31 July, 2012

அராஜக கட்சிகளுக்கு துணைப்போகும் மத்திய அரசு.... அதிர்ச்சி தகவல்..!

கடந்த நான்கு நாட்களுக்கு முன் செய்திதாள்களில் ஒரு செய்தியை வாசித்தேன். அது நாட்டில் உள்ள பொதுச்சொத்துக்களை அதிகஅளவில் சேதம் விளைவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு அறிக்கைதாக்கல் செய்துள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரகாஷ் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அரசியல் கட்சிகள், போராட்டத்தில் ஈடுபடும் போது, பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்கின்றன. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப் படுகின்றன. சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மறியலில் ஈடுபடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பெரிய அளவில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில், நடக்கும் போராட்டங்களை தடுக்க, வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும், அரசியல் கட்சிகளை, தற்போதைய சட்ட விதிகளின் கீழ், தடை செய்ய முடியுமா? அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா? இது தொடர்பாக, மத்திய அரசு, ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன் கூறியதாவது:

போராட்டத்தில் ஈடுபடும் போது, அரசியல் கட்சியினர் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதற்காக, குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை, தேர்தல் கமிஷனோ அல்லது நீதிமன்றமோ ரத்து செய்ய முடியாது. உச்ச நீதிமன்றமே, இது தொடர்பாக வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்துள்ளது என்றார்
 
கடுமையான சட்டங்கள் இருந்தாலே அதை மீறுகிற கட்சிகள் தான் இங்கு இருக்கிறது. அவைகள் பல்வேறு விதமான சட்டவிரோதமான வேலைகளை செய்து வருகிறது. மேலும் இதுபோன்ற தீர்ப்புகள் மூலம் கட்சிகள் தாங்கள் நடத்தும் பொதுபோராட்டங்களில் அளவுக்கு மீறி நடந்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லாமல் தெரிகிறது.

போராட்டங்கள் என்ற பெயரில் ரயில் மறிப்பது அதை எரிப்பது, பேருந்தை சேதப்படுத்துவது மற்றும் எரிப்பது, தனியார் சொத்துக்களையும், அரசு சொத்துக்களையும் தாக்கி சேதப்படுத்துவது என தன்னுடைய கடமைபோன்று செய்து வரும் அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த முடிவு மூலம் அரசியல் கட்சிகளின் போக்கு எப்படியிருக்கும் தாங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.


இதுபோன்ற பொது நல மனுக்கள் மீது நீதிமன்றங்கள், பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கும்படியான தீர்ப்பை அளிக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் ஆட்சி நடத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

16 comments:

  1. உண்மைதான்... நல்ல அலசல் சௌந்தர்...

    ReplyDelete
    Replies
    1. மத்திய அரசு சுயநலப்போக்கையும் கூட்டணி கட்சிகளின் லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு இப்படி நடந்துக்கொள்கிறது என்று நினைக்கிறேன்...

      தங்கள் வருகைக்கு நன்றி சங்கவி...

      Delete
  2. பொதுச் சொத்துக்களை அதிக அளவில் சேதம் செய்யும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று சொன்னால், " என்ன வேண்டுமென்றாலும் செய்யலாமா ? " அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்...

    நம்ம நாடு வல்லரசு ஆக வேண்டாம்... முதலில் நல்லரசு ஆனால் சரி...

    நன்றி.
    (த.ம. 2)


    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
    Replies
    1. தற்போதைய அரசும் அரசியல்வாதிகளும் நாட்டை வல்லரசு ஆக்குவதற்க்கு எந்த முயற்சியும் எடுப்பது போல் தெரியவில்லை..

      தாங்கள் சொல்வதுபோல் நல்லரசு கொடுத்தால் கூட தற்போதைக்கு போதும்...

      Delete
  3. திருடன்கிட்ட திருட்டை ஒழிக்க வழி கேட்டா எப்படி சொல்லுவான் ?

