03 February, 2012

இவையெல்லாம் அம்மாவுக்ககவே....!


நேரில் தவி‌ர்க்க முடிந்த அவளை
எவ்வளவு முயன்றும்
நினைவில் முடியவில்லை...!

காதல் தொடங்காமலே
விழியிலிருந்து விலா எலும்பு வரை
வலிக்க வைத்தவளை 
எப்படி மறந்துபோவது..!
 
னக்குள் நானே
புரியாமல் புரிந்துக்கொள்கிறேன்
உடலில் இன்னும் உயிர் இருக்கிறதென்று...!

யிரை மட்டும் விலக்கி வைக்க
யாராலும் முடியாதுதான்
இருந்தாலும் முயற்சிக்கிறேன் நான்..!
 
யிருக்கும் உடலுக்கும் இடையில்
ஒவ்வொறு நொடியும் 
யாருக்கும் தெரியாமல் மரணப்படுகிறேன்...!
 
ல்லா குழப்பத்திற்கு பிறகு
மௌனமாய் 
ஒரு முடிவு செய்றேன்..!
 
ளையெடுத்துப் படிக்க வைக்கும்
என் அம்மாவுக்காக
காதல் வேண்டாம் என்று...!


48 comments:

  1. ////களையெடுத்துப் படிக்க வைக்கும்
    என் அம்மாவுக்காக
    காதல் வேண்டாம் என்று...!////

    மனதை வருடும் வரிகள் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. நானும் இதை வழிமொழிகிறேன்

      Delete
    2. வழிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்...

      Delete
  2. தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டு கீழே பார்த்தா இன்னொரு தமிழ்மணம் பட்டையும் தெரியுதே? என்ன குழப்பம் இது?

    ReplyDelete
    Replies
    1. அத்தனை வச்சிச்சும் எவ்வளவு ஓட்டு வாங்கியிருக்குன்னு பார்க்க முடியலிங்களே...

      Delete
  3. //நேரில் தவி‌ர்க்க முடிந்த அவளை
    எவ்வளவு முயன்றும்
    நினைவில் முடியவில்லை...!//

    எனக்கு சொன்ன மாதிரி இருக்கு பாஸ். அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. எல்லோர் வாழ்விலும் இருக்கிறது ஒரு ஆட்டோகிராப்...

      Delete
  4. அம்மாவுக்கான அருமையான கவிதை. மிக ரசித்தேன். நன்றி...

    ReplyDelete
  5. எல்லா குழப்பத்திற்கு பிறகு
    மௌனமாய்
    ஒரு முடிவு செய்றேன்..!

    களையெடுத்துப் படிக்க வைக்கும்
    என் அம்மாவுக்காக
    காதல் வேண்டாம் என்று...!

    முடித்தவிதம் மிக மிக அருமை.

    ReplyDelete
  6. மனம் தொட்ட கவிதை
    இழப்பின் வேதனையையும்
    இழக்கவேண்டிய அவசியத்தையும்
    சொல்லிப் போனவிதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா..!

      Delete
  7. Replies
    1. தமிழ்மணம் சரியாக வேலை செய்யவில்லை தலைவரே..

      Delete
  8. காதல் கண்ணை மறைக்காமல் போனது அருமை

    ReplyDelete
  9. கவிதையின் முடிவு அருமை.

    ReplyDelete
  10. தலைப்பை கண்டு கொஞ்சம் அதிர்ந்து போனேன்.. உள்ளே வந்தால் கலக்கலான கவிதை .. வாழ்த்துக்கள

    ReplyDelete
    Replies
    1. அரசியல் என்று நினைத்தீர்களோ...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  11. களையெடுத்துப் படிக்க வைக்கும்
    என் அம்மாவுக்காக
    காதல் வேண்டாம் என்று...!

    தாய்ப்பாசத்தில் நெகிழவைத்த கவிதைக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருக்கைக்கு மிக்க நன்றிங்கோ....

      Delete
  12. படித்து விட்டு மனம் நெகிழ்ந்தது ! முடிவில் நல்ல முடிவையும் எடுத்துள்ளீர்கள் ! நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா..!

