24 August, 2012

இதனால் சகல பதிவர்களுக்கும் சொல்லிக்கொள்வது.. ( இது ஒரு எச்சரிக்கை பதிவு)


அன்புள்ளம் கொண்ட பதிவுல நண்பர்களுக்கு வணக்கம்...

வரும் 26-08-2012 அன்று நடைபெற இருக்கின்ற பதிவர் மாநாட்டிற்கு தங்களை மகிழன்புடன் அழைக்கிறேன்.

கடந்தவாரம் பதிவுலகில் நடந்த சிலபல சர்ச்சைகளை கவனித்து வருகிறேன். அதனால் நான் மிகவும் சங்கடப்படவும் செய்கிறேன். நாம் ஒன்றும் சாதாரண ஆட்கள் இல்லை அனைவரும் பெரிய பெரிய படிப்புகள் படித்தவர்கள், நல்ல வேலை, நல்ல அந்தஸ்த்து உடையவர்கள். 

தங்கள் படைப்பு மற்றும் தங்களின் நல்லுள்ளத்தால் அனைவராலும் மதிக்கப்படுபவர்கள். அப்படியிருக்க தேவையில்லாத சில விஷயங்களை வைத்துக்கொண்டு கருத்துக்களால் போர் தொடுப்பதில் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இங்கு யாருக்கும் யாரும் சலைத்தவர்கள் இல்லை. படைப்பால் யாரும  மாமேதைகள் தான் இதை சண்டையிட்டுதான் நிறுப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.


அதற்காக பிரச்சனைக்குறிய பதிவுகளையோ அல்லது கருத்துக்களையோ இருக்கூடாது என்று சொல்ல வரவில்லை அது எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். 

தற்போது ஒரு பொது இடத்தில் கூடப்போகிறோம். அதுவும் இதுவரை முகம்கூட பார்க்காத பலரை அப்போதுதான் பார்க்கப்போகிறோம். அப்போது  நட்பும் பாராட்டி, அன்போடு அரவணைத்து பழகி நம்முடைய நட்பின் எல்லையை விரிவூபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

நான்கு சுவற்றுக்குள், தனிமையில், சந்தர்ப்ப சூழ்நிலையில், சூரியன் அஸ்தமனத்திற்கு பின் யாரும் உத்தமர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதை விட்டு வெளியில் வரும்போதும் நாம் நல்லவர்களாக ஒழுக்கம் உடையவர்களாவே காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த உலகமும் அப்படித்தான் இருக்கிறது. இதில் யாரும் மாற்றுக்கருத்தை சொல்லிவிடமுடியாது.


தனிப்பட்ட ஒருவரின் மதம், பழக்கவழக்கங்கள், சொந்த விருப்பு வெருப்புகளில்  தலையிட யாருக்கும் உரிமைக்கிடையாது. நாம் கடைபிடிக்கும் கொள்கைகள் பழக்கவழக்கங்கள் மற்றவர்களை பாதிக்கவோ வெறுப்படைய செய்யவோ, முகம்சுளிக்க கூடிதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒரு தனிமனிதனின் கடமை. அந்த கடமையில் இருந்து எந்த ஒரு பதிவரும் விலகிவி்டகூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.


வயதில், பதிவுலக நுழைவில்,  ஆக்க சிந்தனையில், திறனில், வசதி வாய்ப்பில், வேலையில், உடல்பலத்தில் என எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அன்பு காட்டுவதில் அனைவரும் சமம் என்பதை ஒற்றுமையுடன் செயல்படுத்துவோம்.



நம் வாழ்க்கை பதிவுகள் ஒவ்வொறு மணித்துளியும் அடங்கும். அந்த மணித்துளிகள் நான் என்னவற்றை பதிவுசெய்கிறோம் என்பது மிகமுக்கியம். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷயம் கலந்துவிட்டாலும் அத்தனையும் வீணே..! பலப்பேர் கூடியிருக்கும் அவையில் ஒருவரின் ஒழுங்கின்மை அந்த விழாவையே கலங்கடித்துவிடும். 

ஆகையால் முதல்முதலாக இவ்வளவு பதிவர்கள் சந்திக்கும் இந்தவிழாவில் முகம் சுளிக்கும் அளவுக்கோ அல்லது அநாகரீகமாகவோ யாரும் நடந்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது நம்முடைய முழுகடமை.

நாளைய வரலாற்றுக்கு இன்றைய சந்திப்பு ஒரு வசந்தகாலம் போன்றது. கலந்துக்கொள்ளும் நாம் யாவரும் இந்த நிகழ்வில் அன்பையே அடையாளமாக விட்டுச்செல்வோம். அப்போது தான் பிற்காலத்தில் இந்நிகழ்வு அசைப்போடதக்கதாக இருக்கும்.

இக்கருத்து என்னுடைய சொந்தக்கருத்து. இக்கருத்தில் கூட சிலருக்கு உடன்படு இல்லாமல் இருக்கலாம். அதையும் நாகரீகத்தோடு வெளிப்படுத்துங்கள்.

இன்றைய சந்திப்பை... நாளைய சரித்திரம் பேசவைப்போம்...!

பலம் அடைவோம்.. புதியஉலகின் தலைஎழுத்தை நிர்ணயிப்பவர்கள்  நாமாகக்கூட இருக்கலாம்....!


