23 April, 2012

பதிவுலகில் ஒரு உறவு சங்கமம்... நம்ம ஆபீஷர் வீட்டுக்கல்யாணம்...



தமிழகத்தில் வடகோடியான திருஎவ்வளூரில் (திருவள்ளூர்) இருந்து தென்கோடிக்கு பயணிக்கபோகிறேன். அதுவும் ஒரு சாதாரண நிகழ்வுக்காக அல்ல. உறவுகள் கூடும் அன்பான இருமணங்கள் இனையும் ஒரு நெகிழ்ச்சியான திருவிழாவில் கலந்துக்கொள்ள...

இதுவரை முகம்பார்த்திடாத சில அன்பு உள்ளங்களைக் கண்டுணற, தூரத்தில் இருந்தே மனம் வீசிய அழகிய குறிஞ்சி மலர்களைத் தொட்டுணர, கம்பிகள் வழியே உரவாடிய சில உள்ளங்களை அன்புகள் வழியே அணைத்துக்கொள்ள... இதுவரை நிலத்தை பார்த்திடாத புது மேகம் போல் புறப்படுகிறோம்....

கடந்த சில நாட்களாய்... இரவு முடிந்தால் சுற்றுலா சொல்லும் குழந்தையின் மனதோடே படுக்கிறேன். என் கண்முன்னே நிழலாடும் காட்சிகளை எதுகைமோனையில் வர்ணிக்க எனக்குள் புதியதாய் வார்த்தைகள் ஏதுமில்லை...


வண்ணத்தில் தொடங்கி எண்ணத்தில் முடியும் அத்தனை வேறுபாடுகளையும் தூரத்தில் தூக்கி எரிந்து விட்டு அன்புக்கு அடிப்பணிந்து அரவணைத்துக்கொள்ள என் கரங்களும் நீள்கிறது தமிழகம் முழுமைக்கும்...


எங்கெங்கோ இருந்துக்கொண்டு பதிவுகள் வழியே அறிமுகமாகி, கருத்தால் படைப்புகளால் பழகி... பழகி..., ஒவ்வொறு நாலும் தமிழ்விருந்து படைத்து நட்பு வளர்த்து,  செல்லமாய் சண்டையிட்டு நட்பை வளப்படுத்தி இன்று அதையும் தாண்டி உறவுகளாய் சங்கமிக்கப்போகிறோம்.


தமிழகத்தின் மேற்கும் (சிபி செந்தில்குமார்) கிழக்கும் (நக்கீரன், ராஜபாட்டை ராஜா), வடக்கும் (நானும் வேடந்தாங்கல் கருணும்) தெற்கும் (தமிழ்வாசி பிரகாஷ் உள்ளபட அனைவரும்) தரணி‌போற்றும் தாமிரபரணி நதிக்கரை நகரில் சங்கமிக்கப்போகிறது...


இன்னும் நிறைய நண்பர்களை சந்தித்து உறவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... இதுவரை வேலி அளவுக்கூட தாண்டாத என் நட்பின் எல்லை இன்றைக்குத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் பரவிக்கிடக்கிறது என்று என்னும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


தன்வீட்டு விழாவிற்கு பதிவுலக நண்பர்களை அழைத்த
கௌரவப்படுத்திய   இதயம் கனிந்த அருமை நண்பர் திரு உணவு உலகம் சங்கரலிங்கம் ஐயா அவர்களின் இல்லத்திருமணத்தில் கலந்துக்கொள்வது பெருமைக்குரிய விஷயமே... அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...



நெல்லை நோக்கிய பணயம்.... தாமிர‌பரணியில் சங்கமிப்போம் வாருங்கள் நண்பர்களே..!


பயண விவரம் நானும் (9443432105), நண்பர் கருணும் (9042784428)
நாள் : 24.04.2012 செவ்வாய் காலை 7.30  மணி
குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை.
நெல்லை : 24.04.2012 மாலை 7.30 மணி அளவில்


எங்களுடன் மதுரையில் தமிழ்வாசி பிரகாஷ் கலந்துக்கொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார்.


43 comments:

  1. இனிய வாழ்த்துகள் திருமணத் தம்பதிகளுக்கு..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  2. கொங்கு நாட்டிலிருந்து சுரேஷ், சம்பத் வாராக.......

    ReplyDelete
  3. சென்று வருக!தாங்களும் நண்பர் கருண் அவர்களும் மணவிழா கண்டு வருக!
    பல் சுவை உணவு உண்டும் பல்வகைப் பதிவுலக
    நண்பர் களைக் கண்டும் உரையாடி வருக!
    மணமக்களுக்கு என் வாழ்த்தையும ஆபீசர்
    ஐயாவுக்கு என் அன்பையும் தெரிவிக்க வேண்டுகிறேன்
    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தங்கள் அன்பை தெரிவித்து விடுகிறேன் ஐயா..!

      Delete
  4. தமிழ்வாசி வாக்கு மட்டுமா கொடுத்தாரு....

    ReplyDelete
    Replies
    1. மத்ததை நேரில் வாங்கிட சொன்னாரு...

