24 February, 2012

டிஜிட்டல் தமிழகம்... ஜெயலலிதாவுக்கு போட்டியாக மு.க.ஸ்டாலின்..


இன்றைய தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வகிக்கும் பதவியை அடிக்கடி மக்களுக்கு, அவர்களின் கட்சிகாரர்களுக்கும் ஞாபகம் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கட்சியின் பலமான கட்சிக்காரர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் தலைமையை அன்றாடம் பாராட்டி தள்ள வேண்டும். அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் டிஜிட்டல் பேனர். தன்னுடைய வீடு எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனால் தன் பெயரில‌் எதாவது ஒரு டிஜிட்டல் கட்அவு்ட் ரோட்டில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

சாதாரண வீட்டு காதுகுத்து விழா தொடங்கி, இரங்கல் செய்தி வரை இன்று எதற்கெடுத்தாலும் டிஜிட்டல் பேனர் வைப்பது என்பது சர்வசதாரண நிகழ்வாக ஆகிவிட்டது. அது அரசியல் கட்சிகளிடம் இருக்கிற மிகப்பெரிய ஆயுதமாக தற்போது உறுமாறிவருகிறது. 

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த தொழிலும், லாபம் ஈட்டக்கூடிய மிக முக்கிய தொழிலாக விளங்கிவருவது அரசியல் தான். அரசியலில் வார்டு உறுப்பினர் பதவியில் ஆரம்பித்து கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய, மாவட்ட த‌லைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என ஒவ்வொறு படிநிலையிலும் அதற்கேற்ற நிலையில் இங்கு சம்பாதிக்க முடியும். அப்படி வருமானத்திற்கு உத்திரவாதம் கொண்ட தொழிலாக அரசியல் விளங்கி வருகிறது.


தமிழகத்தில் பிரதான கட்சியாக விளங்கி வருபவை திமுக மற்றும் அதிமுக என்ற இரண்டு ஜாம்பவான் கட்சிகள்தான். இதன் கட்சிக்காரர்கள் நம் தமிழகம் எங்கு நிறைந்து காணப்படுகிறார்கள். இந்த கட்சிக்காரர்கள் தலைமைக்கு தன்னுடைய விசுவாசத்தை காட்ட தலைமையை வாழ்த்தி, பாராட்டி ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் தொடர்ந்து அந்த பதவியில் இருக்க முடியும். அதற்காக முன்பெல்லாம் சுவர்முழுக்க வெள்ளை அடித்து அதில் வாழ்க வளர்க என தன் தலைமையை பாராட்டி வாழ்த்தி விளம்பரம் எழுதுவார்கள். அது ஒருகாலம்.

ஆனால் இன்றைய காலமாற்றத்தால்  கட்சித் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருப்பது டிஜிட்டல் பேனர் என்று அழைக்கப்படும் விளம்பர பேனர்களே.... இதன் வருகையால் பழைய சுவர்விளம்பரங்கள் அறவே ஒழிந்து விட்டது. இன்று (பிப்ரவரி 24) அதிமுக பொதுச்செயலாளர் ‌ஜெயலலிதா அவர்களுக்கும், வரும் மார்ச் 1 அன்று திமுக துணைபொதுச் செயலாளர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பிறந்த நாள் வருகிறது. 

இந்த இருவரும் தமிழகத்தில் நிலவிவரும் மின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தன்னுடைய பிறந்தநாள் விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கட்சித் தொண்டர்கள் அப்படி விடுவதாக இல்லை. தன்னுடைய விசுவாசத்தை காட்டவும், கட்சி பொருப்பில் நிலைத்து இருக்கவும் இவர்கள் ஏதாவது செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஒரு வாரமாய் எங்கு பார்க்கிலும் கட்சி பேனர்கள்  ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. இன்று ஜெ., அவர்களின் பிறந்த நாள் விழாவுக்கு பேனர்கள் வைத்ததின் விளைவாக எதிர்கட்சியான திமுக வும் தன்னுடைய பங்குக்கு ஏட்டிக்குபோட்டியாக அவர்களுக்கு நிகராக பிரமாண்ட பேனர்களை வைத்து வருகிறார்கள். திருவள்ளூரில் இருந்து ‌சென்னை சென்று வந்தேன் போய் வரும் வழியெல்லாம் எங்கு பார்க்கிலும் இந்த வாழ்த்து டிஜிட்டல் பேனர்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு பிரமாண்டமாய் ‌காட்சியளிக்கிறது.

ஏன் இதை சொல்கிறேன் என்றால், இன்று தமிழகம் மிகப்பெரிய மின்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது. அது போதாதென்று தினம் ஒரு கொள்ளையும் அரங்கேறி வருகிறது. இப்படி இருக்க இந்த ஆடம்பர டிஜிட்டல் பேனர்கள் அவசியம் தானா என்பது என்னுடைய கேள்வி. கிராமங்களில் உள்ள கடைசி மட்ட தொண்டர்கள் கூட ஆளுக்கு இரண்டு டிஜிட்டல் பேனர்கள் கட்டி தன்னுடைய விசுவாசத்தை காட்டிகொண்டிருக்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் பேனர் அச்சடிக்க ஒரு சதுர அடிக்கு 8 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை செலவு பிடிக்கிறது.  பத்துக்குபத்து (10x10) அளவு கொண்ட ஒரு டிஜிட்டல் பேனர் அச்சடிக்க டிசைன் சார்ஜ், பிரிண்டிங், ‌பேனருக்காக சட்டம், அதை கட்ட சாரம், கூலி என கிட்டதட்ட 2000 ரூபாய் வரை செலவு பிடிக்கும். அப்படியென்றால் தங்கள் பகுதியில் இருக்கும் அனைத்து டிஜிட்டல் பேனர் அச்சடிக்க எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்று நீங்களே கணக்குபோட்டு‌ கொள்ளுங்கள். இன்று தமிழகம் முழுவதும் இன்று எங்கு பார்க்கில் இந்த பேனர்கள் தான்.

அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைக்குட்டிகள் நன்றாக இருக்க கோடிக்கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதைஅறியாத கடைக்கோடி தொண்டன் தன்னுடைய வருமானத்தை இழந்து இதுபோன்ற செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள். சமூகத்திற்கும் குடியானர்களுக்கு கேடுவிளைவிக்கும் இந்த டிஜிட்டல் சாம்ராஜ்ஜியம் என்றுதான் ஒழியுமோ...

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது என்று கட்டுபாடுவிதிக்கும் தேர்தல் ஆணையம் எல்லாகாலங்களிலும் இதற்கு தடைவிதித்தால் சுற்றுசூழல் மாசில் இருந்து இந்த நாட்டை காக்கவும் ஒரு வழி ஏற்படும். குடியானவனின் பணம் வீணடிக்கப்படுவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.


28 comments:

  1. வாங்க வாங்க பிறந்த நாள் ஸ்பெஷலா

    ReplyDelete
  2. எல்லாம் ஒரு விளம்பரம் தான் ..
    என்று விளம்பரத்திற்காக இப்படி
    தன் கைக்காசை இழக்கும் கடைக்கோடி தொண்டர்கள்
    திருந்தவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தொண்டர்கள் திருந்தி விட்டால் அரசியல் தூய்மையாகிவிடும்...

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மகேந்திரன்..

      Delete
  3. Replies
    1. அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைக்குட்டிகள் நன்றாக இருக்க கோடிக்கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதைஅறியாத கடைக்கோடி தொண்டன் தன்னுடைய வருமானத்தை இழந்து இதுபோன்ற செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள். ////
      னச்சுன்னு சொன்னீங்க

      Delete
    2. தொண்டர்வர்கள் உணர்வர்களா...?

      Delete
  4. //இந்த டிஜிட்டல் சாம்ராஜ்ஜியம் என்றுதான் ஒழியுமோ...//
    சான்ஸே இல்லை!
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க....

      ஆனால் ஏதாவது ஒரு தீர்வு வரும்...

      Delete
  5. சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் படியும்,தொண்டர்களின் தாகம் தீரவும் ஜெயலலிதா மோர்ப் பந்தல்,ஸ்டாலின் நீர்ப் பந்தல்ன்னு மக்கள் கூடுமிடங்களாகப் பார்த்து சமூகப் பணி செய்யுங்களேன்னு ஆலோசனை சொல்லலாமேன்னு பார்த்தால் யோவ்!அதெல்லாம் எங்களுக்கு தெரியும்,நீ டைப் அடிக்கிற வேலைய மட்டும் பாருன்னு டாஸ்மாக் பிறப்புக்களும்,ரத்தங்களும் சண்டைக்கு வந்துடுவாங்களோ:)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இதை கட்சிகாரர்களிடம் நான் சொல்லியிருந்தால் என் கதையே மாறிபோயிருக்கும்...

      Delete
  6. நண்பா...தலைவர்கள் சும்மாச்சுக்கும் வேணாம்னு சொல்லுவாங்க....ஆனால் உள்ளூர அதைதான் ரசிப்பார்கள்...எனக்கு பேனர் வைத்தால் கட்சியை விட்டு அவர்களை தூக்குவேன் என எந்த தலைவராவது சொல்லி இருக்கிறார்களா?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அரசியலில் வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமோ..?

      Delete
  7. வணக்கம்! இன்னும் கொஞ்ச நாளில் அவர்களே வலைப் பதிவுகளில் வந்து விளம்பரம் செய்தாலும் செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க.... விளம்பரம் செய்து அரசியல் நடத்த வேண்டும் இவர்களுக்கு...

      Delete
  8. இன்றைக்கு லவுட் ஸ்பீக்கர் ரோடு முழுவதும் அலறி.. கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மார்ச் 1 அன்று திமுக ஸ்டாலினுக்காக...

      மக்கள் தான் பாவம்

      Delete
  9. அம்மா புண்ணியத்தால எனக்கு ஒரு கரண்டி எலுமிச்சை சாதம் கிடைச்சது.

    ReplyDelete
  10. தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது வருகை தரவும்
    http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. அக்கா இப்படி மாட்டி விடுறீங்களே...

      Delete
  11. டிஜிட்டல் பேனர்...Neverending saaagaaa....

    ReplyDelete
  12. அன்பின் சௌந்தர் - சிந்தனை நல்ல சிந்தனை தான் - ஆனால் யார் கடைப்பிடிப்பது ? மாறாது இச்செயல் ஆதங்கப்பட்டுவிட்டு மறந்து விட வேண்டியது தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. நல்லதொரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். அருமையான யோசனை. அரசும் எதிர்க்கட்சிகளும் பரிசீலித்தால் நல்லது.

    ReplyDelete
  14. செவிடன் காதில் ஊதும் சங்கு

    சூரியனை பார்த்து குறைக்கும் நாய்

    இந்த மாதிரி பழமொழிகள் தேவை இல்லாமல் நினைவுக்கு வருது பாஸ்

    ReplyDelete
  15. தொண்டனாய் பார்த்து திருந்தாவிட்டால் டிஜிட்டல் பேனரை ஒழிக்கமுடியாது. யார் ஆட்சிக்குவந்தாலும் இது தொடரும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!