மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற ஒரு தனிமனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் மலையூர் மம்பட்டியான். ராபர்ட் ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன், சரிதா முக்கிய வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. மிகப்பெரிய வெற்றி பெற்று அதில் மம்பட்டியான நடித்த தியாகராஜனை தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிடமுடியாது.
கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு அதே கதையை எடுத்துகொண்டு தியாகராஜன் தன்னுடைய மகனை வைத்து இயக்கியிருக்கிறர். தன்னுடைய பெற்றோரை கொலை செய்யும் பண்ணையாரை கொன்று விட்டு காட்டுக்குள் தப்பியோடும் மம்பட்டியான், அதன் பிறகு பணக்காரர்களை கொன்று அவர்களிடம் கொள்ளையடித்து அதை பலகிராமங்களுக்கு கொடுத்துவருகிறான். காவல் துறை அவனை பொறிவைத்து பிடிக்க முடியாமல் போக மம்பட்டியான் கூட்டாளி ஒருவனிடம் தூப்பாக்கியை கொடுத்து அவனை கொன்று விடுவதுதான் கதை.
மம்பட்டியான் என்ற கதையை முதல் முறையாக பார்க்கும்போது மிகவும் ஆர்வத்துடனும், அடுத்து என்னவாகும் என்ற பரபரப்பில் மிகவும் சுவாரஸ்யம் இருந்தது. இதுதான் கதை என்று தெரிந்துவிட்டபிறகு. தற்போதைய மம்பட்டியானை தொடர்ந்து பார்க்கும் ஆர்வத்தை இத்திரைப்படம் கொடுக்கவில்லை.
தற்போதைய மம்பட்டியானாக பிரசாந்த், அப்பா நடித்த கதாபாத்திரத்தில் கொஞ்சமும் ஒட்டவில்லை. மிகவும் குண்டாக காணப்படுகிறார். முகத்தை மிகவும் கோவக்காரராக காட்டும் முயற்சியில் மிகவும் சிரமப்பட்டு அதுவராமல் பார்ப்பதற்கு என்னவோபோல் இருக்கிறது. படம் முழுக்க நடிக்கவேண்டும் என்பதற்காக அப்பா சொன்ன வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார். வசனம் கதைக்கு அதிகம் தேவையில்லை என்பதால் தப்பிக்கமுடிகிறது. சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் வேகம் கொடுத்திருக்கிறார். யாதார்த்த காட்சிகள் அவருக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை.
காட்டுவழியாக தன்னுடைய திருமணத்திற்கு போகும் மீராஜாஸ்மினை கொள்ளையடிக்க தடுத்து பின் அவரது திருமணம் என்று தெரிந்து அவரை அனுப்பி வைக்கிறார். ஆனால் என்னைவிட்டுவிட்டு ஓடிவந்த இவரை திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி பின்பு மம்பட்டியான் ஊரிலே அடைக்களம்.
டூயட் மற்றும் காதல் கட்சிகள் அதிகம் இல்லை. சரிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று ஓரளவுக்கு சபாஷ் பெருகிறார் கண்ணம்மாவாக மீரா ஜாஸ்மின். இவருக்கு ஊரில் இருந்து காட்டுக்கு சென்று வரும் வேலை அவ்வளவுதான்.
ஐ.ஜி. ரஞ்சித் கதாபாத்திரத்தில் பிராகாஷ்ராஜ் இவருக்கும் அதிக வேலைஇல்லை. காட்டில் ஓடுவதும் பிரசாந்திடம் அடிக்கடி வசனம்பேசி அரை பிடிக்கமுடியாமல் அவதிப்படுவதும் இவரது வேலையாக இருக்கிறது. இறுதி காட்சிகளில் போலீஸ்படை மம்பட்டியான் கூட்டாளிகளை சுற்றிவளைக்க அவர்களை சுடும் வேலையை மட்டும் இவர் செய்திருக்கிறார்.
