04 December, 2011

விஜயின் நண்பன் படம் வெற்றியா..? தோல்வியா..?


 
லகம்
வெப்ப மயமாகிறதாம்...!

செவ்வாயில்
தண்ணீர் இல்லையாம்..!

ணமதிப்பு
குறைந்து கொண்டு போகிறதாம்...!

ங்கத்தின்
விலையானது  உச்சத்தில் இருக்கிறதாம்..!

பேருந்து
கட்டணம் அதிகபடுத்தியதில் கவலையாம்...!

காய்கறிகள்
விலையேற்றத்தின் விளைவாய் போராட்டங்கள்..!

விஜயின்
நண்பன் படம் வெற்றியா? தோல்வியா?

ச்சா எண்ணெய்
விலையில் நிலையில்லாமல் இருக்கிறதாம்..!

தையெல்லாம் விடுத்து
அன்பே... எப்போதும்...
உன்னைப்பற்றிய கவலைதான் எனக்கு...!


தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..!

18 comments:

  1. தலைப்பு வெச்சுட்டமேங்கறதுக்காக விஜய் படம் பத்தின அந்த ரெண்டு வரிகள் நடுவுல சம்பந்தமில்லாம உறுத்துது. மத்தபடி கவிதை நல்லாத்தான் இருக்கு. ஏன் செளந்தர் சார் இப்படி?

    ReplyDelete
  2. கை(ப்)பற்றும் வரைதான் காதலியைப் பற்றிய கவலையெல்லாம்.

    கல்யாணமாகட்டும், கண் உறுத்தும் கவலைகளின் பின் கண்மறைந்து போகும் இந்தப் பிதற்றலெல்லாம்.

    என்ன சரிதானே நான் சொல்வது?

    அசத்தல்! கவிதை வீதியில் மற்றுமொரு காதற்தேரோட்டம். பாராட்டுகள் செளந்தர்.

    ReplyDelete
  3. அவனவனுக்கு அவனனவன் கவலை - கவி சூப்பர் - சொந்த அனுபவமோ

    ReplyDelete
  4. இதெல்லாம் ஒரு கவிதை? அதை பாராட்டக்கூட எப்படி உங்களுக்கு எல்லாம் மனசு வருது?

    ReplyDelete
  5. /////
    அர்ச்சனை said... [Reply to comment]

    இதெல்லாம் ஒரு கவிதை? அதை பாராட்டக்கூட எப்படி உங்களுக்கு எல்லாம் மனசு வருது?

    //////////

    வாருங்கள் அர்ச்சனை அவர்களே...

    முதல் முதலாக என்தளத்திற்கு வந்ததற்க்காக தங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

    ஒரு தளத்தில் வரும் போது சபையடக்க வேண்டும்.

    என்னுடைய தளத்தில் தாங்கள் படித்த என்னுடைய கவிதையை விமர்சிக்க மற்றும் அது குறித்து கருத்துச்சொல்ல தங்களுக்கு முழு உரிமை உண்டு.

    ஆனால் இந்தகவிதை பற்றி கருத்துச்சொன்ன மற்றவர்களை சாட உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    கவிஞர்களை மதிப்பு கொடுக்க தெரியாத தங்களுக்கு கவிதையை ரசிக்க முடியுமா இல்லையா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  6. ஒரு கவிஞரிடமிருந்து எல்லாக்கவிதைகளும் கவித்துவத்துடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகபெரிய தவறு.

    அப்படி எத்தனைக் கவிதை என் தளத்தில் வாசித்தீர்கள்.

    கருப்பாக இருக்கிறது என்பதற்காக என்குழந்தைகளை மறைத்தா வைக்க முடியும்.

    ReplyDelete
  7. @ அர்ச்சனை


    ஹிட்ஸ்க்காக தலைப்பு வைக்கப்படுகிறது என்று தங்களுடைய குற்றச்சாட்டாக இருக்கலாம்.

    கவித்துவமாக தலைப்பிட்டு பலக்கவிதைகள் இருக்கிறது அந்த கவிதைகளை வாசித்து தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தால் இந்த கவிதைக்கு வந்து தாங்கள் குறைச்சொல்ல உரிமையுண்டு

    ReplyDelete
  8. இந்த கவிதையின் தலைப்பை குறித்து ஐயா கணேஷ் அவர்களே கேள்வி கேட்டிருக்கிறார். அவருக்கு கேள்வி கேட்க உரிமையுண்டு. அவர் தொடர்ச்சியாக என்னுடைய அனைத்து பதிவுகளையும் வாசிக்க கூடியவர்.

    முதலில்
    ”உன்னைப்பற்றிய கவலையே எனக்கு”
    என்று தான் தலைப்பிட்டேன். காலத்திற்கு ஏறற்தாக இருக்க கவிதையின் ஒரு வரியை தலைப்பாக வைத்திருக்கிறேன்.

    அதில் தங்களுக்கு என்ன மனவருத்தம் என்று தெரியவில்லை.

    கருத்துச் சொல்லும் பேர்து கவிதையின் கருவை அல்லது சில வரிகளை மாற்றியகைக்க சொல்லவும், கவிதையின் தலைப்பை மாற்ற சொல்லவும் தங்களுக்கு உரிமை உண்டு அதை விடுத்து வாசித்தவர்களையும் முழு கவிதையையும் குறைச்சொல்ல தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    ReplyDelete
  9. தனி உலகத்தில இருக்கீங்க...

    ReplyDelete
  10. என் கவிதைகள், என் படைப்புகள், யாரையும் வருத்தப்படவோ காயப்படுத்த கூடாது என்று நான் விரும்புகிறேன்.

    அதை மீறி சிலருக்கு உடன்பாடு இல்லாத போது சங்கடப்படவேண்டியதாக இருக்கிறது.

    இதைப்படிப்பவர்கள் யாரேனும்
    இந்த கவிதைக்கு நல்ல தலைப்பை தாருங்கள் மாற்றிவிடலாம்...

    ReplyDelete
  11. தலைப்பை மட்டும் வைத்து யாருமே இதை காதல் கவிதை என ஊகித்துவிட முடியாது...:)
    இன்று என் வலைப்பூவில்... மயில் அகவும் நேரம் 02 :00

    ReplyDelete
  12. தலைப்பை பார்த்தேன்
    கவிதையை வாசித்தேன்
    பல்ப் வாங்கினேன் சென்றேன்

    ReplyDelete
  13. ஹா...ஹா..கவிதை. காதல் கவலை....

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!