02 November, 2011

இதை சொன்னால் வெட்க கேடு.. சொல்லாவிட்டால் மானக்கேடு...


காலை எழுந்து செய்தித்தாளை புரட்டினாலே போதும் ஊழல், விபத்து, லஞ்சம், கைது போன்ற வா‌ர்த்தைகள்தான் அதிகம் ஆட்கொள்கிறது. அதிலும் ஊழலைப்பற்றிய தகவல்கள் வராத நாட்களே இல்லை. சுதந்திரம் அடைந்தபிறகு முதல் இந்திய பட்ஜெட் ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இன்று ஒருவர் பதுக்கியுள்ள பணத்தின் அளவை கேட்டாலே தலை சுற்றுகிறது. செய்தித்தாள்களில் ஊழல்களின் அளவை ரூபாயில் பார்க்கும்போது நம்நாடா ஏழை நாடு என்று என்னத்தோன்றுகிறது.

சுவீஸ் வங்கி நடத்திய ஆய்வில், ஒரு அரிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அதாவது, நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள், 200 ஆண்டுகளில் கொள்ளையடித்தது, ஒரு லட்சம் கோடிதானாம். ஆனால், சுதந்திரம் அடைந்த இந்த, 65 ஆண்டுகளில், இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்தது, 25 லட்சம் கோடி ரூபாயாம். 

இத்தகவலை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மதுரை மேடையில் வெளியிட்டு, நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். இந்திய அரசியல்வாதிகளின், இவ்வியத்தகு சாதனையை எண்ணும் போது, மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள், இப்படி நடந்துக் கொள்ள காந்தி வாங்கிய சுதந்திரமே காரணம். அவர் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்காவிட்டால், நாம் இந்த அளவுக்கு கொள்ளையடித்து பேரும், புகழும் பெற்றிருக்க முடியாது. 

கோவையில் செக்கு இழுத்து கஷ்டப்பட்ட சிதம்பரனாரும், தூக்கு கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கும், சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று ஆனந்தமாகப் பாடிய பாரதியாரும், இன்று நம்மிடையே இல்லை என்பது தான், பெரிய குறையாகத் தெரிகிறது. அவர்கள் இச்சாதனையை கேட்டிருந்தால், நிச்சயம் மகிழ்ந்திருப்பர். உச்சி குளிர்ந்திருப்பார்கள்.

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்களுக்கு அதன் மூலம் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை. சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகள் கழித்தும், இந்தியர்கள் எப்படி இருப்பர் என்பதைக் காட்டத்தான், அன்றே காந்திஜி, பாதி உடை மட்டும் அணிந்தார் போலும்....!

அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தை போல், எத்தனை போராட்டம் நடத்தினாலும், ஊழலை ஒழிக்க முடியாது. தனிமனிதன் என்று தன்னுடைய தேவையை குறைத்துக்கொண்டு தம்தாய் நாட்டிற்காக பாடுபடுகிறார்களோ அப்போதுதான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும்.

தன்னுடைய பணத்தாசையின் விளைவாக இந்த அரசியல்வாதிகள் சொத்துக்குமேல் சொத்து சேர்த்து இந்தியாவின் வளங்களை அன்னியநாட்டில் குவிந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஊழலைக் கண்டுபிடிக்கும்போது அந்த நபரை கைது செய்தால் மட்டும் போதாது அவருடைய அத்‌தனை சொத்தையும் பறிமுதல் செய்ததோடு அந்த ஊழல் பணம் எங்கிருக்கிறது என்று கண்டறிந்து அதையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

இறுதியாய் இந்தியா பணக்கார நாடாக ஆகாவிட்டால் கூட பராவயில்லை. ஊழல் நாடு என்று எதிர்காலத்தில் உலக அரங்கில் பெயர் எடுக்காமல் இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிராக அடுத்த சுதந்திரத்திற்காக தயாராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மட்டும் தெரிந்துக்கொள்ளட்டும்.

24 comments:

  1. -சமூக அக்கறையோடு மனக்குமுறலைப் பதிவு செய்துள்ளீர்கள். எங்களின் குரலாகவும் இது ஒலிப்பதில் மகிழ்ச்சி. ஆனால் இம்முறை எழுத்துப் பிழை அதிகம் உள்ளது நண்பரே...