மிக மற்றும் நீண்ட இடைவேளைக்குபிறகு வடிவேலுவை திரையில் பார்க்க முடிந்தது. சின்னப்பண்ணை என்றும் ஜமீன்ந்தார் என்றும் ஊரில் வளம்வரும் ஒரு பெரும்புள்ளியாக அவருடைய வேலையை சரியாக செய்திருக்கிறார். கதையில் மாற்றம் இல்லை என்பதால் வடிவேலுவை சரியான அளவுக்குமட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
முமைத்தான் படத்தில் கவர்ச்சிகாட்டி கலக்குகிறார். இவருக்கு இரண்டு பாடல் மற்றும் மம்பட்டியானுக்கு ஊரில் அடைக்கலம் கொடுப்பவர் என்ற வேலையோடு இவர் பணிமுடிகிறது. போலீஸ் இவரை வைத்து மம்பட்டியானை பிடிக்க வலைவிரிக்கும்போது மம்பட்டியானை காப்பாற்ற தற்கொலை செய்துக்கொள்கிறார். இவரிடம் நடிப்பை தவிர்த்து வெறும் கவர்ச்சிமட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இடைவேளைக்கு பிறகு படம் ஓடோ ஓடு என்று ஓடுகிறது. தற்போது முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால் மலை காடு என்று போலீஸை அங்கிட்டு இங்கிட்டும் ஓடவிட்டு பார்ப்பவர்களை கடுப்பேற்றுகிறார் இயக்குனர்.
காட்டுவழி போறப்பெண்ணே கவலைப்படதோ பாடல் டைட்டில் போடும்போதே போட்டு விடுகிறார்கள். மற்ற பாட்டு ஏதும் மனசில் நிற்கவில்லை. இசைக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதால் தமன் என்பவரை பயன்படுத்தி காசை மிச்சம் பிடித்திருக்கிறார்கள்.
ஒரு தனிமனிதனின் உண்மைகதை என்பதால் ஏதும் மாற்றம் செய்யமுடியாமல் அப்படியே எடுக்கப்பட்டுவிட்டது. ஆகையால் வேறு எந்த சுவாரஸ்யமும் சேர்க்க முடியாமல் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது.
கதை, வசனம், திரைக்கதை, கலை, இயக்கம் என அனைத்து வேலையும் தியாகராஜன் ஏற்று உருவாக்கி தான் இப்போதும் அனைத்து வேலையும் செய்ய முடியும் என்று நிறுபித்திருக்கிறார்.
வெகு நாட்களுக்கு பிறகு இந்த படத்திற்கு நான் சென்ற காரணம்.
ஒருசில கிராமத்துக் காட்சிகள் எங்களுடைய கிராமத்தில் எடுக்கப்பட்டது ஆகும்.
சின்னபண்ணை வடிவேலு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நெல் மூட்டைகளை வீட்டுக்கு ஒன்றாக போடும் காட்சியும்,
ஊருக்குள் வரும் மம்பட்டியானை போலீஸ் வலைத்து பிடித்து ஜீப்பில் கட்டி அழைத்துச் சொல்லும் ஒரு சில காட்சிகளும் எங்களுடைய கிராமத்தில் எடுக்கப்பட்டது ஆகும்.
அதில் நடித்த போலீஸ்காரர்களில் எங்கஊர் இளைஞர்களும் அதிம் இடம்பெற்றிருந்தனர்.
பிரசாந்தை மீண்டும், இழந்த இடத்தை பிடிக்கவைக்கும் முயற்சி சற்றே பின்னடைவில்தான் இருக்கிறது. பிரசாந்த் தன்னுடைய உடல் எடையை குறைத்து வேறு ஒரு நல்லகதையாக இருந்தால் முயற்சிக்கலாம்.
எல்லா வோட்டும் போட்டாச்சு..
ReplyDeleteஒ.. படம் அவ்வளவு தானா?
ReplyDeleteஆமா, ஊர்ல படப் பிடிப்பா? அப்ப மீரா ஜாஸ்மீன் எப்படி இருக்காங்க?
ReplyDelete//////
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
ஆமா, ஊர்ல படப் பிடிப்பா? அப்ப மீரா ஜாஸ்மீன் எப்படி இருக்காங்க?
////////
அவங்கள மாதிரியே இருந்தாங்க...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDelete//////
!* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
ஆமா, ஊர்ல படப் பிடிப்பா? அப்ப மீரா ஜாஸ்மீன் எப்படி இருக்காங்க?
////////
அவங்கள மாதிரியே இருந்தாங்க...
hi hi hi ஹி ஹி ஹி
நல்ல வேளை, முன்னாலேயே சொன்னீங்க. இல்லைன்னா...லும் பாத்திருக்க மாட்டேன். :p
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
படம் ஓரளவுக்காவது தேறுமா?
