இதுவரை நீங்கள் பார்க்காத என் இன்னொரு முகத்தை, என் மற்றுமொறு பக்கத்தை உலகத்தமிழ்களோடு பகிர்ந்துக்கொள்ளவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரியர் பணி மற்றும் அச்சுபணி (Printing Press), ஆகியவையுடன் காவல்துறையிலும் என்னுடைய பரிமாணம் தொடர்கிறது.
மேல்நிலைப் படிப்பை முடித்தபிறகு கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் முயற்சிக்கும் ஒரே அரசுப்பணி எதுவாக இருக்கும் என்றால் அது தமிழ்நாடு காவலர் வேலைதான். நானும் 5 ஆண்டுகளாக தொடர்ந்து காவலர் பணிக்கு முயற்சி எடுத்தேன். எல்லா பயிற்சியிலும் வெற்றிபெற்று தேர்வு வரை செல்வேன் அதன்பிறகு அவ்வளவுதான். எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளேன் என்பது கூட தெரியாது. அதன்பிறகு அந்த முயற்சியை விட்டுவிட்டு எங்கள் தொழிலான அச்சுப்பணிக்கு வந்துவிட்டேன். பிறகு ஆசிரியர்.
காக்கி உடை உடுத்தவேண்டும் என்ற என்னுடைய ஆதங்கம் மற்றொறு வழியில் எனக்கு வந்தது. அது தமிழ்நாடு ஊர்க்காவல் படை. திருவள்ளூர் மாவட்டம் 1997-ல் புதியமாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு காவல் துறையும் புதியதாக உறுவானது. 1999-ல் உறுவாக்கப்பட்ட ஊர்க்காவல் படையில் நான் இணைந்தேன். 12 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையோடு இணைந்து பணியாற்றிக்கொண்டுடிருக்கிறேன். நான் பணிப்புரிவது C5- வெங்கல் காவல் நிலையம். தற்போது பதவி உயர்வுபெற்று ஊத்துக்கோட்டை உட்பிரிவில் பணியாற்றும் ஊர்காவல் படைக்கு உதவி படைபிரிவு தளபதியாக (Asst. Platoon Commander) இருக்கிறேன்.
ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 6 ஊர்க்காவல் படையினர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அனைவரும் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிடுவோம். அதன்பிறகு உயர்அதிகாரிகளின் வசதிக்கு எற்றார்போல் ஒரு நாளில் கொண்டாடுவோம் அந்த கொண்டாட்டம் சனிக்கிழமை (28-01-2012) அன்று நடந்தது. அந்த விழாவைகுறித்த பதிவுதான் இது.
காலை 7.00 மணிக்கு அனைவரும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலக வளாகத்தில் கூடினோம். 8.00 மணிக்கு காலை சிற்றுண்டி. 9.00 மணிக்கு நகருக்குள் தலைகவசம் அவசியம் குறித்த ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினோம். இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பளர் திருமதி. வனிதா அவர்களும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் அவர்களும் துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வுக்கு எங்கள் பரப்பு தளபதி (Area Commander) திருமதி ராதிகா வித்யாசாகர் அவர்கள் தலைமையேற்றார். (இந்த ஊர்வலத்தில் முதல் ஆளாக நின்றது நான்தான்) 60 இருசக்கர வாகனத்தில் இருவர் வீதம் இருவரும் தலைகவசம் அணிந்துக்கொண்டு நகர்முழுவதும் வளம்வந்து SP அலுவலகத்தில் முடிவுவெற்றது. ஒரு குழு நகரில் நடந்து சென்று தலைகவசம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.
(விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கிறார் காவல் கண்காணிப்பாளர் திருமதி வனிதா, கூடுதல் SP திரு செந்தில்குமார், பேரணியின் முதலில் இருப்பது நானே)
(நடந்து சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்க தயாராகிறது மற்றொறு குழு) வலது ஓரத்தில் எங்கள் ஏரியா காமாண்டர் திருமதி ராதிகா வித்யாசாகர்)
காலை 11.00 மணிக்கு நல்லாதாய் ஒரு தேநீர் கிடைத்தது. அதன்பிறகு விளையாட்டுப்போட்டிகள் துவங்கியது. அனைத்து விளையாட்டுகளின் பொருப்புகளையும் ஒவ்வோறு அதிகாரிகளுக்கும் பிரிந்திருந்தோம் ஆனால் அனைத்தையும் நானே கவனிக்க நேர்ந்தது. முதலில் வாலிபால் போட்டி தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் போட்டியில் பங்கெடுத்தேன். போட்டியை Ad SP அவர்கள் துவங்கி வைத்தார். 12.30 மணிக்கு ஓட்டப்பந்தையமும் நடந்தது.
