20 December, 2011

யாரும் வெளியே செல்லக்கூடாது.. ! அம்மாவின் அதிரடி உத்தரவு...!



பூமியில் வர்ணஜாலம் செய்தது
திரண்ட வந்த மேகம்...!

ன்னையின் உத்தரவு 
மழை பெய்துகொண்டிருக்கிறது
யாரும் வெளியில் போக கூடாதென்று..!


ழைக்கு பயந்து 
மூடப்பட்டுவிட்டன என்வீட்டு கதவுகள்..!

துருபிடித்த கம்பிகள் வழியே
சின்னதாய் சாரல் வருகிறதென்று 
ஜன்னல்களும் அடைக்கப்பட்டு விட்டன...!
 
டி..! ‌மின்னல்...! மழை..!
அமர்க்களப்பட்டது பூவுலகம்..!
 
மைதி..! கண்டிப்பு..! உத்தரவு...!
வீட்டுக்குள் முடக்கிக்கிடக்கிறோம் அனைவரும்..!
 
த்தனை தடைகளையும் மீறி
கதவைத்திறந்து...
மழையில் நனைந்து...
 மகிழ்ந்துவிட்டு திரும்புகிறது...
 

யாருக்கும் தெரியாமல் 
என் மனசு...!


22 comments:

  1. நல்லா இருக்கு மச்சி....

    ReplyDelete
  2. மழைக்கு பயந்து
    மூடப்பட்டுவிட்டன என்வீட்டு கதவுகள்..!
    >>
    வீட்டிலிருக்க்றவங்களுக்கு டிமிக்கி குடுத்துட்டுடான் இந்த கவிதையா?

    ReplyDelete
  3. //விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
    மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!//

    - அருமை சகோ. ரசிக்கத் தகுந்த வரிகள்.

    - தமிழ்மணம் வாக்கு 5.

    ReplyDelete
  4. தலைப்பைப் பார்த்து ஏதோ வென பதிவுக்குள் நுழைந்தால்
    மனம் குளிர்வித்துப் போகும் அழகிய கவிதை
    அதிலும் இறுதி சொற்றொடர் அருமைய்லும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  5. தலைப்பை எழுதிட்டு கவிதையை யோசிச்சிங்களா? சூப்பர்யா...


    வாசிக்க:
    பிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்

    ReplyDelete
  6. மன்னிக்கவும் சகோ. என் முந்தைய கருத்துரையை நிக்கி விடவும்.அது புலவர் ராமானுஜம் அவர்களுக்கு நான் எழுதிய கருத்துரை. காப்பி பேஸ்ட் பிரச்சினையால் தவறு நேர்ந்து விட்டது. சாரி.

    உங்கள் கவிதை அருமை.

    தமிழ்மணம் வாக்கு 5.

    ReplyDelete
  7. இடி..! ‌மின்னல்...! மழை..!
    அமர்க்களப்பட்டது பூவுலகம்..!

    /
    தலைப்பு பார்த்து அமர்க்களப்பட்டது பதிவுலகம்.

    ReplyDelete
  8. கவிதை நடை கண்டு வியந்தேன்,,,, ஆமா தலைப்பு யாரையோ சொல்ற மாதிரி இருக்கே கவிஞரே ..

    ReplyDelete
  9. பொல்லாத ரசனைக்கார மனசுய்யா உங்களோடது... அருமையான கவிதை.

    ReplyDelete
  10. அருமையான கவிதை சௌந்தர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. அரசியல் தலைப்பு.
    ஆனால்
    அழகான படைப்பு.

    ReplyDelete
  12. தலைப்புக்கு முந்தய டிரென்ட் "அது" நமக்கு தேவையா அப்பிடி இருந்த டிரென்ட் இப்போ "அம்மா அதிரடியா" மாரிடிச்சு ஹி ஹி தம்பி கலக்கல்...!!!

    ReplyDelete
  13. நல்ல உத்தரவு...
    எல்லாருகுமேதான்

    இது கவிதை பத்தி இல்லை - தலைப்பு பத்தி

    ReplyDelete
  14. அக்கறை மிகுந்த உத்தரவு.....

    ReplyDelete
  15. டைமிங்கிற்கு ஏற்ற டைட்டில்

    ReplyDelete
  16. ஒரே கவிதையா இருக்கு:)

    ReplyDelete
  17. அன்பின் சௌந்தர் - அருமைஅருமை - அதுதான் மனசு - சுதந்திரமாகச் சுற்றித்திரியும் - அதற்கு அடிமைத்தளை பிடிக்காது. நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!