சென்னை வரும் பதிவர்களின் பெயர் பட்டியலை காண இங்கு சொடுக்கவும்.

51 comments:

  1. விழா சிறக்க வாழத்துக்கள்.,........

    ReplyDelete
  2. அன்பு காட்டுவதில் அனைவரும் சமம் என்பதை ஒற்றுமையுடன் செயல்படுத்துவோம்.

    உங்களது இந்த சிறந்த எண்ணத்தை போல் சிறப்பாக நடைபெறும்

    ReplyDelete
    Replies
    1. தங்களையும் காண ஆவலுடன் இருக்கிறேன் நண்பரே...

      அதுவும் நமக்கு பக்கத்து ஊர்காராக இருக்கீங்க...

      Delete
  3. செயின்ட்.சவுந்தர் கருத்தை வழிமொழிவோம். ஆமென்.

    ReplyDelete
  4. உங்களின் கருத்துக்களுடன் நான் இருநூறு சதம் உடன்படுகிறேன் சௌந்தர். நானும் சொல்கிறேன்... ஆமென்.

    ReplyDelete
    Replies
    1. நம் மன விருப்பம் படி வெற்றிகரமாக முடியும் தலைவரே...

      Delete
  5. சனிக்கிழமை எப்போ சென்னை வர்றீங்க சவுந்தர்?

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறோம்...

      அப்படி இல்லையென்றால் ஞாயிறு காலை 7.00 மணிக்கு அங்கிருப்போம்...

      நானும் கரனும்

      Delete
  6. சிந்திக்க வேண்டிய செய்திகள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

      தங்களின் புத்தக வெளியிட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள்..

      Delete
  7. உங்கள் நம்பிக்கை பொய்க்காது. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. சனிக்கிழமை சந்திப்போம்... நன்றி (TM 4)

    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்...,
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...?

    ReplyDelete
    Replies
    1. நல்லது ஐயா....


      தங்களை காணவும் நான் ஆவலாக இருக்கிறேன்..

      Delete
  9. அழகா சொன்னீங்க... வழிமொழிகிறேன்

    விழா வெற்றிகரமாக நடக்க மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நல்லது தோழி....

      தங்கள் ஆதரவுக்கு நன்றி

      Delete
  10. மிக அருமையான பதிவு நண்பரே

    ////தற்போது ஒரு பொது இடத்தில் கூடப்போகிறோம். அதுவும் இதுவரை முகம்கூட பார்க்காத பலரை அப்போதுதான் பார்க்கப்போகிறோம். அப்போது அன்பு நட்பு பாராட்டி, அன்போடு அரவணைத்து பழகி நம்முடைய நட்பின் எல்லையை விரிவூடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.///

    உள்ளத்திலிருந்து வந்த உண்மையான வார்த்தைகள் நண்பா எனக்கும் கட்டி தழுவ ஆசை ஆனால் சவூதியில் இருக்கிறேன்
    வர இயலவில்லை இங்கிருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி

      Delete
  11. விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. ஏங்க ஏன், கமல் மாதிரி புரியாம பேசுறீங்க. சொல்லவந்தது என்னன்னு உங்களுக்காவது புரியுதா?

    ஏன் கேக்குறனா படிச்ச எனக்கு ஒண்ணும் புரியலை. படிச்ச நான் இன்னும் வளரனுமா இல்ல நீங்க கமல் ரசிகரா?

    ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. புரியலையா...

      அப்ப இப்பத்தான் நிம்மதியா இருக்கு...

      எங்க புரிஞ்சி சண்டைக்கு வருவீங்களோன்னு நினைச்சேன்..

      Delete
  13. ஒன்னும் புரியல!!! :-)

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்கை சிறப்பாக நடத்திக்கொடுக்க வலியுருத்தியுள்ளேன்..

      Delete
  14. சிறப்பான கருத்துக்கள்! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  15. நீங்கள் அத்துணைபேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...எனற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. மொத்ததில் சின்ன விஷயத்தை பெருசு படுத்தாதீங்கன்னு சொல்றீங்க. விழா சிறக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்வது உண்மைதான்...

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  16. சரிங்க நாட்டாமை

    ReplyDelete
  17. Replies
    1. சீக்கிரம் வந்து சேருங்க தலைவரே...

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. தமிழ் பதிவுலக எதிர்க்காலம் பிரகாசமடைய இவ்விழா சிறப்பாக நடைப்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete


  20. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  21. விழாவில் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  22. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. அன்பின் சௌந்தர் - சந்திப்போம் - சென்னையில் சந்திப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களை காணவும் மிகவும் ஆவலக இருக்கிறேன் ஐயா..!

      தங்கள் பயணம் இனிதாக அமையட்டும்...

      Delete
  24. நல்ல எச்சரிக்கை, கருத்துகள்! பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  25. அழகிய எண்ணத்துடன்...
    ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்..!
    இனிதே விழா சிறப்புடன் அமைந்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன்..!
    வர இயலாத நிலையில் வெளிநாட்டில் இருப்பதை எண்ணி நொந்து கொள்கிறேன்..!
    பதிவுக்கு மிக்க நன்றி சகோ.செளந்தர்..!

    ReplyDelete
  26. சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் (TM 12)

    ReplyDelete
  27. திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!