17 December, 2011

மௌனகுரு ஒரு சிறப்பு பார்வை....

எத்தனைப்பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அமைதியாக இருப்பவர்களையும், அமைதியாலே மக்களுக்கு போதனை செய்பவர்கள்தான் மௌனகுரு ‌என்று அழைப்பார்கள். அவர்கள் செயல்பாடு பேச்சில் இருக்காது. செயலில்தான் இருக்கும்.

ஆனால் எதுவும் சொல்லாது, எதையும் செயலில் காட்டாது நமது இந்தியாவை ஆட்சி செய்கிறார் ஒரு மௌனகுரு அவரைப்பற்றிய வேதனையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு பதிவுதான் இது.

பொறுமை.. பொறுமை எதுக்காக படபடப்பாக பேசுறீங்க... அமைதியா இருங்க... இதோ நான் 7, 8 வருஷமா இப்படித்தானே  இருக்கேன் ஏன் என்னை பார்த்து கத்துக்கங்க...  எதுக்கும் அவசரப்படக்கூடாது என்ன நான் சொல்றது...!
  
என்னுடைய சாதனைகளை சொல்றேன் கேளுங்க...!
வடஇந்தியாவில் எவ்வளவு மதக்கலவரம் நடந்துச்சி நான் ஏதாவது வயைத்திறந்து கருத்தோ... கண்டனமோ.... சொன்னேனா..?

 பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் செஞ்சாங்க அதைப்பத்தி நான் ஏதாவது வயைத்திறந்தேனா..?

 மும்பை தாஜ் ஓட்டல் மீது  பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துனாங்க... அப்ப ஏதாவது நான் வாயை திறந்து பேசினேனா..?

 தமிழ்நாட்டுக்கும் கர்நாடாகாவிற்கும் காவிரிப்பிரச்சனை நடந்தது அதை பத்தி நான் ஏதாவது கருத்து சொன்னேனா, இல்ல அதுல தலையிட்டேனா...?

 இருங்க பாஸு.. நான் இன்னும் முடிக்கல....

 அப்புறம் ஆந்திராவில எவ்வளவு நாளா தனிமாநிலம் கேட்டு அடம்பிடிச்சிக்கிட்டு இருக்காங்க... அவங்க எவ்வளவு போராட்டம் பண்ணாலும், அரசுக்கு எவ்வளவு  நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், தேவையில்லாத நான் தலையிட்டு மத்தவங்கள பகைச்சிக்க மாட்டேன்.


 அவ்வளவு ஏன்... இலங்கையில் லட்சக்கணககான தமிழர்களை கொன்று குவிச்சாங்க...  நாட்டில் இருந்து எத்தனையோ போர் சொன்னாங்க.. கடிதமெல்லாம் போட்டாங்க... அதைப்பத்தி நான் ஏதாவது வாய்திறந்தேனா..?


இப்ப..! இந்த கூடங்குள பிரச்சனையிலும், முல்லைப்பெரியாறு பிரச்சனையிலும் நான் தலையிடவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கும் எனக்கும் என்ன இருக்கிறது. நான் இருப்பது டெல்லியில் நீங்க இருப்பது தமிழகத்தில் அது உங்க பிரச்சனை..

நீங்க எப்படிவேண்டுமானாலும் அடிச்சிக்கங்க ஏது வேண்டுமானாலும் பண்ணிக்கங்க நான் மட்டும் வரவும் மாட்டேன் வாயையும் திறக்க மாட்டேன்.


இவ்வளவும் சொல்லியும் நீங்கதான் பிரதமரு, நீங்க தான் தலையிடனும் அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு வந்தீங்கன்னா அவ்வளவு தான். அப்புறம் நான் ஏதாவது நாட்டுக்கு சுற்றுப்பயணம் போயிடுவேன்.


 நான் அழுகிறேனா.. அது தூசு தம்பி.. நான் எதுக்கும் அசரமாட்டேன்.

 எனக்கு இலங்கைத் தமிழர்களை விட அந்த நாட்டு ஆட்சியாளர்கள் மீதுதான் எனக்கு அக்கறை. மேலிடத்தில் இருந்து அதான் எனக்கு உத்தரவு... மேலிடம்மன்னா யாருன்னு கேட்கிறீங்களா..?

என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவங்க கூட நான் எது சொன்னாலும் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க... கேரளா காங்கிரஸ் காரனும், ஆந்திரா காங்கிரஸ் காரனும் எப்படிங்க என் பேச்சை கேட்பாங்க...

 இந்த ராஜா, எப்போ என்ன 2ஜி கேஸ்ல மாட்டிவிடுவான்னு நானே பயந்துகிட்டு இருக்கேன். இதுல முல்லை பெரியாறு... கூடங்குளம் ன்னு சொல்லிக்கிட்டு.. போங்கய்யா போங்க...

  பாருங்க தம்பி, நான் யார் பேச்சுக்கும் போக மாட்டேன். என்னையும் எந்த விளையாட்டுக்கும் கூப்பிடாதீங்க...

  பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் அப்படின்னு  எதுல வேணுமனாலும் என்னைப்பத்தி போடுங்க அதைபத்தியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். நான் ரொம்ப நல்லவன். இது என்தாயி சோனியா ஜி-க்கு தெரியும்.