(வாலிபால் போட்டிகளை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார் Ad. SP திரு செந்தில்குமார், அருகில் ராதிகா வித்யாசாகர், மற்றும் மாவட்ட CC திரு ஜெயக்குமார். இடது ஓரம் களத்துக்குள் நான்)
மதியம் 1.30 மணிக்கு சிறப்பான மதிய உணவு பரிமாறப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு பிரிஞ்சி மற்றும் தயிர்சாதம். உணவு இடைவேளை முடிந்த பிறகு கபாடி போட்டிகள் துவங்கின. இதிலும் ஆள் இல்லை என்பதற்காக நானும் கலந்துக்கொள்ள நேர்ந்தது. வாலிபால் விளையாடத் தெரியும், கபாடி அந்தஅளவுக்கு வராது. இறுதியாய் எங்கள் அணி தோல்வியைக்கண்டது. (பின்னே நான் இருந்தேனில்ல).
(கபாடி போட்டியில் கில்லி விஜய் ரேஞ்சுக்கு முயற்சிசெய்தேன் ஆனால் பிடித்து விட்டார்கள்)
போட்டிகள் முடித்துக் கொண்டு மாலை 4.00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. திருமதி ராதிகா வித்யாசாகர் அவர்கள் தலைமைதாங்க மாவட்ட SP திருமதி வனிதா அவர்களும், Ad SP திரு செந்தில்குமார் அவர்களும் கலந்துக்கொண்டனர். மேலும் மாவட்டத்தின் அனைத்து அதிகரிகளும் நிகழ்ச்சிக்கு ஆஜர். 4.10 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்து.
எங்களது ஏரியா கமாண்டர் திருமதி. ராதிகா அவர்கள் அழகிய தமிழில் சிறப்பான வர்ணனைகயோடு நிகழ்ச்சியை தொகுத்துகொடுத்தார். 4.30 மணிக்கு அணிவகுப்பு மரியாதை, 4.50 கலை நிகழ்ச்சிகள், 5.20 மணிக்கு என்னுடைய கவிதை வாசிப்பு, 5.30 மணிக்கு சிறப்பு விருந்தினர் SP மேடம் அவர்களும் சிறப்பான உறையாற்றி எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். இறுதியாய் 6.00 மணிக்கு தேசியகீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
அதன்பிறகு படா கானா என்று சொல்லப்படும் விருந்து. எல்லா VIP -க்களையும் வழிஅனுப்பிவைத்து விட்டு விருந்துக்கு வந்தேன். அப்போது Ad SP திரு செந்தில்குமார் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு. உடனடியாக வாலிபால் எடுத்துக்கொண்டு வீரர்களுடன் மைதானத்திற்கு வாருங்கள் எனக்கு வாலிபால் ஆட ஆசையாக இருக்கிறது என்றார். மாவட்டத்தின் SP அவர்கள் அழைக்குபோது விருந்தாது மருந்தாவது என்று அவருடன் இணைந்து நண்பர்களோடு வாலிபால் விளையாடியோம்.
இதில் நான், Ad. SP, மற்றும் வீரர்கள் ஒருப்பக்கமும், மற்றவீரர்கள் ஒருபக்கமும் இருந்தனர். சாருக்கு ஆர்வம் இருக்கிறது ஆனால் விளையாட ஒரளவுக்குதான் தெரிந்து வைத்திருக்கிறார். முதலில் தொல்வி அடைந்தோம். எதிரணி வலுவான அணி நான் அதில்தான் இருந்திருக்க வேண்டும் சாருக்காக நான் எதிபுறத்தில் ஆடினேன்.
(இந்த மனோதான் காக்கி உடையில் இருப்பாரா...