    ReplyDelete
  2. //////
    கணேஷ் said... [Reply to comment]

    -சமூக அக்கறையோடு மனக்குமுறலைப் பதிவு செய்துள்ளீர்கள். எங்களின் குரலாகவும் இது ஒலிப்பதில் மகிழ்ச்சி. ஆனால் இம்முறை எழுத்துப் பிழை அதிகம் உள்ளது நண்பரே...

    //////////

    தற்ப்போது பொருமையாக வாசித்து சரிசெய்துக்கொண்டிருக்கிறேன்

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. ஆசை கூடியே இத்தனை பாடு மனிதனுக்கு.அதேநேரம் அழிவும்தானே சௌந்தர் !

    ReplyDelete
  4. வெட்கக்கேடு, மானக்கேடு மட்டுமல்ல, எல்லா கேடுமே ஊழலால் நிகழும்.

    ReplyDelete
  5. ////////
    ஹேமா said... [Reply to comment]

    ஆசை கூடியே இத்தனை பாடு மனிதனுக்கு.அதேநேரம் அழிவும்தானே சௌந்தர் !

    //////////


    அழிவு இருக்கிறது என்று தெரிந்தும் அதையாரும் பொருட்படுத்தவில்லை ஹேமா....

    கண்டிப்பாக அவர்களுக்கு அழிவுதான்...

    ReplyDelete
  6. நல்ல பதிவு ஐ லைக் இட்

    ReplyDelete
  7. TNPSC முதன்மை நிர்வாகிகள் TNPSC YAI ஊழல் ஒழிப்பு துறையின் கீழ் கொண்டு வர போடப் பட்டுள்ள தமிழக அரசு ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி உள்ளனர்... அவர்களும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்..

    ReplyDelete
  8. என்னய்யா கவிதைவீதி இம்புட்டு பொங்கு பொங்கிட்டாரே....!!!

    ReplyDelete
  9. முதல்ல காங்கிரஸ் கட்சிகாரவனுகள்'கிட்டே இருக்குற சொத்தை எல்லாம் பறிமுதல் செய்யணும் என்பது என் கருத்து நாசமாபோறவனுங்க தொல்லை தாங்க முடியவில்லை...

    ReplyDelete
  10. கணேஷ் said...
    -சமூக அக்கறையோடு மனக்குமுறலைப் பதிவு செய்துள்ளீர்கள். எங்களின் குரலாகவும் இது ஒலிப்பதில் மகிழ்ச்சி. ஆனால் இம்முறை எழுத்துப் பிழை அதிகம் உள்ளது நண்பரே...//

    கோபத்தில் வந்த சரியான பதிவு இது கணேஷ், அதான் எழுத்துப்பிழை, உணர்வு ஒன்றுதான்...

    ReplyDelete
  11. அரசியல்வாதிகள் ஊழல் பெருச்சாளிகள் என்று வாய்கிழியக் கூக்குரல் இடுகின்றோம். இந்த ஊழல் பேர்வழிகளை வளர்த்துவிட்டது யார்? பொதுமக்களே! அவர்களுடைய பேராசையே! விபச்சாரி ஒருத்தியை ஊரே ஒன்றுகூடி அடிக்க வந்த கதைதான் நினைவுக்கு வருகிறது. இயேசு பிரான் அப்போது சொன்னது ஒன்றுதான். எவர் ஒருவர் இதுவரை தவறிழைக்கவில்லையோ அவர் முதல் கல்லை எறியட்டும்! அரசியலை வியாபாரமாக்கிவிட்ட பிறகு லாபம் நட்ட கணக்கைக் குறைசொல்வதில் பயனில்லை. நாட்டின் அவலநிலைக்கு மக்களே பொறுப்பேற்க வேண்டும். இதில் மானக்கேடான விஷயம் என்னவென்றால், ஓர் ஊழல் பேர்வழியை ஒழித்துவிட்டு, இன்னொரு ஊழலைப் பேர்வழியைத்தான் ஆட்சிபீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள் இந்தப் பெருமைக்குரிய மக்கள்!