    ReplyDelete
  4. நல்லதொரு அலசல் தோழரே..இன்றைய சூழ்நிலை இப்படி இருக்கிறது..என்று மாறும் எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  5. என்ன செய்வது.. இந்தியாவுக்கு நல்ல நேரம் எப்ப வரும்னு தெரில..

    ReplyDelete
  6. நீங்கள் சொல்லுகிறபடி கட்சி தடை சட்டம் கொண்டு வந்தால், ஒரு கட்சிக்கு வேண்டாத கட்சியினர் இன்னொரு கட்சியினரின் அரசியல் ஊர்வலங்களிலோ போராட்டங்களிலோ அவர்களைப் போலவே ஆட்களை அனுப்பி கலவரம் செய்யலாம். எனவே இது தவறாகவே முடியும். இருக்கின்ற சட்டங்களை கடுமையாகவே நடைமுறைப் படுத்தினால் போதும். அதிகாரம் கருணாநிதி கையில் இருக்கும் போதும், ஜெயலலிதா கையில் இருக்கும்போதும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தவறை செய்ய கூடாது என்று இருக்கும்பேர்து அந்த தவறை செய்வதும்..

      தவறை செய்யலாம் என்று இருக்கும்போது அந்த தவறை செய்வதற்கும் நிறை வித்தியாசம் இருக்கிறது நண்பரே...

      எப்படி கட்சிகள் தங்களுடைய வேலையை செய்துக்கொண்டுதான் இருக்கும் கொஞ்சம் கட்டுப்பாடுகள் இருக்கவேண்டுமே தவிர அதை தளர்த்தகூடாது என்பதுதான் என்னுடைய வாதம்

      Delete
  7. தகுந்த ஆதரங்களுடன நிருபிக்கப் பட்டால் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தயங்கக் கூடாது.

    ReplyDelete
  8. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி!

    ReplyDelete
  9. மத்தியில் இருப்பதும் அரசியல் கட்சிதானே...? அவன் ஆக்ஷன் எடுத்தால், இவன் ஆட்சியில் இவன் ஆக்ஷன் எடுப்பான் எதுக்கு வம்புன்னு ஒதுங்குரானுக...ஓகே, நீயாவது என் கவுண்டர்ல போட்டு தள்ளுய்யா.

    ReplyDelete
  10. பொது சொத்துக்களை நாசமாக்குவது உலகளாவிய மனித உளவியல் சார்ந்த ஒன்று.மற்ற நாடுகளை விட இந்தியா மக்கள் சார்ந்த பிரச்சினைகளையும் போராடித்தான் தீர்வு வரும் என்ற நிலையில் போரட்டங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன்.

    தனி மனிதனாக இருக்கும் போது தனது சுய பாதுகாப்பை உணரும் மனிதன் அடையாளம் காண இயலாத மொத்தக் கூட்டத்துக்குள் இயங்கும் போது எந்திரன் மாதிரியான பலம் கொண்டவனாகிறான்.

    பொது சொத்துக்கள் தான் செலுத்தும் வரியின் ஒரு பகுதி,தனது நலன் சார்ந்த சொத்து என்ற விழிப்புணர்வை ஆளும் கட்சிகள் தீவிரப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  11. பிரச்சினையின் அடிப்படையை யோசித்து விட்டு பிரச்சினையின் காரணகர்த்தாக்களை மறந்து விட்டேன்.ஒரு புறம் ஆமை வேக முன்னேற்றத்துக்கும் மறுபுறம் அதே ஆமை வேக முன்னேற்றுத்துக்கான காரணி இந்தியாவை அதிகம் காலம் ஆண்ட செகுலர் முகமூடி போட்டுக்கொண்ட காங்கிரஸ் அரசே.

    ReplyDelete
  12. கேவலமாக இருக்கிறது இது போன்ற அரசின் ஆளுகையில் நாம் வாழ்வதற்கு!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!