நாங்களும் போஸ் கொடுப்போம்ல...)
நாங்களும் போஸ் கொடுப்போம்ல...)
உயர்அதிகாரி தோற்கக்கூடாது என்பதற்காக அடுத்த போட்டியில் நண்பர்களுக்கு சிக்னல் செய்தேன். அதன்பிறகு அவர்கள் விட்டுகொடுத்து எங்களை ஜெயிக்க வைத்தார்கள். (இது எஸ்பி சாருக்கு தெரியாது). போட்டிகள் 7 மணிக்கு முடிந்தது அதன்பிறகு விருந்துக்கு வந்தால் எல்லாம் கதம் கதம் ஆயிருந்தது. (பார்சல் அதிகம் போய்விட்டதாம்) கிடைத்ததை உண்டுவிட்டு சில ஒப்படைப்பு பணிகளை முடித்துத்துக்கொண்டு இரவு 10.00 மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.
மாலை விழா ஆரம்பித்தபிறகு என்னுடைய கேமரா பேட்டரி டவுன் ஆகிவிட்டதால் மாலை நேர நிகழ்வுகளின் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. நான் SP மேடமிடம் பரிசு வாங்கியது. கவிதை வாசித்தது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை.
மாலை விழா ஆரம்பித்தபிறகு என்னுடைய கேமரா பேட்டரி டவுன் ஆகிவிட்டதால் மாலை நேர நிகழ்வுகளின் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. நான் SP மேடமிடம் பரிசு வாங்கியது. கவிதை வாசித்தது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை.
இனிய வணக்கம் சௌந்தர் சார்,
ReplyDeleteநாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் எனும் உங்களின் எண்ணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறீங்க.
தொடரட்டும் தங்கள் பணி!
வாழ்த்துக்கள் சார்
உங்கள் பதிவினைப் படிக்கையில், உண்மையிலே புல்லரிக்கிறது.
தேசத்திற்கு கடமை செய்யனும் என்பதற்காக எவ்வளவு தூரம் முயற்சித்திருக்கிறீங்க.
தொடருங்கள்!
வணக்கம் நிரூபன்..
Deleteநீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கள் வருகைக்காக மிக்க மகிழ்கிறேன்...
நன்றி
போலீஸ் உடை உங்களுக்கு கம்பீரமாக பொருந்துகிறது....வாழ்த்துக்கள்....
ReplyDeleteநன்றி ஹாஜா...
Deleteஉங்களின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கவிஞரே
ReplyDeleteகாக்கி சட்டை
மிக அழகாய் பொருத்தமாய்
தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...
Deleteஅருமையான பகிர்வு கபடி பகிர்வும் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஉங்கள் இன்னொரு முகத்தை கண்டதில் வியப்பு !இனியாவது பந்திக்கு முந்துங்கள்...ஹி ..ஹி
ReplyDeleteநன்றி பாலா...
Deletegood post
ReplyDeleteகலக்கறீங்க சார். நீங்கள் போலீஸ் என்று முதலிலேயே சொல்லாமல் திடுதிப்பென அறிவித்து உள்ளீர்கள். போலி போலீஸ் மனோவை விரட்டி பிடிங்க.
ReplyDeleteகாவல் துறையோடு சார்ந்த ஊர்க்காவல் படை சிவா..
Deleteஇதில் மாதத்திற்க்கு 15 நாட்கள் மட்டுமே இரவில் ரோந்து பணியில் காவல் துறையினரோடு இணைந்து செயல்படுவோம்.
மனோவை இன்னும் காணவில்லை.
>>மாலை விழா ஆரம்பித்தபிறகு என்னுடைய கேமரா பேட்டரி டவுன் ஆகிவிட்டதால் மாலை நேர நிகழ்வுகளின் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. நான் SP மேடமிடம் பரிசு வாங்கியது. கவிதை வாசித்தது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை.
ReplyDeleteஎன்னது? சவுந்தர் பொலீஸா/
என்ன ஒரு கொல வெறி...
Deleteமாம்ஸ் கவிதை போலீஸ்....ஹிஹி
ReplyDeleteஇதுக்காக என்னை உள்ள புடிச்சு போட்டிறாதிங்க....
