14 November, 2011

நிலையில்லா உலகில்....


   நெஞ்சோடு திறம்கொண்டு 
   புயலோடு போரிடும் பொழுதுகள் 
   எனக்கு வாய்த்ததில்லை...!
   நான் தென்றலுக்கே தோற்றுப்போகும்
   ஊமத்தம் ஜாதி...!

   சூரியன் ஒளிக்கீற்றுகள்
   எனை சுட்டுவிடும்
   என்ற கவலையில்லை...!
   நான் நிலவொளிக்குள் முடிந்துவிடும்
   அந்திமந்தாரை...!

   பிரபஞ்சத்தை அளவெடுத்து
   பூக்களோடும் முட்களோடும்
   யுகம் வாழ நினைத்ததில்லை...!
   நான் ஆதவனுக்குள் ஆயுளை முடிக்கும்
   பனித்துளி...!

   சிறகுகள் உண்டு பறப்பதற்கு
   ஆனால் ஆகாயம் தொடும் வரமில்லை
   ஆண்டுகள் வாழ ஆசைதான்...
   நான் நாளுக்குள் பிறந்து நாளுக்குள் மடியும்
   ஈசல்....

   ரணம் கண்டு பின்வாங்குவதில்லை
   சுட்டுவிடும் எனதெரிந்தும்
   தொட்டுவிட துடிக்கும் உயிரோசை...!
   நான் தீயைத்தின்று தீயிற்கே உணவாகும்
   விட்டில்...!

   ன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
   வெளியேற காத்திருக்கும் உயிரை 
   அடைத்து வாழும் உயிரினம்...!
   நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க
   பயணிக்கும் மனிதன் நான்...!


தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...!

27 comments:

  1. >> நான் ஆதவனுக்குள் ஆயுளை முடிக்கும்
    பனித்துளி...!<<


    வித்தியாசமான கற்பனை,வித்தியாசமான கவிதை..!! பகிர்வுக்கு நன்றி..!!

    ReplyDelete
  2. எனக்குப் பிடித்த வரிகள்

    .....

    நான் ஆதவனுக்குள் ஆயுளை முடிக்கும்
    பனித்துளி

    ...!...



    எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
    காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  3. ////நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க
    பயணிக்கும் மனிதன் நான்...!
    ////

    சிறப்பான ஒரு வரிகள் என்ன ஓரு சிந்தனை....

    ReplyDelete
  4. மிகவும் அருமை அண்ணா.. விசேடமாக ஒவ்வொரு பந்தியினதும் இறுதி வரிகள் பிரமாதம்.

    ReplyDelete
  5. நிலையில்லா உலகில் வரிகள் அருமையாகத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  6. நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க
    பயணிக்கும் மனிதன் நான்...!//

    அருமையான வேதனை வரிகள் கவிதையில் ம்ம்ம் கலக்குங்க மக்கா கலக்குங்க...!!!

    ReplyDelete
  7. //ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
    வெளியேற காத்திருக்கும் உயிரை
    அடைத்து வாழும் உயிரினம்...!
    நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க
    பயணிக்கும் மனிதன் நான்...!



    நான் ரசித்த வரிகள்... அருமை

    ReplyDelete
  8. மாப்ள நல்லா இருக்குய்யா...கூட்டாளிங்க யாரோ மனமில்லாம மைனஸ் போட்டு இருக்காங்க போல!

    ReplyDelete
  9. // மரணம் கண்டு பின்வாங்குவதில்லை
    சுட்டுவிடும் எனதெரிந்தும்
    தொட்டுவிட துடிக்கும் உயிரோசை...!
    நான் தீயைத்தின்று தீயிற்கே உணவாகும்
    விட்டில்...!//

    அருமையான வரிகள்..

    ReplyDelete
  10. சொற்கள் வெள்ளிச் சலங்கையாய்
    கவியில் சிந்து பாடி நிற்கிறது நண்பரே...
    அருமை அருமை...

    ReplyDelete
  11. ///////
    விக்கியுலகம் said... [Reply to comment]

    மாப்ள நல்லா இருக்குய்யா...கூட்டாளிங்க யாரோ மனமில்லாம மைனஸ் போட்டு இருக்காங்க போல!

    /////////

    முகங்களைக்கூட பார்க்காமல் நம்முடைய நட்புப்பயணம் தொடர்கிறது.

    இதை நான் பெருமையாக நினைத்து தினம் தினம் உளம் மகிழ்கிறேன்.

    ஆனால் என்னுடைய கருத்துக்கள்.. என்னுடைய பதிவுகள் யாருடைய மனதையோ நெருடுகிறது என்று நினைக்கும்போது நான் வேதனைஅடைகிறேன்.

    பொதுவாக என்னுடைய மனம் எந்த ஒரு உயிரினத்தையும் காயப்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில்தான் செயல்படுகிறேன்.

    எனக்கு தெரிந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இதுவரையில் நான் யாரையும் காயப்படுத்தியதில்லை அப்படி காயப்படுத்த நினைத்ததுகூட இல்லை...

