14 December, 2011

இதை பார்த்தால் பசிதீருமா..?


ஒரு சமயம் காங்கிரஸ் பேரியக்கத்தோடு தொடர்புடைய ஒரு பட அதிபரின் படத் தொடக்க விழாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் அழைக்கப்பட்டிருந்தார்.


படப்பிடிப்பைத் தொடங்கிவைத்து பெருந்தலைவர் பேசும்போது 'எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னாலும், தயாரிப்பாளருக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதால் நான் இவ்விழாவிற்கு வந்திருக்கிறேன்.


என்னை கைராசிக்காரன், அது, இது என்றெல்லாம் இங்கே புகழ்ந்து ‌பேசினார்கள். கைராசியை நான் நம்புகிறவன் இல்லை, உழைப்பை மட்டுமே நம்புகிறவன். 

என்னைப் படத் தொடக்க விழாவிற்கு கூப்பிட்டதும் படத்துக்கு என்ன பேர் வைச்சிருக்கீங்கன்னு கேட்டேன். அதற்கு பார்த்தால் பசி தீரும்-னு சொன்னாங்க. அதெப்படி பார்த்தால் பசிதீரும்? கார்லே வரும் போது கூட அதைப் பற்றித்தான் யோசனை பண்ணிக்கிட்டு வந்தேன்.


இங்கே எல்லோரும் பேசினபோதுதான் எனக்கு விவரம் புரிஞ்சது. நீங்க எல்லாம்  படாத பாடுபட்டு எடுக்கிற படத்தை ஏரளாமான மக்கள் பார்த்தாங்கன்னா உங்களோட பசி தீரும் அப்படித்தானேன்னேன்.” என்று சொல்ல கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

28 comments:

  1. நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. என்ன அழகான சொல்லாடல்... படிக்காத மேதை அவர் என்பதை நிரூபித்துள்ளார் காமராஜர். அரிய தகவலை அறியத் தந்ததற்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  3. படிக்கும் போதே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. இன்றைக்கு பெருந்தலைவர் இருந்திருக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறது இந்த சம்பவம்...
    உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளைப் பகிருங்கள்

    ReplyDelete
  4. இப்பேற்ப்பட்ட தலைவரை தானே தோற்கடித்தோம்.

    ReplyDelete
  5. நல்ல செய்தி..
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  6. நல்ல வேடிக்கையான விஷயம்....

    ReplyDelete
  7. பசி தீர்த்த காலமெல்லாம் போய்... இப்ப... திமிரு வரும் அது வரும் இது வரும்ன்னு படம் எடுக்குறாங்க...இதையெல்லாம் பாக்கும்போது இப்ப இருக்குறவங்க மேல கொலைவெறிதான் வருது...

    இவரை படிக்காத மேதை என்று சொல்வதைவிட... இவரின் முன்னால், மேதைகள் படிக்காதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்...

    ReplyDelete
  8. @தமிழ் உதயம்
    அதுக்குதான் வட்டியும் முதலுமாக சேர்த்து அனுபவிக்கிறோம் ................

    ReplyDelete
  9. சுவாரஸ்ய தகவல் பாஸ்

    ReplyDelete
  10. மிக சமயோசிதமான பதில். பதிவையிட்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள் சகோதரா.
    http://kovaikkavi.wordpress.com/2011/12/14/20-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/

    ReplyDelete
  11. இன்னிக்கு மனோ அண்ணன் சினிமா காரனுங்க முகத்திறைய அழகா கிழிச்சு இருக்கிறார்.. அத அன்னிக்கே காமராஜர் உணர்ந்திட்டார்

    ReplyDelete
  12. ஏழைக்குழந்தைகளின் பசியாற்றிய பெருந்தலைவரை பற்றி ஒரு அருமையான தகவல்.

    ReplyDelete
  13. அவர் உட்கார்ந்திருக்கிற ஸ்டைலும் கம்பீரமும். படத்தை ஆம் காமராஜர் படத்தை பார்த்தாலே பசி தீரும். அந்த பெரியவர் பிறந்த நாளில் நான் பிறந்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்

    ReplyDelete
  14. பெருந்தலைவர் மனசு ரொம்ப பெருசுய்யா, பகிர்வுக்கு நன்றி...!!!

    ReplyDelete
  15. அன்பின் சௌந்தர் - பெருந்தலைவரினை மறந்து விட்ட நிலையில் அவரைப் பற்றிய ஒரு அருமையான நிகழ்வினைப் பதிவாக இட்டமை நன்று. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அறிஞர் அண்ணாவோட சமயோசித பேச்சு எல்லோருக்கும் தெரியும் கர்மவீரரோட சாதுர்ய பேச்சை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  17. படிக்காத மேதை காமராஜர் என்று சொல்ல்வது தவறு என்று நினைக்கிறேன். அவர் உலகை படித்தவர்..

    ReplyDelete
  18. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. நன்றி சகோ பகிர்வுக்கு .....

    ReplyDelete
  20. அருமையான செய்தி!
    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. ஹா ஹா நல்ல வேடிக்கையான பதில்

    ஆனாலும் உண்மையும் கூட

    ReplyDelete
  22. பெருந்தலைவர் படிக்காதமேதை மட்டுமல்ல பிறர் பசியறிந்நதவரும் எனும் வரலாற்றை அறியவைத்தமைக்கு பராட்டுக்கள்

    ReplyDelete
  23. சினிமா விழாவுக்கு போனதால தலைவரும் பஞ்ச் டயலாக் பேசிருகாப்ல...:)
    இன்று என் வரிகளில்...முத்தப் பரிசோதனை...

    ReplyDelete
  24. அண்ணாவின் சாமர்த்தியமான பேச்சுக்கு இப்போ யாரும் இணையாகாது ...

    ReplyDelete
  25. சுவாரஸ்யமான செய்தி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!