வாழ்த்துகள் நீங்க விருது வாங்கியதை படம் எடுக்க முடியலைங்கறது எங்களுக்கும் வருத்தம்தான்......
போலீஸ கேமரா மேன் எடுத்திருக்கிறார் சுரேஷ்...
Deleteஆனா அதை வாங்க முடியவில்லை...
நாளைக்கு கிடைச்சிடும் இருந்தாலும் பராயில்லைன்னுதான் பதிவை போட்டுட்டேன்..
நன்றி...!
உங்களின் இன்னுமொரு அசலான முகம் காட்டியதில் மகிழ்ச்சி.பீரோகிராட்டிக்,காவல்துறை,ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள் என பதிவுலகில் இணைந்து கொள்வதும்,மாற்றுக்கருத்துக்கள் அலசப்படுவதின் காரணங்களை உள்வாங்கிக் கொண்டு துறைசார்ந்த பிரச்சினைகளை அலசுவது தமிழகத்தின் ஆரோக்கியமான எதிர்கால சூழலுக்கு வழி வகுக்கும்.
ReplyDeleteநீங்க எல்லாம் இங்கே சுத்துறீங்கன்னு தெரியாமலே மண்ணடி,உளவுத்துறைன்னு காவல்துறை பற்றி பின்னூட்டங்களில் நேற்று கட்டம் கட்டப்பட்டிருக்கிறது:)
உண்மைதான் துறை ரீதியான சில மற்றும் பல தகவல்கள் எனக்கு தெரியும் ஆனால் காவல்துறை சட்டத்திட்டங்கள் படி நான் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியாது...
Deleteமற்றபடி பள்ளிகளில் நடக்கும் சில தவறுகளைகுறித்து தொடர்ந்து எழுதப்போகிறேன்...
நன்றி...!
நண்பா, தங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநிகழ்ச்சி குறித்த பகிர்வால் உங்களை காவல்துறை நண்பர் என்பதை பலருக்கும் அறிவித்து விட்டீர்கள்.
நன்றி பிரகாஷ்...
DeleteLive Telecast seithathu pol irukkirathu. Arumai. Vaalthukkal Sir.
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteஎன்னது....நீங்க போலீசா.... எதிர் கருத்து சொன்னா முட்டிக்கு முட்டி தட்டிடுவீங்களா? lol
ReplyDeleteதங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பதிவுலகில் பொருத்தவரை நான்...
Deleteஎன்றும் சமநிலையோடு கூடிய ஒரு கவிஞர் அவ்வளவுதான் நண்பரே.....
சௌந்தர்...உங்கள்மீது மரியாதையும் மதிப்பும் வருகிறது உங்கள் அசல் முகம் கண்டு.வாழ்த்துகள் !
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழியாரே...
Deleteசகோ சவுந்தர்,
ReplyDeleteநீங்கள் ஆசைப்பட்ட படி காவல்துறை வேலை கிடைக்க வேண்டும். அதில் நீங்கள் நீதி மானாக செயல்பட வாழ்த்துக்கள்.
இனி முழுநேர காவலராக நான் ஆக முடியாது சிராஜ்...
Deleteஆசிரியர் பணியே நிரந்தரம்...
இந்தப்பணியும் தொடர்ந்து கவனித்து வந்தாலே போதும்..
நீங்கள் ஊர்க்காவல் படையில் இருப்பதாய் முன்னரே அறிந்தாலும் இன்று தான் உடையில் கம்பீரமாய் பார்க்க முடிந்தது ..
ReplyDeleteஅனைத்தும் அழகாய் சொல்லி முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் ..
நன்றி அரசன்...
Deleteவணக்கம் பாஸ்
ReplyDeleteஎனக்கு நாட்டுக்கு சேவை செய்பவர்களை மிகவும் பிடிக்கும்
உங்கள் இன்னும் ஒரு முகம் கண்டு ஆச்சரியமாக இருக்கு அதே நேரம் மிகுந்த சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
தங்களின் பாராட்டுக்கும் மற்றும் வருகைக்கும் மிக்க நன்றி ராஜ்...
Deleteகவிதை வீதி சௌந்தர்-ஊர்க்
ReplyDeleteகாவல் படை சௌந்தர்
அருமை யான சேவை-உம்
ஆற்றல் யார்க்கும் தேவை
சா இராமாநுசம்
நன்றி ஐயா..!
