28 July, 2012

நித்தியானந்தா இந்த ஜோக்கை படிச்சிருப்பாரு போல...


இந்த சனி ஞாயிறு என்றால் என்ன பதிவு போடுறதுன்னு ரொம்ப குழப்பாக இருக்குங்க... சிபி அட்வைஸ் என்னன்னா நல்ல நல்ல  பதிவுகளை வார இறுதி நாட்கள்ள போடக்கூடாது என்பதுதான். 

எனக்கு அதுதாங்க பிரச்சனை.... நான் போடுறது எல்லாமே நல்லப்பதிவு சுமாரான பதிவுக்கு நான் எங்க போறது... (‌ஜனங்க இன்னும் நம்மல நம்புறாங்கப்பா) 

கோவப்படாதிங்க மக்களே.... காக்கைக்கு தன் குஞ்சு.... 
(அடடா ஆரம்பிச்சிட்டாங்கப்பா)
அதனால பின்வரும் துணுக்கு ஜோக்குகளை ‌எல்லாம் பாடித்து சிரித்து விட்டு போகும்படி வற்புறுத்தப்படுகிறது..
(என்ன... நான் சொல்றது..)

எலே மக்கா... நல்ல பதிவை போடக்கூடாதுன்னு ஜனங்ககிட்ட சொல்லிட்டு இந்த சிபி மட்டும் ஒரு படம் விடாம பார்த்துட்டு விமர்சனம் போட்டுகிட்டு இருக்கான்... 
அவன் இந்தப்பக்கம் வந்த நீ சுடு... 
இந்தப்பக்கம் வந்தா நான்சுடுறேன்... 
(எஸ் பாஸ்.. ஒழியட்டும் ராஸ்கேல்... இது மனோ டயலாகச்சே..)
***************************
சிஷ்யன் : குருவே..! மனிதனுக்கு வாழ்க்கையின் இன்பமும், துன்பமும், எப்போது கிடைக்கும்?
 
குரு : சம்சாரியானால் துன்பமும், அப்படியே சாமியாரானால் இன்பமும் கிடைக்கும் சிஷ்யா... 

(நித்தியானந்தா இந்த ஜோக்கை படிச்சிருப்பாரு போல...)

***************************


நண்பன் 1 : டாக்டர் உன்னை கலாய்க்கிறாரா.. எப்படி?

நண்பன் 2 :  நாக்குல புண் வந்திருக்குன்னு போனா, நீங்க புண்ணாக்கு ஆயிட்டீங்கன்னு சொன்னாரு..!

***************************
 
   

நண்பர் 1 : ஏன்டா மூணு வேளையும் டிபனே சாப்பிடுறே....!
 
நண்பர் 2 : ஏன்னா..! என்னை யாரும் தண்ட சோறுன்னு சொல்லக்கூடாது பாரு அதுக்குத்தான்...
***************************

 
இதுக்கு என்ன அர்த்தம்... உங்களுக்கு தெரியுமா..?
இனிமே மனோகிட்டே பேசக்கூடாது...
மனோ சொல்றதை கேட்கக்கூடாது...
ஏன்.. மனோ பதிவைக்கூட பார்க்ககூடாது...

பாருங்க இதுகளுக்குகூட தெரிஞ்சிருக்கு...!

***************************
(என்ன ஒரு கொலை வெறி..)
எஸ்கேப்....


அவ்வளவுதான் படம் முடிஞ்சிடுச்சி.. கிளம்புங்க..

21 comments:

  1. படித்தேன்..சிரித்தேன்..

    ReplyDelete
  2. நல்லா ஃபிலிம் காட்டுறீங்க...

    ReplyDelete
  3. ஹா... ஹா... கலக்கிட்டீங்க தலைவரே...

    நன்றி. (த.ம. 6)

    ReplyDelete
  4. //சிஷ்யன் : குருவே..! மனிதனுக்கு வாழ்க்கையின் இன்பமும், துன்பமும், எப்போது கிடைக்கும்?

    குரு : சம்சாரியானால் துன்பமும், அப்படியே சாமியாரானால் இன்பமும் கிடைக்கும் சிஷ்யா...

    (நித்தியானந்தா இந்த ஜோக்கை படிச்சிருப்பாரு போல...)///

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  5. சுமமா டெம்ப்ளேட்டா சொல்லலை சௌந்தர். நிஜமாவே வாய்விட்டுச் சிரிச்சேன். அதுலயும் மனோவை நீங்க கலாய்ச்சது..! அருவாளோட அவர் வர்றதுக்குள்ள ஓடிருங்க...

    ReplyDelete
    Replies
    1. அதான் ஐடியாவா எனக்கு தெரியாமலையே இந்த பதிவை போட்டுட்டு ஓடிட்டான் அண்ணே...!

      Delete
    2. தெரிஞ்ச கத்தியை எடுத்துக்கிட்டு வருவீங்க...
      எதுக்கு வம்பு...

      Delete
  6. Mokka pathivu idu thana.

    ReplyDelete
  7. //நல்ல நல்ல பதிவுகளை வார இறுதி நாட்கள்ள போடக்கூடாது என்பதுதான்.//
    அது மத்தவங்களுக்கு

    ReplyDelete
  8. நல்ல நல்ல பதிவா போடும் உங்களுக்கு நன்றி!
    இன்று என் தளத்தில் பூனையும் எலியும் பாப்பாமலர்! http;//thalirssb.blogspot.in

    ReplyDelete
  9. haa haa haa - அன்பின் சௌந்தர் - அத்தனையும் அருமையான சூப்பர் ஜோக்ஸ் - வி.வி.சி. மனோ வராறாம் - துப்பாகி அருவா எல்லாம் எடுத்துக் கிட்டு - ஓடிடுங்க - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. எலேய் போலீஸ்காரா.....என்கிட்டே வச்சிக்காதே சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
  11. சரி நான் மாத்தி சொல்றேன் கேளுய்யா.....சிபி இந்த பக்கம் வந்தாம்னா நான் வெட்டுறேன் அந்த பக்கம் வந்தாம்னா நீ வெட்டிடு இல்லை என்கவுண்டர்ல போட்டு தள்ளிடு.

    ReplyDelete
  12. ச்சே இதுகளுக்கும் நம்ம பதிவு பற்றி தெரிஞ்சி போச்சா அடடடே.....

    ReplyDelete
  13. சிறப்பு ஐட்டங்கள் சூப்பர்.. நான் மனோ அண்ணாவை சொல்லவே இல்லை

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!