01 November, 2011

இதை என்னவென்று நான் சொல்ல...!


தென்றல்காற்று வீசும்
மாலைப் பொழுது...!
 
ந்திவானம் 
தங்க நிறத்தில்..!

காக்கைகள் படபடத்தது
கூட்டை நோக்கி...!

மாலை நேரப்பூக்கள்
மலர்ந்த மயக்கத்தில்...!

விழியோரம் தீபம் ஏற்றி
உலா வந்தது மின்மினி...!

மூன்றாம் பிறையாய்
முகம் காட்டி சிரித்தது நிலா...!

கரந்த சேர்க்கையை முடித்துவிட்டு
கூட்டுக்கு திரும்புகிறது வண்ணத்துப்பூச்சி...!

சூரியனை வணங்கி முடித்து
தலை தாழ்கிறது நெற்கதிர்..!

காற்றைக்கிழித்துக்கொண்டு
தடக்.. தடக்.. சத்தத்துடன் புகைவண்டி...!

மாலைப் பொழுதை தழுவிக்கொள்ள
மடைத்திறக்கிறது இருட்டு...!

தினம் தினம் இப்படித்தான்
மாலை பொழுதுகள்...!

னால் எனக்கோ..?

நேற்று சுடுச்சோறு..!
இன்று பழையது...!
நாளை...?


தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே...!

26 comments:

  1. வறுமையின் கொடுமையை வளமான தமிழில் உரைத்திட்டீர். மிக நன்று.

    ReplyDelete
  2. கவிதை மிக மிக யதார்த்தமாக நகர்கிறது சகோ....
    காட்சிகள் கண்முன் வந்து கண்சிமிட்டிச் செல்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வறுமையின் நிறம் கொடுமை

    ReplyDelete
  4. கடைசி வரிகள் சுடுகின்றன........

    ReplyDelete
  5. மாப்ள கவிதை சூப்பர்....

    ReplyDelete
  6. பழைய சோறு சுடுகிறது.

    ReplyDelete
  7. நேற்று சுடுச்சோறு..!
    இன்று பழையது...!
    நாளை...?//


    மனசு வலிக்கும் கவிதை....!!!

    ReplyDelete
  8. அருமையான வர்ணனை சூப்பர்ப் மக்கா...!!!

    ReplyDelete
  9. ஏழையின் உணர்வுகள், எளிய வார்த்தைகளில்.

    ReplyDelete
  10. மாறாத மாலைப் பொழுது போல - மாறாத வறுமையும்.

    ReplyDelete
  11. வறுமையின் கொடுமை கவிதையாய்...

    ReplyDelete
  12. மனதை தொடும் வரிகள் அருமை

    த.ம 3

    ReplyDelete
  13. யதார்த்தமான வரிகள்..

    கடைசி வரி மனதி விட்டுசெல்ல மறுக்கிறது நண்பரே..

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  14. சௌந்தர்....கவிதை மனதைக் கொஞ்சம் கலங்கத்தான் வைக்கிறது. என்றாலும் நீங்கள் சொன்ன எந்த இயற்கையும் நாளைக்காக வருந்தவில்லை.மனிதன் மட்டுமே !

    ReplyDelete
  15. நல்ல கவிதை.அதைவிட நல்ல படங்கள். நன்றாக இருந்தது,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. இயற்கையை பற்றிய கவிதையோ என்று நினைத்து கொண்டிருக்கும்போதே மனதை பிசையும் ஒரு கவிதை. அருமை/

    ReplyDelete
  17. தினம் தினம் இப்படித்தான்
    மாலை பொழுதுகள்...!/

    சுவையான பழைய சோறு!

    ReplyDelete
  18. கொடிது கொடிது வறுமை கொடிது.....
    கவிதை அழகாய் சொல்லிநிற்கிறது...

    ReplyDelete
  19. கடைசி இரண்டு வரிகளில் கவிதையை புரியவச்சிடீங்க சௌந்தர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. இன்று கிடைத்த பழைய சோற்றால் மனம் நிறைத்து, நாளையைப் பற்றிய கவலையைத் தள்ளி வைத்து நலமாய் விடியும் என்னும் நம்பிக்கையுடன் உறங்கச் செல்வோம். கூடு உடைத்து வந்த வண்ணப்பூச்சிகள் மறுபடி கூட்டுக்குள் முடங்க விரும்புவதில்லை. அதுபோல வாழ்க்கையை முன்னோக்கிப் பார்த்து நம்பிக்கையுடன் முன்னேறுவோம்.

    ReplyDelete
  21. Kavithai paditha pin kankal kalangiyadhu.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!