Deleteகவிதை, கவிதை போலீஸ்
ReplyDeleteSUPER..THALAI....
ReplyDeleteNAL VAZHTHUKKAL.....
வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteகவிதைலதான் கலக்குவீங்கன்னு நினைச்சேன். நீங்க விளையாட்டுலாம் கூட கலக்குவீங்களா சகோ.
ReplyDeleteசலாம்...வாழ்த்துக்கள் பிரதர்
ReplyDeleteதங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteசார். நான் இங்க தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். இங்க எனக்கு நன்கு அறிமுகமான ஒருவர் இதே ஊர்க்காவல் படையில் கமாண்டன்ட் ஆக இருந்தார். பேரு சாலைபஜவண்ணன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டார். நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களுக்கு அவரைத் தெரியுமா அப்பபடின்னு தெரியல. இந்த பதிவு அருமை சார். உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துகள்.
ReplyDeleteஆம் நண்பரே.. அவர் அம்மாவட்டத்தின் ஏரியா காமாண்டர்...
Deleteஎங்கள் நிகழ்ச்சிலும் அவருக்காக இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது..
நீங்கள் துறைசார்ந்தவரா.. நல்லது சார்..
ஸலாம் சகோ.செளந்தர்,
ReplyDeleteமிக உயர்ந்த லட்சியத்தோடு ஊர்க்காவல் படையில் -அதுவும் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே- ஈடுவட்டு வருகின்றீர்கள். வாழ்த்துகள் சகோ.செளந்தர்.
அருமையான இந்த பதிவில்...
//உயர்அதிகாரி தோற்கக்கூடாது என்பதற்காக... ...சாருக்கு தெரியாது).//...இதை இங்கே பகிராமல், உங்கள் மனதோடு மட்டும் வைத்திருக்கலாமோ..?
நமக்குள் தெரியட்டும் என்றுதான் சொன்னேனே தவிர இவ்விஷயம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லையே...
Deleteமகிழ்ச்சி தோழர்..பணிதனை சிறப்பாய் மேற்கொள்ள வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி கவிஞரே...
Deleteநானும் பார்த்தேன் சௌந்தர் ஆனா நீங்க ஹெல்மெட் போட்டதால சரியாய் தெரியல அப்போ ட்ராபிக் அதிகமகிடிச்சி நல்ல இருந்தது எல்லா ஒரே மாதிரியான ஹெல்மெட்ட போட்டிருந்த நல்லா இருண்டிருக்க்ம்
ReplyDeleteஎனக்கும் மத்தவங்கள யாரையும் பார்க்கமுடியல தலைவரே....
Deleteஎன்னோட வண்டியை வச்சித்தான் மத்தவங்க தெரிஞ்சிகிட்டாங்க...
வாழ்த்துக்கள் சார் ! போலீஸ் போட்டோ - சூப்பர் ! நன்றி !
ReplyDeleteகலக்கல் நண்பரே வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க.. வாங்க...
ReplyDeleteஎன்னது..? ஊர்காவல் படையா..? ...கவிஞர் ன்னு நினைச்சேன் ...
ReplyDeleteபூவுக்குள் பூகம்பம் ....
வாவ்... உங்கள் அடுத்த முகம், மிகப் பிரமாதம். வாழ்த்துக்கள் சார். உங்களுக்கு காக்கிச் சட்டை கலக்குகிறது.. உங்கள் தேசத்திற்கான பணி தொடரட்டும்.
ReplyDeleteஊர்காவல் படைன்னா போலீஸ்க்கு அல்லக்கைன்னு தான் இதுவரைக்கும் கேள்வி பட்டிருக்கேன், அவுங்களூக்கு யூனிஃபார்மெல்லாம் கொடுப்பாங்களா?
ReplyDeleteதகவலுக்கு நன்றி தலைவா!
"அன்பு நண்பரே உங்கள் சேவையை பாராட்டி வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளோம் நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு சௌந்தர். 'ஊர் காவல்' உடையில் ரொம்ப மிடுக்காக இருக்கிறீர்களே? பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete