவங்க முகத்தையும் அவர்களுடைய பொருளையும் மறக்காம ஞாபகத்துலே வச்சிருந்து திருப்பிக் கொடுப்பார். இதுக்குக் குறிப்போ பெயரோ எழுதியும் வச்சிக்கறதில்லை!”

“ஆச்சரியமா இருக்கு சார்..!”

“ஏறக்குறைய 20 வருஷம் அங்கே அவரு வேலை பார்த்திருக்கார். ஒரு நாள்கூடப் பொருள்களை மாற்றி கொடுத்ததில்லை: குழப்பம் வந்ததில்லை!”

“நமக்கெல்லாம் இது சரிப்பட்டு வராது சார்..?”

“என்ன சொல்றீங்க..?”

“ஞாபகசக்தி போதாதுங்கறேன். அதனாலேதான் இப்படி இந்தப் தபால்பெட்டிக்கு முன்னாடி தலைகுனிஞ்சி நின்னுகிட்டிருக்கேன்!”

“என்ன ஆச்சு? விவரமாத்தான் சொல்லுங்களேன்!”

“அவசரமா ஒரு லெட்டர் எழுதி இந்தப் பெட்டிக்குள்ளே போட்டேன். ஆனா அதுலே கையெழுத்துப் போட மறந்துட்டேன்!”

“நீங்க பரவாயில்லை சார். நான் கையெழுத்தெல்லாம் கரெக்டாப் போட்டுட்டேன்... ஆனா லெட்டர் தான் எழுதாமே விட்டுட்டேன்..!”




ஞாபக மறதி  நோய் இன்று  உலக மக்கள் அத்தனைப்பேரிடமும் இருக்கிறது தம்முடைய அன்றாட வேளைகளில் எதையாவது ஒன்றை மறந்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு இது அதிகஅளவில் ஏற்பட்டு நோயாக மாறுகிறது. பொதுவாக ஒரு விஷயத்தில் அதிக அக்கறைக் கொண்டு நினைவில் ‌வைத்திருக்கும் போது மற்ற விஷயங்கள் நம் நினைவில் இருந்து போய்விடுகிறது.

தொடர்ந்து சில விஷயங்களை மனதிற்க்கு அசைப்போடுவது மூலமாகவும், குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு அதன்படி நடக்கும்போதும், சரியான பயற்சிகள் எடுப்பது மூலமும் இதுபோன்ற நோயை குணபடுத்தமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.




இந்த உலகத்தில் மிகவும் பெரிய ஞாபக மறதிக்காரர்கள் யார் என்றால் அது அரசியல்வாதிகள் தான் தன்னுடைய தொகுதி பற்றிய சிந்தனை ‌ஐந்தாண்டுக்கு ஒருமுறைதான் ஞாபகத்திற்க்கு வரும். அதுவும் ஓட்டுக்கேட்க தேர்தல் வரும் நேரத்தில்.

19 comments:

  1. ஆஹா பதிவ படிச்சுட்டு கருத்துபோட வர்றப்ப மறந்துட்டனே... இருங்க படிச்சுட்டு வாரேன்....

    ReplyDelete
  2. ஹா..ஹா... காமெடி......காமெடி......

    ReplyDelete
  3. மாப்ள உண்மை தான்யா நானும் ரொம்ப மறதிக்காரேன் ஹிஹி!

    ReplyDelete
  4. என் நிலையை அப்படியே சொல்லி உள்ளீர்கள் ....

    ReplyDelete
  5. மறதி, வியாதியாக இல்லாத வரை, அதை குணப் படுத்துவது அவரவர் கையிலேயே உள்ளது... என்னிடம் மறதி ஜாஸ்தி என்று வருபவர்களிடம் நான் கேட்க்கும் முதல் கேள்வி உங்கள் பிறந்த நாள் என்ன? உங்கள் அலைபேசி என் என்ன? உங்கள் வீட்டு என் என்ன? இது தெரியாதவர்கள் நிறைய பேர் இருந்தாலும் இதை தெரிந்தும் மறந்தவர்கள் நிறைய பேர் இல்லை... ஆக ஒரு செயலின் மேல் அக்கறை இல்லா விட்டால் நம் மூலையில் உள்ள temp folderil இந்த நினைவுகள் ஒளிந்து கொள்ளும் பின்பு அழிந்து விடும்... அக்கறையோடு செய்தால் அது main memoriyil store செய்யப் படும்... மும்பை டப்பாவாலாக்கள் கூட மறக்காம கொண்டு போய் குடுப்பாங்கன்னு படிச்சிருக்கேன்.. ஆனா முழுசா தெரிஞ்சுக்களே

    ReplyDelete
  6. உண்மைதான்... மறதி என்பது இயல்பானதே.
    நீங்கள் சொல்லியிருக்கு அரசியல்வாதியைவிட அவன் 5 வருசமா தொகுதிப்பக்கமே வரலையின்னாலும் மறுபடியும் அவனுக்கு ஓட்டுப் போடுறோம் பாருங்க. நாமதாங்க மறதியின் சிகரங்கள்.

    ReplyDelete
  7. பலே சௌந்தர்

    இன்னைக்கு எல்லோருக்கும் இருக்குற வியாதி

    ReplyDelete
  8. நல்லா இருக்கே... சூப்பர்

    ReplyDelete
  9. த.ம.9
    //“நீங்க பரவாயில்லை சார். நான் கையெழுத்தெல்லாம் கரெக்டாப் போட்டுட்டேன்... ஆனா லெட்டர் தான் எழுதாமே விட்டுட்டேன்..!”//

    ஹா,ஹா,ஹா.சூப்பர்!

    ReplyDelete
  10. @மாய உலகம்

    இத நான் நம்பிட்டேன்!
    நம்பினேனா நம்பலையா - ஞாபகம் இல்லையே

    ReplyDelete
  11. சவுந்தர், கொஞ்ச நாளா உங்க வலைப் பூவைப் பார்க்க முடியாமப் போச்சு
    மறதி அதிகமாகல - வேலை அதிகமாப் போச்சு.
    ஆனாலும் இன்றைய சூழலில் நினைவுகள் மறப்பதற்கான காரணங்கள் நிறைய அதில் முதன்மையானது நாம் பயன்படுத்தும் நவீன gadgets காரணம். நண்பர்கள் தொலை பேசி எண் கூட செல் பேசியில் தேட வேண்டியிருக்கிறது, ஐந்தும் ஐந்தும் எவ்வளவு என்று தெரிய கால்குலேட்டரை நாட வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  12. மிகச் சிறந்த அறிவாளிகள் அனைவரும் மறதி உள்ளவர்கள்தான் (அரசியல்வாதிகள் தவிர்த்து )

    இன்று நல்ல நாள்...

    http://veeedu.blogspot.com/2011/10/blog-post_04.html

    ReplyDelete
  13. அரசியல் வியாதிதான் காரணம், ஓட்டு போடுவதை முதல்ல நிறுத்தணும்...!!!

    ReplyDelete
  14. மக்கள் தான் மரதிக்காரர்கள்.ஒட்டு போட்டு ஜெயிக்க வச்சவர மறந்து போவதால

    ReplyDelete
  15. இனிய மாலை வணக்கம் பாஸ்,

    காமெடி கலந்து புதிய தகவல்களைச் சுவைபடத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.

    ரசித்தேன் பாஸ்..

    ReplyDelete
  16. உலகத்தில் மிகவும் பெரிய ஞாபக மறதிக்காரர்கள் யார் என்றால் அது அரசியல்வாதிகள் தான்

    உலகத்துலேயே இன்னொரு பெரிய ஞாபக மறதிக்காரங்க நம்ம மக்கள்தான்....இத மறந்துட்டீங்களே....

    ReplyDelete
  17. நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!