    அப்படியிருக்க என்னை தவறாக பார்க்கும் யாரோ ஒரு சிலரைக்கூட நான் வன்சொற்கள் சொல்லி காயப்படுத்த விரும்பவில்லை..

    மைனஸ் ஓட்டுக்காக நான் இதை சொல்லவில்லை ஓட்டும் கருத்தும் இங்கு கட்டாயம் இல்லை..

    நட்புடன் தொடர்வோம்...

    ReplyDelete
  12. வரிகள் நிறையவே உண்மை பேசுகிறது ..
    உணர்ச்சியான கவிதைக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் ..

    ReplyDelete
  13. இந்த நிலை இல்லா உலகில் மனிதனின் மனதை அழகாக படம் பிடித்து காட்ட்கிறது உங்கள் கவிதை..

    பாராட்டுகள்...

    ReplyDelete
  14. // ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
    வெளியேற காத்திருக்கும் உயிரை
    அடைத்து வாழும் உயிரினம்...!
    நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க
    பயணிக்கும் மனிதன் நான்...!//


    உண்மைதான் சகோ!

    புலவர் சா இராமாநுசம்
    வலைவரக் காணோம்

    ReplyDelete
  15. முன்பு ஓட்டுப்பட்டை காணவில்லை
    தற்போது போட்டேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. அழகான கவிதையும் கவிதை சொல்லும் படமும் அருமை....

    ReplyDelete
  17. மரணம் கண்டு பின்வாங்குவதில்லை
    சுட்டுவிடும் எனதெரிந்தும்
    தொட்டுவிட துடிக்கும் உயிரோசை...!
    நான் தீயைத்தின்று தீயிற்கே உணவாகும்
    விட்டில்...!

    ஒவ்வொரு பந்தியுள்ளும்
    எத்தனை எத்தனை தத்துவங்கள்....
    அருமை சகோ !!!!

    ReplyDelete
  18. நான் தென்றலுக்கே தோற்றுப்போகும்
    ஊமத்தம் ஜாதி...!

    ReplyDelete
  19. // ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
    வெளியேற காத்திருக்கும் உயிரை
    அடைத்து வாழும் உயிரினம்...!
    நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க
    பயணிக்கும் மனிதன் நான்...!//

    unmai kavithai arumai ..
    vazthukkal

    ReplyDelete
  20. ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
    வெளியேற காத்திருக்கும் உயிரை
    அடைத்து வாழும் உயிரினம்...!
    >>>
    சரியாத்தான் சொல்லியிருக்கே.

    ReplyDelete
  21. நிலையில்லா வாழ்வில் வாழும்போது ஏதாவது நல்லது செய்து வாழ்ந்தாலே நல்லது !

    ReplyDelete
  22. ஆனால் காலம் கடந்து யுகமாய் நிலைக்கும் உங்கள் இந்த கவிதை.

    ReplyDelete
  23. /// நெஞ்சோடு திறம்கொண்டு
    புயலோடு போரிடும் பொழுதுகள்
    எனக்கு வாய்த்ததில்லை...!
    நான் தென்றலுக்கே தோற்றுப்போகும்
    ஊமத்தம் ஜாதி...!

    சூரியன் ஒளிக்கீற்றுகள்
    எனை சுட்டுவிடும்
    என்ற கவலையில்லை...!
    நான் நிலவொளிக்குள் முடிந்துவிடும்
    அந்திமந்தாரை...!

    பிரபஞ்சத்தை அளவெடுத்து
    பூக்களோடும் முட்களோடும்
    யுகம் வாழ நினைத்ததில்லை...!
    நான் ஆதவனுக்குள் ஆயுளை முடிக்கும்
    பனித்துளி...!

    சிறகுகள் உண்டு பறப்பதற்கு
    ஆனால் ஆகாயம் தொடும் வரமில்லை
    ஆண்டுகள் வாழ ஆசைதான்...
    நான் நாளுக்குள் பிறந்து நாளுக்குள் மடியும்
    ஈசல்....

    மரணம் கண்டு பின்வாங்குவதில்லை
    சுட்டுவிடும் எனதெரிந்தும்
    தொட்டுவிட துடிக்கும் உயிரோசை...!
    நான் தீயைத்தின்று தீயிற்கே உணவாகும்
    விட்டில்...!

    ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
    வெளியேற காத்திருக்கும் உயிரை
    அடைத்து வாழும் உயிரினம்...!
    நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க
    பயணிக்கும் மனிதன் நான்...!////


    எல்லா வரிகளும் இருக்குனு தான பாக்குறிங்க ....
    புடிச்ச வரியா போடலாமேன்னு பாத்தேன் ..எத விட எத போடன்னு தெரியல ...
    எல்லாமே அருமை ....!!!!

    http://jthanimai.blogspot.com/

    ReplyDelete
  24. மிக நல்ல கவிதை. ஆரோக்கியமான வரிகளோடு அற்புதமான பொருளோடும் அழகான கவிதை.

    உங்கள் கவிதையை இன்னும் அழகாக்குகிறது நீங்கள் இணைத்துள்ள படம்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!