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Nellai-yil
    iravu.....
    11.00... Manikku
    santhippom....
    Makkaley.....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக மீட் பண்ணுவோம் தல....

      Delete
  7. தமிழ்வாசி பிரகாஷ்Apr 22, 2012 07:22 PM
    கொங்கு நாட்டிலிருந்து சுரேஷ், சம்பத் வாராக......./////

    ஏய்யா..நீ நான் வர்றன்னு சொன்ன திரும்பி போயிடப்போறாங்க.....

    ReplyDelete
  8. சரி வாழ்த்துகள்.அப்படியே கூடன்குளத்துக்கும் வந்துட்டு போங்க.நெல்லையிலிருந்து பக்கம் தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சதீஷ்...

      கூடங்குளத்திற்க்கு தங்களையும், நண்பர் கூடல் பாலாவையும் சந்திக்க வருவது மிகவும் மகிழ்ச்சிதான்....

      கூடங்குளத்தில் அணு மின்நிலையம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்தேரியது. அதில் கலந்துக்கொள்ள பலமுறை முயன்றும் முடியாமல் போனது. (ஏப்ரல் மாத இறுதியும் மற்றும் மே மாதம் மட்டும்தான் எங்களுக்கு நேரம்கிடைக்கும் காலங்கள்.)

      தற்போது சுமுகமான சூழல் நிலவுவது மகிழ்ச்சியே அரசு கூடங்குளம் மக்களை சரியான வழியில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை...

      கூடங்குள போராட்டங்கள் குறித்து பலமுறை நண்பர் பாலாவிட பேசியிருக்கிறேன்...

      எங்களுடைய நேர நிகழ்ச்சி நிரலில் சாத்திய கூறுகள் இருந்தால் கண்டிப்பாக தங்களையும் நண்பர் பாலாவையும் சந்திக்க முயற்சிக்கிறேன்...

      Delete
    2. உங்கள் அன்பிற்கு நன்றி நண்பா

      Delete
  9. பல கோடிகளீல் இருந்தும் பல கேடிகள் சங்கமிக்கும் விழா!!!!

    ReplyDelete
    Replies
    1. மனோ அண்ணன் வரார்னு சிம்பாலிக்கா சொல்றிங்க

      Delete
  10. சி.பி.செந்தில்குமார்Apr 22, 2012 07:32 PM
    பல கோடிகளீல் இருந்தும் பல கேடிகள் சங்கமிக்கும் விழா!!!!
    /////////////////////////////////////
    கரீக்கட்டு.....தலைவா!

    ReplyDelete
  11. பார்த்து போயிட்டு வாங்க மக்கா.......... இல்லற வாழ்வில் இணையப்போகும் இளஞ்சிட்டுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நாஞ்சில் மனோ - நக்கீரன் டீமை சமாளிக்கும் வல்லமையை இறைவன் உங்களுக்கு அளிக்க பிரார்த்திக்கிறோம்!!

    ReplyDelete
    Replies
    1. ஒன் பை டூ, டூ பை த்ரீ..........ஃபோர் பை டூ.......... எல்லாம் சரியா வரும்........

      Delete
  13. அண்ணன் கெளம்பிட்டாருய்யா............

    ReplyDelete
  14. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் . மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
  15. ஜாலியாப் போயிட்டு வாங்க!நண்பர்களோடு இனிமையாகப் பொழுதுபோக்கிட்டு வாங்க!அதற்குப்பின் இருக்கவே இருக்கு,பயண அனுபவப்பதிவு!படிச்சுத் தெரிஞ்சுக்கிறேன்.
    மணமக்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. தங்களின் பயணம் சிறக்கவும்.., புதுமணத்தம்பதிகளின் வாழ்க்கை சிறக்கவும் வாழ்த்துக்கள்...,

    ReplyDelete
  17. ஆபீசர் வீட்டு கல்யாணத்திற்கு நானும் வருகிறேன்.....தங்களை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாலா சார்...

      கண்டிப்பாக சந்திப்போம்...

      Delete
  18. நாங்களும் வர்றோம் அண்ணே.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அங்கே சந்திப்போம் கிருஷ்ணா..

      Delete
  19. திருமணத் தம்பதிகள் சகல நலங்களும் பெற்று சிறப்புடன் பல்லாண்டு வாழ இனிய நல் வாழ்த்துகள். கவிதை வீதிக்கு என் வாசல் திறந்துள்ளது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  21. மனம் கனிந்த இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வாழ்த்துகள் திரு சௌந்தர்.

    ReplyDelete
  23. திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  24. வணக்கம் கவிதை வீதி சௌந்தர் சார்,நலம்தானே?

    ReplyDelete
  25. திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். ஆஹா! ஒண்ணு கூடிட்டாங்கய்யா.. ஒண்ணு கூடிட்டாங்கய்யா..

    ReplyDelete
  26. என்ன ஆச்சு
    ஏப்ரல் 23க்குப் பின் பதிவேதும் காணோம்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
    பதிவர் சந்திப்பில் தங்களை
    நேரடியாகச் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!