31 August, 2012

இப்படியெல்லாம் SMS வந்தா இரவில் உங்களுக்கு தூக்கம் வருமா..?


பிசாசு விசிறி வீச...
பேய்கள் தாலாட்டு பாட...
பூதங்கள் இசை அமைக்க...
காட்டேரி கால் அமுக்க...

மோகினி கதைச்சொல்ல...

அவைகளின் மத்தியில்
நீங்கள் நிம்மதியாய்
தூங்குக...!


(அடப்பாவிகளே இதுமாதிரி SMS  வந்தபிறகு அப்புறம் எங்க நிம்மதியா தூங்குறது...)

********************************************************** 
நீங்க வீட்டில் தூங்கிக்கிட்டு இருக்கீங்க... 
அப்போ இடி.. மின்னல்... மழை... வருது... 
அப்போ உங்க பெஸ்ட் பிரண்டு ஒருத்தர் பயங்கரமா அடிப்பட்டு வராரு.... அவங்களை அழைச்சிக்கிட்டு 2-வது மாடிக்கு போறீங்க... 
அங்க காயங்களுக்கு மருந்து போடுறீங்க...

அப்போ உங்க வீட்டில் இருக்கிற போன் அடிக்குது...

உங்க நண்பர்கிட்டே... இருங்க வரேன்னு சொல்லிட்டு வறீங்க... 
உங்களை சீக்கீறம் வரச்சொல்ல உங்ககிட்ட உங்க பிரண்டு சத்தியம் வாங்கிட்டார்...

கீழே வந்து போனை எடுத்து பேசினா.. 

அந்த நண்பரோட அம்மா பேசுராங்க...
தற்போது தான் வந்த அந்த நண்பர் அடிப்பட்டு இறந்துவிட்டாக தகவல் சொல்கிறார்கள்...

அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...
மேலே செல்வீர்களா இல்லையா...!


**********************************************************

யாராவது உன்னை “லூசு“-ன்னு சொன்னா
அமைதியா இருங்க...


“குரங்கு“ன்னு சொன்னாகூட
கோவப்படாம அமைதியா இருங்க...


ஆனால் யாராவது உன்னை “அழகு“-ன்னு
சொன்ன அவனை அப்படியே தூக்கிப்போட்டு மிதி...

********************************************************* 
இவைகள் எனக்கு குறுந்தகவல்களாக வந்தவைகள்...

**************
இது என்னுடைய 400-வது பதிவு...


இதை வடிவமைத்த வீடு சுரேஷ்குமார் அவர்களுக்கு நன்றி...
 தங்கள் வருகைக்கு ஆதரவுக்கும் நன்றி..! 

24 comments:

  1. 400க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. 400 க்கு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  3. 400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  4. 400-க்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. பயம் தான் வரும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அடாடா... அத்தனை எஸ்.எம்.எஸ்ஸும் பீதியக் கௌப்புதே. பாவம்யா நீங்க...! 400ஐத் தொட்டதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  7. 400க்கு வாழ்த்துக்கள் சௌந்தர்..
    :-)

    ReplyDelete
  8. இப்படி வந்தால் நிச்சயமாக தூங்க முடியாது....வாழ்த்துக்கள் உங்களின் 400 வது பதிவுக்கு...

    ReplyDelete
  9. 400 வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    இப்படிப் பீதியைக் கிளப்பினால்
    யாரால்தான் தூங்கமுடியும்
    மதியத் தூக்கமே கட்டாகிப்போச்சு
    அப்புறம் இல்லே ராத்தூக்கம்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பா! சிரிப்பு வரவழைத்த குறுஞ்செய்திகள்! அருமை!

    இன்று என் தளத்தில்
    ருத்திராட்சம் சில தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

    ReplyDelete
  12. 400 க்கு வாழ்த்துக்கள்.....
    அப்புறம் எனக்கு இத விட கொஞ்சம் டெரரா வந்திச்சுகள்..

    ReplyDelete
  13. 400க்கு வாழ்த்துக்கள். அப்புறம் அந்த எஸ்.எம்.எஸ்லாம் படிச்சுட்டு தூங்குனீங்களா இல்லியா??!!

    ReplyDelete
  14. 400க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நானூறு இன்னும் பல நூறுகளை தொட வாழ்த்துக்கள் ...
    இப்படி sms அனுப்புரதுனாலதான் ஒரு நாளைக்கு அஞ்சு என்று தடை பண்ணிருக்கங்கலோ

    ReplyDelete
  16. 400 க்கு வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  17. ஹா ஹா ஹா.. குறுந்தகவல்கள் அருமை.. மனம் விட்டு சிரித்தேன்..

    //
    கீழே வந்து போனை எடுத்து பேசினா..
    அந்த நண்பரோட அம்மா பேசுராங்க...
    தற்போது தான் வந்த அந்த நண்பர் அடிப்பட்டு இறந்துவிட்டாக தகவல் சொல்கிறார்கள்...

    அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...
    மேலே செல்வீர்களா இல்லையா...!//

    அட அருமையான நாட்.. இதை வைத்து ஒரு திரில்லர் சிறுகதை எழுதலாம் போல இருக்கே!!

    ***

    400 பதிவுகள் என்பது சாதாரணமல்ல! தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துகள்! உங்கள் உழைப்புக்கு வந்தனங்கள்!

    ReplyDelete
  18. //பிசாசு விசிறி வீச...
    பேய்கள் தாலாட்டு பாட...
    பூதங்கள் இசை அமைக்க...
    காட்டேரி கால் அமுக்க...
    மோகினி கதைச்சொல்ல...

    அவைகளின் மத்தியில்
    நீங்கள் நிம்மதியாய்
    தூங்குக...!///


    கல்யாணம் ஆனவர்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை இதைவிட பெரிய அனுபவங்கள் எங்களிடம் உண்டு நண்பரே


    தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  19. அன்பின் சௌந்தர் - 400க்கு இனிய வாழ்த்துகள் - பாராட்டுகள் - விரைவினில் 500 தொடுக - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...
    மேலே செல்வீர்களா இல்லையா...!/// ஓடிருவேன்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!