02 August, 2012

வறண்டு கிடக்கிறது என் கவிதைகள்... நீயின்றி..!


 
சிரித்து சிரித்து பேசிய
ஒரு மழைச்சந்திப்பிற்கு பிறகு...
 

 ஒவ்வொறு மழைத்துளியும்
அ‌ழவைத்துவிடுகிறது என்னை
உன்னை நினைறுருத்தி...! 


கொஞ்சி கொஞ்சி பேசிய
அந்த பூங்கா புல்வெளிகள்...
 

 நீ இல்லாத நேரத்தில்‌
 நெரிஞ்சியாய் தைத்துக்கொண்டிருக்கிறது
உன்னை ஞாபகப்படுத்தி...!


ஜோடி ஜோடியாய் கால்பதித்து நடந்த 
அந்த கடற்கரை மணற்வெளி...
 

நீ இல்லாது நடக்கையில்
ஏளனமாய் என்னை கேளிசெய்கிறது
உன்னை அடையாளங்காட்டி...!


காதலோடு காதல் கலந்து

எழுதப்பட்ட உனக்கான என் கவிதைகள்...

தற்போதைய வரிகளில் நீ இல்லாததால்

பாலைவனமென பறைச்சாற்றுகிறது
உன் உன்னதத்தை உணர்த்தி...!



12 comments:

  1. சூப்பர் கவிதை.. காலையிலயே சோகமா?

    ReplyDelete
  2. அருமையான கவிதை... அருமையான வரிகள்...

    ReplyDelete
  3. அருமையான படைப்பு
    மனதிற்குள் விதைத்துப் போனதால்
    விளைந்த விளைவோ ?
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Pirivin kodumai kavithai vadivil. Nadathunkal nanpa

    ReplyDelete
  5. நல்ல வரிகள்.... ஏனிந்த சோகம்...?
    (த.ம. 5)

    ReplyDelete
  6. காதல் ததுமபுது கவிதையில். கூடவே கொஞ்சம் சோகமும். ரசனையான வரிகள். அருமைங்க.

    ReplyDelete
  7. நினைவுகளோடு பேசும் வரிகள் அருமை.

    ReplyDelete
  8. பதிவில் உள்ள படங்களே நிறைய கவிதை பேசுகிறது...அருமை நண்பா...

    ReplyDelete
  9. படமும் கவிதையும் அருமை! கேளி என்பதை கேலி என்று திருத்துங்கள்! அருமையான படைப்பு!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!