11 November, 2011

ஆத்தா... நான் பாஸாயிட்டேன்... // 11-11-11


கவிதை வீதி துவங்கி இன்றோடு ஒரு ஆண்டை பூர்த்தி செய்கிறது. என் வலையுலகின் பயணத்தில் இந்த மகிழ்ச்சியான தருணத்தை தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

நான் எப்படி வலைப்பூ ஆரம்பித்தேன் அதை எப்படி பிரபலப்படுத்தினேன் என்ற அழுவாச்சி கதையெல்லாம் ‌சொல்லவில்லை. கவிதை சார்ந்த ஒரு வலைப்பூவுக்கு தாங்கள் கொடுத்த ஆதரவுக்கு நான் தலைவணங்குகிறேன். என் வலைப்பூவில் கவிதை மட்டுமல்லாது வாசகர்களின் வருகையை கவர அரசியல், கட்டுரை, சினிமா, நகைச்சுவை என பல்வேறு தலைப்புகளில் பதிவிட்டுவருகிறேன். இதன் மூலம் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பொதுவாக அரசியல், சினிமா போன்ற பதிவுகளை வாசிக்கும் வாசகர்களை விட கவிதையை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான் இருந்தாலும் உலகின் எதோ ஒரு மூளையில் யாரோ ஒரு தமிழரால் என் கவிதை வாசிக்கபட்டுவிட்டது என்பதில்  நான் தினம் தினம் உச்சிக்குளிர்கிறேன்.

இந்த ஓராண்டில் வலைப்பதிவுகள் மூலம் ‌அதிக நேரத்தை இழந்திருந்தாலும் அதன் மூலம் அடைந்தது அதிகம். உலகத்தமிழர்களிடம் என்கவிதை சென்று சேர்ந்திருப்பது மூலம் நான் அடையாளம் காணப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும் உலகம் முழுவதும் நட்புகளை சம்பாதித்திருக்கிறேன். நான் அடைந்த பெருமைகளில் இதுதான் மிகவும் உயரியது.

எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் என் கவிதைவீதியை வலம் வரும் அத்தனை பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் மீண்டும் மீண்டும் என் நன்றியை உரிதாக்குகிறேன்.


பதிவுலகில் என் எல்லைகள்....
இதுவரைக்குமான ஹிட்ஸ்... (Hits)


என்னோடு கரம்சேர்ந்த நட்புகள்... (Followers)

இவ்வீதியில் குடியேறிய பதிவுகள்... (Posts)

மனம் வீச.... கவிதைகள் மட்டும்...

என்பதிவுக்கு தங்களின் தாக்குதல்கள்...
(பின்னுட்டங்கள்... Commands)


இவைகள் என்னால் இல்லை உங்களால் தான் சாத்தியமாயிற்று....
மேலும் தொடர்ந்து கவிதை வீதிக்கு தங்களுடைய ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்...

என்படைப்புகளுக்கு கருவாக இருக்கும் இந்த சமூகத்திற்க்கும், அதைப்பார்த்து படித்து வியக்கும் இந்த சமூகத்திற்க்கும் என் நன்றிகள்....


(படங்கள் கூகுல் இமேஜில் தேடி எடுத்தது)

நட்போடு இணைந்திருப்போம்...
நாளும்  பொழுதும்....


நன்றிகளுடன்...
கவிதைவீதி சௌந்தர்....

53 comments:

  1. Watch Sourashtra First Movie egos eno Trailer
    Thank You
    http://www.youtube.com/watch?v=x60jdgLve70

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  3. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நண்பரே, உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பின் கவிதை வீதி சௌந்தர் - முதலாம் ஆண்டு வெற்றி விழாவிற்கு நல்வாழ்த்துகள் - மேன் மேலும் தங்களீன் கவிதைகள் உலகமெங்கும் சிறப்புற - வாசக்ர்களின் இரசிப்புத் தனமை கூட - நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே


    தமிழ்மணம் முதல் வாக்கு

    ReplyDelete
  7. வணக்கம் பாஸ் இன்று ஓரு சிறப்பான நாள் அதாவது 11-11-11 இன்று உங்கள் தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்துள்ளமை மேலும் சிறப்பு..தொடர்ந்து உங்கள் தளம் மேலும் சிறப்பு அடைய வாழ்த்துக்கள்...

    நாங்கள் இருக்கின்றோம் தொடர்ந்து அசத்துங்கள்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இந்தச் சிறப்பான நாளில் மனம் நிறைய உங்களை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்கிறேன் தோழா... நீங்கள் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  9. உங்கள் பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்... கலக்குங்க....

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சௌந்தர் இன்னும் சிறப்புற வேண்டும்..

