19 December, 2011

ஆட்சியை பிடிக்க சசிகலா சதியா..? ஜெயலலிதா பகீர் குற்றசாட்டு...!




இன்றைபொழுது அதிமுக-வினற்க்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான நாள். அது சசிகலா உள்ளிட்ட மன்னர்குடிவம்சத்தை சார்ந்த 12 பேர்  கூண்டோடு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தால் அதைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க சசிகலா மற்றும் அவரது கூட்டாளிகள் தரப்பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஜெயலலிதா, ஒட்டுமொத்தமாக அத்தனைபேரையும் அதிமுக-வை விட்டு விரட்டி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

என்ன நடந்தது என்று பார்ப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். ஜெயலலிதா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்தேறி விட்டதைபார்த்து அதிர்ந்து போய்த்தான் சசிகலா உள்ளிட்ட அந்த கும்பலை விரட்டி விட்டுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பெங்களூர் கோர்ட்டில் 14 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை மையமாக வைத்து சசிகலா ஒரு அபாரமான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக நிச்சயம் தீர்ப்பு வரும். எனவே அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிடலாம். அப்படி நடந்தால், தமிழகத்தின் ஆட்சியைப் பிடிப்பது என்பதுதான் இந்த சதித் திட்டத்தின் மையப் புள்ளி என்கிறார்கள் 'போயஸ் கார்டனுக்கு' நெருக்கமானவர்கள்.

ஜெயலலிதா 3-வது முறையாக முதல்வர் பதவிக்கு வந்த நாள் முதலே இந்த சதித்திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த ஆரம்பித்து விட்டது சசிகலா தரப்பு என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

முதலில், ஜெயலலிதாவுக்கு அரசு நிர்வாகத் தகவல்கள், ஏனைய முக்கியத் தகவல்கள் எதுவும் போகாமல் தடுக்க ஆரம்பித்துள்ளது இந்த 'குரூப்'. உளவுத்துறைத் தகவல்களை ஜெயலலிதாவிடம் போகாமல் திட்டமிட்டு தடுத்துள்ளது. ஆரம்பகட்டமாக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனை உளவுத்துறை பொறுப்பிலிருந்து திட்டமிட்டு அகற்றியுள்ளனர். அவருக்குப் பதில், ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலை கொண்டு வந்துள்ளனர்.

சசிகலா தரப்பிலிருந்து நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் உளவுத்துறை தகவல் எதையும் நேரடியாக ஜெயலலிதாவுக்குக் கொண்டு போகவே இல்லை என்கிறார்கள். அதற்கு மாறாக சசிகலாவிடமே நேரடியாக உளவுத் தகவல்களை கொடுத்து வந்துள்ளார். இதில் சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே மாலைக்குமேல் ஜெயலலிதாவை யாரும் சந்திக்காத வகையில் திட்டமிட்டு ஜெயலலிதாவையே குழப்பி வைத்துள்ளனர்.

இதனால் ஒவ்வோறு நாளும் மாலைக்கு மேல் ஜெயலலிதாவை உளவுத்துறையினர் மட்டுமல்லாமல் யாருமே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெருங்கிய அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள், உயர் காவல்துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் என யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அத்தனை பேருமே சசிகலாவை பார்க்க வேண்டிய நிலையை செட்டப் செய்து உருவாக்கியுள்ளனர். அதாவது திட்டமிட்டு செய்துள்ளனர்.

இதெல்லாம்  முதலில் ஜெயலலிதாவுக்குப் புரியவில்லை என்கிறார்கள். பொன்.மாணிக்கவேலின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாவுக்குச் சந்தேகம் வந்தபோதுதான் நடந்தது, நடக்கிறது, நடந்து கொண்டிருப்பது என்னவென்பது லேசாக அவருக்குப் புரிந்திருக்கிறது. இதனால்தான் பொன்.மாணிக்கவேலை அவர் தூக்கினார்.

இதையடுத்து சசிகலா தரப்பில் என்ன நடக்கிறது என்பதை அவர் சற்று சீரியஸாகவே கண்காணிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தன்னைச் சுற்றி எவ்வளவு பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது என்பது அவருக்குப் புரிந்து அதிர்ந்திருக்கிறார். அதாவது கடந்த 6-மாதமாக தான் பெயரளவுக்கே முதல்வராக இருந்திருப்பதையும், உண்மையில் நிர்வாகத்தில் முழு அளவில் சசிகலாவே தலையிட்டு வந்திருப்பதும் அவருக்குப் புரிந்திருக்கிறது.