    ReplyDelete
  12. அரசியல்வாதிகளுக்கு எதிராக அடுத்த சுதந்திரத்திற்காக தயாராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மட்டும் தெரிந்துக்கொள்ளட்டும்.
    >>>>
    நீங்க சொல்வதை பார்த்தால் விடியும் நாள் தூரமில்லை போல சகோ

    ReplyDelete
  13. இடியிடிக்கும் மேகமாய்
    மனக்குமுறல்.....
    எல்லாத்துக்கும் ஒரு முடிவு
    இருக்கிறது ...
    முடியும் காலம் வரும்
    புதையும் காலம் வரும்...

    ReplyDelete
  14. ஸலாம் சகோ சவுந்தர்,
    அருமையான பதிவு சகோ. தங்கள் ஆதங்கத்தை கோபத்துடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.

    அரசியல்வாதிகளின் ஊழலுக்கு காரணம் பன்னாட்டு இந்நாட்டு கார்பரேட் கம்பெனி முதலாளிகளே..! இன்றைய தேதியில் அவர்களின் தயவு இல்லாமல் எந்த கட்சியும் உயிர் வாழ முடியாது. முதலில் ஊழலின் ஆணிவேரான அவர்களை களை எடுக்கவேண்டும். ஏனெனில் அவர்களே ஊழலை உருவாக்குபவர்கள்.

    ReplyDelete
  15. சரியாகச்சொன்னீங்க பாஸ்........

    ReplyDelete
  16. நல்ல கருத்து நண்பரே ,இது அனைவரின் மனக்குரலே ,

    ReplyDelete
  17. வணக்கம் நண்பரே! தற்போதைய சமூகத்திற்கு நல்ல தேவைப்படும் பதிவு. எங்களின் சார்பாக தங்கள் மனக்குமுறல் வெளிப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். பதிவுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. மனக்குமுறலை சமூகத்திற்கு தேவையான பதிவாக பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. அரசு ஊழியர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, தனது கடமைக்கு பொறுப்பேற்கும் நிர்பந்தம் (தனியாரில் இருப்பது போல) இல்லாதது, அவர்கள் சரியாக செயல்படுகிறார்களா என கண்காணிக்க ஒரு பொது அமைப்பு இல்லாதது நமக்கு ஒரு குறை தான்.

    ReplyDelete
  20. //அரசியல்வாதிகளுக்கு எதிராக அடுத்த சுதந்திரத்திற்காக தயாராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை//

    கண்டிப்பாக இல்லை...கூடிய சீக்கிரமே நடக்கும்...

    ReplyDelete
  21. ///அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தை போல், எத்தனை போராட்டம் நடத்தினாலும், ஊழலை ஒழிக்க முடியாது. தனிமனிதன் என்று தன்னுடைய தேவையை குறைத்துக்கொண்டு தம்தாய் நாட்டிற்காக பாடுபடுகிறார்களோ அப்போதுதான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும்////

    இது உண்மை நண்பரே...!

    ஆனால்...! "தனிமனித ஒழுக்க"த்தை எவன் ஒருவன் கடைபிடிக்காமல் போகிறானோ...! அந்த கடைசி இந்தியன் இருக்கும்வரை இவை ஓயாது...! ஒழியாது..!

    இதனைச் சொல்வதால் நான் யோக்கியன் என எண்ணிவிடாதீர்...!

    அதோடு...!
    தாங்கள் சொல்லியுள்ள
    ////"தனிமனிதன் என்று தன்னுடைய தேவையை குறைத்துக்கொண்டு தம்தாய் நாட்டிற்காக/////

    தம் தாய்நாட்டிற்காககூட வேண்டாம்..!
    தனக்கு பின்னால் வரும் தன் சந்ததிகளுக்காகவாவது....! (ஏனெனில் நமக்கு "பொதுவே" பிடிக்காது...!"சுயநலம்" மட்டுமே பிடிக்கும்...!)
    தங்கள்தங்கள் தேவைகளை... வசதிகளை குறைத்துக்கொண்டால்... தானும்... தன்வீடும்... தன் ஊரும்... தன் மாநிலமும்... தன் நாடும் முன்னேறும்...! முன்னேற்றம் காணும்..!


    குறிப்பாக...!
    எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் அறிவுரை...!
    "ஆசை படலாம்..இது இயற்கை...!
    ஆனால்...!
    "பேராசை"யின் விளைவு..
    "பெருநஷ்டமே"...!
    "பேராபத்தே....!

    நல்பதிவு...!

    வாழ்த்துக்கள்...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!