ReplyDeleteஇன்னொரு விமரிசனம்.பாவம் பிரசாந்த்.ஏற்கனவே நொந்து போயிட்டாரு.இப்ப இது வேறயா?
ReplyDelete//இசைக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதால் தமன் என்பவரை பயன்படுத்தி காசை மிச்சம் பிடித்திருக்கிறார்கள்//
ReplyDeleteyou did a music review for entire film about two lines. Great!
சொந்த ஊர் படமா?
ReplyDeleteஉங்க பொறுமைய கண்டு நா வியக்கேன்...
ReplyDeleteஉங்க விமர்சனம் முழுசா நா இரசிக்கேன்..
முமைத்கானுக்கு வெறும் ரெண்டே ரெண்டு பாட்டுதான் ன்னு தெரிஞ்சு அந்த தியாகராஜன நா வெறுக்கேன்...
///////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
சொந்த ஊர் படமா?
///////
கிராமத்தில் நடக்கும் படியான சில காட்சிகள் மட்டும் மூன்று வாரங்கள் தங்கி எடுத்தாங்கன்ன...
நம்ம கருண் நடிச்ச சீன் கட் பண்ணிட்டாங்கலாமே? அப்படியா?
ReplyDeleteஇந்த படம் பாக்ரதுக்காக தான் மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆ இருந்துச்சா? கொடுமை... ஹி ஹி
ReplyDeleteவாசிக்க:
குடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை
///////
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் said... [Reply to comment]
நம்ம கருண் நடிச்ச சீன் கட் பண்ணிட்டாங்கலாமே? அப்படியா?
///////////
பிரசாந்த்தேட மார்கெட் சரிஞ்சிடக்கூடாதுன்னு... கேட்டு கொண்டதால் கட்பண்ணிட்டாங்க...
என்னையும் ஒரு இன்ஸ்பெக்டர் வேஷம் பேர்ட சொன்னாங்க... நான்தான் லீவு போட முடியாதுன்னு சொல்லிட்டேன்...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteஎன்னையும் ஒரு இன்ஸ்பெக்டர் வேஷம் பேர்ட சொன்னாங்க... நான்தான் லீவு போட முடியாதுன்னு சொல்லிட்டேன்...
//
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடா?அதுக்காக ஞாயித்துக்கிழமையும் லீவு போட மாட்டேன்னு அடம பிடிக்கறிங்கலாமே?
வடிவேலுக்கு இது திருப்புமுனையாகுமா?
ReplyDeleteகவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDelete///////
தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply to comment]
நம்ம கருண் நடிச்ச சீன் கட் பண்ணிட்டாங்கலாமே? அப்படியா?
///////////
பிரசாந்த்தேட மார்கெட் சரிஞ்சிடக்கூடாதுன்னு... கேட்டு கொண்டதால் கட்பண்ணிட்டாங்க...
என்னையும் ஒரு இன்ஸ்பெக்டர் வேஷம் பேர்ட சொன்னாங்க... நான்தான் லீவு போட முடியாதுன்னு சொல்லிட்டேன்.
>>>
அப்ப தைரியமாய் படத்தை பார்க்கலாம்
கவிதை வீதியின் விமர்சனம் நன்றாக உள்ளது
ReplyDeleteகாதல் - காதல் - காதல்
விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.
ReplyDeleteவிமர்சனம் அருமை!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
முன்பு மம்வெட்டியானை மிக ஆர்வமாகப் பார்த்துதும், தியாகராஐன் நடிப்பை விரும்பியதும் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/2011/12/16/21-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%86%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81/
உங்களுக்கு தெரிந்த கதை ஆகையால் சுமார் விமர்சனம்...பழைய படம் 1983 ல் வந்தது. இது 2011 படம் 28 வருஷம் ஆச்சு...உங்க 20 வருஷ கமெண்ட்டு தப்பு !
ReplyDelete/////
ReplyDeleteஆகாயமனிதன்.. said... [Reply to comment]
உங்களுக்கு தெரிந்த கதை ஆகையால் சுமார் விமர்சனம்...பழைய படம் 1983 ல் வந்தது. இது 2011 படம் 28 வருஷம் ஆச்சு...உங்க 20 வருஷ கமெண்ட்டு தப்பு !
///////
சரிசெய்து விட்டேன் தலைவரே....
1983 என்று போட்டிருக்கிறேன். கணக்கில் அல்ல டைப்பிங்கில் வந்த பிழை...
விமர்சனம் அருமை நண்பரே!
ReplyDelete