இதையடுத்து சசிகலாவுக்கு நெருக்கமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தை திட்ட செயலாக்கல் துறை செயலாளர் பதவியிலிருந்து தூக்கினார் ஜெ,. இந்தத் துறைதான், அதிமுக அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்த இலவசத் திட்டங்களை இந்ததுறை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரான பன்னீர்செல்வத்தை வைத்து பெரிய அளவில் விளையாடியுள்ளார் சசிகலா என்கிறார்கள். மேலும் பன்னீரை வைத்து நடராஜனும் பெருமளவில் காரியங்கள் சாதித்துள்ளாராம். பல முக்கிய நியமனங்களில் தனக்கு வேண்டியவர்களை போட்டிருக்கிறார் நடராஜன் என்கிறார்கள்.

மேலும் தலைமைச்செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கியிடமே சசிகலா தரப்பு நேரடியாக உரச, விஷயம் ஜெயலலிதாவுக்கு போயுள்ளது. சாரங்கியே இதுகுறித்து நேரடியாக புகார் தர கோபமான ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தைத் தூக்க முடிவு செய்தார். இதை உணர்ந்து பன்னீரே பதவியை விட்டு போய் விட்டார்.

மொத்தத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சதி, அவர்களை மீறி நாம் நடந்து விடக் கூடாது என்று நடராஜனுடன் சேர்ந்து சசிகலா போட்ட திட்டம் உள்ளிட்டவைதான் ஜெயலலிதாவின் விஸ்வரூப கோபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

போயஸ் தோட்டத்தை மையமாக வைத்து நடந்துள்ள இந்த ரகசிய செயல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

18 comments:

  1. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இதுல ஏதோ உள்குத்து இருக்கு தலைவரே..

    ஏற்கெனவே இதுமாதிரி ஒருமுறை நடந்திருக்கு,,,

    ReplyDelete
  3. //
    ஏற்கெனவே இதுமாதிரி ஒருமுறை நடந்திருக்கு///

    நெறைய முறை நடந்து இருக்கு. ஆனா, இன்னிக்குத்தான் ரியாக்சன் அதிகம்...

    :-)

    ReplyDelete
  4. விரிவான அரசியல் அலசல்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  5. எவ்ளோ நாளைக்குன்னு பார்போம்..

    ReplyDelete
  6. ஹா ஹா! நீங்கள் எப்பொழுது தட்ஸ் தமிழ் நிருபர் ஆனிங்க. ;)

    ReplyDelete
  7. Thank you for the infomation. vaalthukal.
    Vetha. Elangathilakam.
    http://kovaikkavi.wordpress.com/2011/12/19/42-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4/

    ReplyDelete
  8. //போயஸ் கார்டனுக்கு' நெருக்கமானவர்கள்.//

    யாரு தலைவரே இவிங்க...? எனக்கு மட்டுமேதும் சொல்லமாட்டேங்கிராய்ங்க?

    ReplyDelete
  9. இப்படிபட்டவர்கள் சாப்பாட்டில் விஷம் வைத்து அம்மாவை கொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்...???

    ReplyDelete
  10. தம்பி, பார்த்து சூதானமா இருக்கசொல்லு அம்மாவை...!!!

    ReplyDelete
  11. Arumai Sago. Nanraaga arasiyal patri eluthukirirgal.
    Tamilmanam vote potachi. Appave vote poda try panninen. Mudiyala.

    ReplyDelete
  12. சூடான அரசியல் அலசல்..

    நண்பரே..எனினும் மறுபடியும் இருவரும் ஒன்று சேரவே வாய்ப்பு அதிகம் என கருதுகின்றேன்

    ஏற்கனவே பிரிந்து ஒன்று சேர்ந்தவர்கள்தானே..

    ReplyDelete
  13. சசிகலா நீக்கம்! காரண காரியங்களை ந்ன்றாக எழுதிய்ள்ளமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. இது இப்ப பழைய நியூஸ் ஆகிடுச்சி... நேத்தே தெவிட்ட தெவிட்ட எல்லோருடைய பிலாக்கிலும் படிச்சுட்டேன்...

    ReplyDelete
  15. நீங்கள் எழுதியுள்ளபடிதான்
    நடந்திருக்க வேண்டும்
    அதன் விளைவே இந்த நடவடிக்கை! ஐயமில்லை!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!