15 December, 2011

என்ன செய்யலாம் இந்த உலகை...?



ம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு 
மழுங்காமல் இருக்கிறது..!

விதிவசம் அகப்பட்டு
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
 
விடியும் ஒவ்வொறு நாளிலும்
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!

ம்பித்தான் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்
என்வீட்டில்...

ற்போது 
வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத 
குருவி ஒன்று...!


19 comments:

  1. நம்பிக்கைதான் வாழ்கை..
    அருமையான கவிதை..

    ReplyDelete
  2. நம்பிக்கைதான் நம் கை.

    ReplyDelete
  3. நம்பிக்கைதானே வாழ்க்கை!
    நன்று.

    ReplyDelete
  4. திரும்பவும் அதே கமென்ட் சூப்பர் மச்சி....

    ReplyDelete
  5. விடியும் ஒவ்வொரு நாளிலும தளிர்விடும் என் முயற்சிகளுக்கு அதுவே உரம் ஊட்டுகிறது. -என் நிலையும இதுதான். நம்பிக்கையில்தான் ஓடுகிறது என் வாழ்வும். மனதைத் தொட்ட கவிதைக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்ள சௌந்தர் சார்...

    ReplyDelete
  6. //விதிவசம் அகப்பட்டு
    இந்த மண்மீது வீழ்கையில்
    என்னைத் தூக்கிவிடுவது
    நம்பிக்கையே...!//

    - அருமையான வரிகள். நல்ல கவிதை. வாழ்த்துக்கள். தொடரவும்.

    தமிழ்மணம் வாக்கு 4.

    ReplyDelete
  7. இதுல உள்குத்து எதுவும் இல்லையே... இந்தியா மீது நம்பிக்கை இல்லாமல் தமிழக மக்கள் தனி நாடு கட்டுவதாக எடுத்துக் கொள்ளலாமா? அப்பாடா, கோர்த்து விட்டாச்சு

    ReplyDelete
  8. @suryajeevaகலக்கிட்டீங்க அண்ணே...

    ReplyDelete
  9. உங்களிடம் நம்பிக்கை பாடம் கற்பதற்கு வந்து தங்கிவிட்டதோ என்னமோ..:)

    ReplyDelete
  10. குருவியை சௌந்தர் அவர்கள் நன்றாக பார்த்துக்கொள்வார்.நம்பிக்கையுள்ளது.
    குருவியும் நம்பும் ஞாயிற்றுக்கிழமை தவிர......கவிதை நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  11. தமிழ்மணம் -6
    இன்ட்லி- 5
    தமிழ் 10 - 20

    ReplyDelete
  12. நம்பிக்கை தோய்ந்தாலும் வரிகளில் புது நம்பிக்கை பிறக்கின்றது..
    படங்களும் அழகு ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கவிதை அழகு வரிகள் அதே...

    ReplyDelete
  14. குருவியும் நாம் நல்லவர்கள் என நம்பித்தான்
    கூடு கட்டுகிறது எனக் கொள்ளலாமா ?
    நமபிக்கையூட்டிப் போகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 11

    ReplyDelete
  15. குருவிக்கும் ஒரு நம்பிக்கைதானே?

    ReplyDelete
  16. தற்போது
    வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
    என் வீட்டில் நம்பிக்கையில்லாத
    குருவி ஒன்று...!

    கவிதையில் நம்பிக்கை நிறையவே இருக்கிறது. நன்று
    நம்பிக்கையில்லாத குருவி ...?

    ReplyDelete
  17. அன்பின் சௌந்தர் - நம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரமே ! அது தும்பிக்கை போன்றது. குருவியின் நம்பிக்கையும் பாராட்டத் தக்கது. - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. வாழ்விற்கு ஆதாரம்
    நம்பிக்கை மட்டுமே....
    அதன் பலத்தை அழகாக சொல்லி நிற்கிறது கவிதை..

    ReplyDelete
  19. சௌந்தர்,

    ‘வீட்டில் நம்பிக்கையில்லாத குருவி...’

    தேசியத்தில் நம்பிக்கையில்லாத குடிமகன் வேண்டா வெறுப்பாய் தேசியத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பதாய் கொள்ளலாமா?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!