      Delete
  13. நெகிழ்ச்சி தரும் கவிதை. வாழ்த்துக்கள் சார்.

    தமஓ 7.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்..!

      Delete
  14. அன்பின் சௌந்தர் - அம்மாவிற்காக - களாஇ எடுக்கும் அம்மாவிற்காக - உன் காதல் களை எனத் தெரிந்த அம்மாவிற்காக - காதலைத் துறத்தல் நலம். - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஐயா..!

      Delete
  15. காதலியை கொண்டாடும் கவிதைகளுக்கு மத்தியில் அம்மாவை கொண்டாடும் கவிதை. அற்புதம் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே..

      Delete
  16. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..!

    ReplyDelete
  17. அம்மா காதல் களையெடுக்கச் சொன்னார்களா.படிக்கும்போது காதல் வேண்டாமென்று சொல்லியிருக்கலாம். காதலை தள்ளிப் போடலாம் துறக்க வேண்டாமே. உண்மைக் காதல் துறத்தல் மன வலி தரும். காதலும் தேவை. அம்மாவின் அன்பும் தேவை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா..!

      Delete
  18. களையெடுத்துப் படிக்க வைக்கும்
    என் அம்மாவுக்காக
    காதல் வேண்டாம் என்று...!
    >>>
    நல்ல முடிவைத்தான் தேர்ந்தெடுத்துக்கிட்டு இருக்கீங்க

    ReplyDelete
  19. களையெடுத்துப் படிக்க வைக்கும்
    என் அம்மாவுக்காக
    காதல் வேண்டாம் என்று...!//

    வணக்கம் சௌந்தர் அண்ணா, அருமையான வரிகள். கவிதையில் சிலவரிகளில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட உணர்வுகளை கொடுக்கக்கூடியது. நான் மேலே சொன்ன வரிகள் எனக்கு கவலையும் சந்தோசமும் என இரண்டையும் கொடுத்தன.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அமுல்ராஜ்...

      Delete
  20. கவிதை அருமை. ஆனால் தலைப்பிலேயே கருத்தை சொல்லாமல் சஸ்பென்சாக இருந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை கொஞ்சம் வசிகரமாக வைத்தால் அநாமிகளின் தொல்லை தாங்க முடியல சார்...

      நண்பர் வந்தேமாதரம் சசி அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கவிதைக்கு பொருத்தமாக தலைப்பை வைக்கிறேன்...

      சில நேரங்களில் சஸ்பென்ஸ் உடையாலாம் அப்படி ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன் பாலா சார்...

      Delete
  21. எனக்காக செய்தவைகளை அம்மாவுக்காக விட்டுக் கொடுக்கிறேன்.என்கிற தியாகம் மிகவும் நெகிழவைக்கிறது.காதலர் தனங்களின் நெருக்கத்தில் இதுவும் யதார்தமாய்/

    ReplyDelete
  22. வணக்கம்!
    காதலுக்காக கிரீடத்தையே தூக்கி எறிந்தவர்கள் மத்தியில், களையெடுத்துப் படிக்க வைக்கும் தன் அம்மாவுக்காக காதலை வேண்டாம் என்ற தனயன். எம்ஜிஆர் பட காரெக்டர்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இள்ஙகோ சார்...

      Delete
  23. என்றும் காதல் தோற்பது காதலிடம் மட்டுமே.. இங்கு ஜெயித்திருப்பது உமது தாயின் மீதான காதல்..!:)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  24. அம்மாவுக்காக என்று சொல்லும்போதே மனம் நெகிழ்துவிட்டது சௌந்தர்.கண்முன்னால் காணும் தெய்வங்கள்.அற்புதமான வரிகள்.வாழ்த்துகள் !

    ReplyDelete
  25. இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
    காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.

    ReplyDelete
  26. அப்பா, அம்மா கஷ்டப்பட்டு நம்மை படிக்க வைக்கும்போது, எந்த விதமான கவனச்சிதறல்கள் இல்லாமல் படிக்கவேண்டும். அது தான் ரொம்ப முக்கியம். அருமையான கவிதை சௌந்தர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!