    ReplyDelete
  12. இந்த ஓராண்டில் வலைப்பதிவுகள் மூலம் ‌அதிக நேரத்தை இழந்திருந்தாலும் அதன் மூலம் அடைந்தது அதிகம்.
    >>>
    ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க சகோ

    ReplyDelete
  13. இவைகள் என்னால் இல்லை உங்களால் தான் சாத்தியமாயிற்று....
    மேலும் தொடர்ந்து கவிதை வீதிக்கு தங்களுடைய ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்...
    >>>
    ஆதரவு என்றும் உண்டு சகோ. எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  16. வாழ்த்துகள் தோழரே..

    ReplyDelete
  17. நண்பரே!
    தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. வாழ்த்துகள் சௌந்தர்.

    ReplyDelete
  19. மேலும் மேலும் வளர என் மனமார வாழ்த்துக்கள் சவுந்தர் சார்....

    ReplyDelete
  20. சௌந்தர் வாழ்த்துகள், இன்னும் நிறைய கவிதை எழுதுங்கள்.

    ReplyDelete
  21. அன்பு நண்பரே,
    முதலாம் ஆண்டு முடிவிற்கும்
    அடுத்த ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தமைக்கும்,
    முதலில் வாழ்த்துக்கள்.
    இன்னும் பல ஆண்டுகள் தங்களின் எழுத்து திறன் சிறந்து
    அனைவரிடத்தும் கணப்பொழுதில் சென்று அடைந்திட
    இறைவன் அருள்புரிவான்..

    ReplyDelete
  22. வாழ்த்துகள் நண்பா .. தொடரட்டும் உங்கள் கலக்கல்

    ReplyDelete
  23. முதலாம் ஆண்டு வெற்றி விழாவிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  24. இரண்டாம் ஆண்டு வெற்றிகரமாக அமையட்டும். பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு தரும் முன் அதை பரிசோதித்துவிட்டு தரும் ஆசிரியர் குறித்து தாங்கள் எழுதிய பதிவு எனக்கு மிகவும் பிடித்தது.அது போல் மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  25. ஒரே ஆண்டில் இவ்வளவு சாதித்திருப்பது சாதாரண விஷயமல்ல. உங்களின் இந்த உயர்வுக்கு நேர்மை ஒரு முக்கிய காரணம். தொடர்ந்து எழுதுங்கள். ஆதரவு எப்போதும் உண்டு.

    ReplyDelete
  26. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  27. ஓராண்டுக்குள் எனில் இது
    ஒரு மிகப் பெரும் சாதனையே
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 13

    ReplyDelete
  28. வாழ்த்துகள்... நண்பா...

    ReplyDelete
  29. இந்த நன்னாளில் உம்மை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்...!!!

    ReplyDelete
  30. வாழ்க வளமுடன் சுகமுடன்....

    ReplyDelete
  31. வீதியெங்கும் கவிதை காலமெல்லாம் ஒலிக்கட்டும்.

    வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள்... தொடர்ந்து வலம் வர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  33. மனம் நிறைந்த வாழ்த்துகள் சௌந்தர்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க !

    ReplyDelete
  34. ஓராண்டு ஆயிற்றா-நீர்
    வலைதன்னை தொடங்கி
    சீராண்ட கவிபலவே-நன்கே
    செப்பினீர் நிகரிலவே
    பாரெங்கும் பரவிடவே-நல்
    பைந்தமிழில் படைத்திடவே
    பேரோங்க வாழ்வீராம்-மேலும்
    பெருமைமிக பெறுவீராம்
    வாழ்க நலமுடன்!

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  36. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நீங்கள் இன்னும் நிறைய பதிவுகள் எழுதவும், வாழ்த்துகிறேன்.

    நம்ம தளத்தில்:
    மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

    ReplyDelete
  37. நண்பரே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. மனம் நிறைந்த வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க !

    ReplyDelete
  39. இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் கவிதைவீதிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள்.....
    இன்னும் நீளட்டும் உங்கள் முயற்சி

    ReplyDelete
  41. உங்கள் உழைப்பு கவுரவப் படுத்தப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் சார்.ஓராண்டின் நிறைவை என்ங்கலுடன் பகிர்ந்து கொண்டு சந்தோசப்பட்டமைக்கு.

    ReplyDelete
  44. கவிதை வீதிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ உங்கள் செல்லக் குழந்தை சம்பாதித்த உறவுகள் கருத்துரைகள் ஏனையவை எல்லாம் இறையருளால் மென்மேலும் பெருகட்டும் .தீர்க்காயிசோடு எல்லாப் புகழும் பெருமையும் கிட்டட்டும் .........
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...........

    ReplyDelete
  45. இனியாவது பிழை இன்றி எழுதுங்கள் சார்..

    - இப்படிக்கு பள்ளி மாணவன்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!