  இதோ பாருங்க கடைசியா நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். சோனியா ஜீ சொல்றதை மட்டும் செய்யறுதுக்கு மட்டும்தான் நான் ஆளு.. உங்க இஷ்டத்துக்கு கேட்டுகிட்டே போன எப்படி..? கேட்டுக்கங்க அதைப்பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை.

பாருங்க தல... நீங்க ஆட்சி செய்யறது எங்கள மாதிரி பொது மக்களுக்கும், நாட்டு இருக்குற ஏழைகளுக்கும் தான் அதை மட்டும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க... 

ஒரு பிரமதரா இருந்துகிட்டு நாட்டு நடக்கிற அக்கிரமங்களையும், அநியாயங்களையும், ஏழைகளுடைய வாழ்வாதாரங்கள் பறிபோகரதையும் பார்த்துக்கிட்டு இப்படிஇருந்தா நாம் எப்படி முன்னேறறுது....

மக்களே.. சினிமான்னு நினைச்சிகிட்டு படிக்கவந்திருந்தாலும் பரவாயில்லை... இதுபோன்ற பதிவுகளுக்கு உங்களுடைய ஆதரவை தாங்க...
அப்பத்தான் தொடர்ந்து சமூக பிரச்சனைகளைப்பத்தி போச முடியும்.

26 comments:

  1. அடடா.....சினிமா விமர்சனம் என்று நினைத்தேன் ....அட்டகாசம் ....அருமை...

    ReplyDelete
  2. சினிமான்னு உள்ள வந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னது நல்லது..உள்ளே வந்தால்தானே கருத்து சென்றடையும்..நல்ல தலைப்பு..நல்ல விசயம்..

    ReplyDelete
  3. அட டைட்டில் நல்லா பொருந்துதே மன்மோகன் சிங்குக்கு

    ReplyDelete
  4. மௌனகுரு பெயருக்கு மிகச் சரியான நபர்நம் பிரதமர்தான்
    நீங்கள் விளக்கிச் செல்லும் விதம் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  5. தொடர்ச்சியா சினிமா பதிவுன்னு நெனச்சேன்.. ஏமாந்துட்டேன்..

    ReplyDelete
  6. யோவ்.... நீ எப்புடிய்யா என் தலீவரப்பாத்து, இப்புடி ஒரு பதிவு போடலாம்?
    காங்கிரஸ்காரனெல்லாம் இளிச்சவாயா?

    ReplyDelete
  7. இனிமே, எங்க தலீவரியோ, அன்னையையோ, ராகுல்ஜியையோ பத்தி எதுனா எழுதுன..... உன்னோட பிளாக் இருக்காது... சொல்லிட்டேன்....

    ReplyDelete
  8. விமர்சனம் வடிவேலுவை ஞாபகம் படுத்துது....

    ReplyDelete
  9. மக்களே.. சினிமான்னு நினைச்சிகிட்டு படிக்கவந்திருந்தாலும் பரவாயில்லை...

    எனனே கொடுமை !!!!!

    ReplyDelete
  10. படமும் விளக்கமும் அற்புதம்.ஆனால் சம்பந்தப்பட்டவர் பதிவைப் பாக்கணுமே சௌந்தர் !

    ReplyDelete
  11. ஆங்காங்கே எழுத்து பிழை இருந்தாலும் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்குது ஹி ஹி...!!!

    ReplyDelete
  12. யோவ் ஈரோடு பதிவர் சந்திப்புக்கு போகலையாக்கும்...???

    ReplyDelete
  13. உண்மையான மௌனகுரு யாரென்று காட்டிவிட்டீர்கள்

    ReplyDelete
  14. அருமை!
    சம்மட்டி அடி ஆனாலும்
    வலிக்காது பதவி முடியும் வரை
    தினம் இரண்டு வெளி நாடு போவார்!


    சங்கப் பதிவின் கூட்டத்திற்குத்
    தாங்களும் மற்ற நண்பர்களும் வருவதை உறுதி செய்து என் வலையில் மறு மொழி
    யிட வேண்டி யுள்ளேன் கவனிக்க!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. கற்பனை என்றாலும் நிஜம்..

    ReplyDelete
  16. சினிமா விமர்சனமோ என வந்தேன் ,அரசியல் ,பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. Thousand Wala pattasu sir unga pathivu. Ithai pola pathivai kandippa Naan aatharippen. Cenema pathivugalai than aatharppathillai.
    TM 10.

    ReplyDelete
  18. இதுபோன்ற பதிவுகளுக்கு உங்களுடைய ஆதரவை தாங்க...
    அப்பத்தான் தொடர்ந்து சமூக பிரச்சனைகளைப்பத்தி போச முடியும்.

    ReplyDelete
  19. அருமையான விளக்கம்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. கோர்வையான தொகுப்பு..இரசித்தேன் நண்பரே..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. அசத்தலான கமெண்ட்ஸ் நண்பரே...
    உச்சியில் இருப்பவரின் உச்சந்தலையில்
    கொட்டினாற்போல..
    ஆனால் வலிக்காத மாதிரியே இருக்கிறாங்க...

    ReplyDelete
  22. Super... Timing Article....
    S. Lurthu xavier

    ReplyDelete
  23. மேலே இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே விமரிசிக்கப் படுகிறார்கள். என்ன செய்தாலும் விமரிசனத்துக்கு உள்ளாவார்கள். அவரவர் வலி அவரவருக்கு.

    ReplyDelete
  24. நல்லப் பதிவு நண்பரே...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!