01 September, 2012

தமிழகத்தில் மதுக்கடையை மூடிவிட்டால்..? இது ஒரு ரவுண்ட் அடித்ததின் விளைவு...!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் என்னாகும் என்று கருத்துக்கணிப்பில் இருந்து பெறப்பட்ட தகவல்...
இது பேஸ்புக்கில் இருந்து எடுத்தது...
 
 
*********************************************


 

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

 
(பேஸபுக்கில் நாஞ்சில் மனோ)

******************************************
பிடித்த கவிதை :
 
சாராயம் குடிச்சு குடிச்சு
எரிஞ்சு போச்சு புருஷன் வயிறு
பசியால துடிச்சு துடிச்சு எரிஞ்சு போச்சு
பிள்ளைங்க வயிறு

இத பார்த்து பார்த்து எரிஞ்சு போச்சு
பெத்தவளோட வயிறு.
 
 வாழ வழி காட்டி அணைச்சிடலாம்
பெத்தவளோட நெருப்ப...
 
சோறு போட்டு அணைச்சிடலாம்
பிள்ளைங்களோட நெருப்ப
 
தண்ணீ கொண்டு அணைச்சிடலாம்
தீக்குச்சி நெருப்ப
 
தண்ணியால எரியற நெருப்ப
எத கொண்டு அணைக்க?
நன்றி : ஸ்ரீராமின் கவிதைகள்  <https://www.facebook.com/poetsriram>
 
*********************************************
விழிப்புணர்வு கட்டுரை
 
இன்று கண்தான விழிப்புணர்வு தினம் நண்பர்களே !

நாட்டில் கண் இல்லாதவர்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகமாம் ஒரு புள்ளி விவரம் சொல்லி உள்ளது.........


கண் இல்லாமல் பிறந்தவன் சாகும் வரைக்கும் கண் இல்லாமல் இந்த உலகத்தை விட்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.........


நாம் உயிருடன் இருக்கும் பொழுதே கண்தானம் செய்து கொள்வோம் நண்பர்களே ..........


இன்று ஒரு சில ஜென்மங்கள் நம்பிகை என்ற பெயரில் இந்த உலகத்தை விட்டு செல்லும் பொழுது கண் இல்லாமல் சென்றல் மீண்டும் மனிதனாக பிறக்கும் பொழுது கண் இல்லாமல் தான் பிறப்போம் என்ற ஒரு மூடா நம்பிகையை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது ................


இது ரொம்ப கேவலமான ஒன்று நண்பர்களே..................


ஒரு நிகழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன் நண்பர்களே மதுரை பெண்கள் கலை கல்லூரியில் நான் படித்து கொண்டு இருந்த சமயத்தில் என் ஜூனியர் ஒரு மாணவி படித்தல் அந்த கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு உடல் தான விழிப்புணர்வு பற்றி ஒரு கருத்தரங்கம் நடந்தது ..............


அந்த கருத்தரங்கம் முடிந்த வுடன் ஒரு கேள்வி கேட்டார்கள் ?


யார்?

யார்?

கண்தானம் உடல் தனம் எதிர்காலத்தில் பண்ணுவீங்க என்ற ஒரு கேள்வி கேட்டார்கள் ......


ஆனால் எல்லோரும் கொஞ்சம் யோசித்தோம் ஒரு பெண் மட்டும் நான் பண்ணுவேன் என்று கை உயர்த்தி சொன்ன அவளுக்கு கைதட்டல் அளித்தது கருத்தரங்கம்.............


அவள் அந்த மாதிரி பண்ணுனால எதிர்காலத்தில் அந்த கேள்வி எல்லாரிடமும் கண்டிப்பாக இருக்கும் .........


மறுநாளே கல்லூரிக்கு தன் அண்ணனுடன் வரும் பொழுது ஒரு விபத்தில் இறந்து விட்டால் ......


மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார்கள் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டால் இறப்பதற்கு கொஞ்ச நேரம் இருக்கும் பொழுது சொல்லி விட்டு தான் சென்றால் என் உடலையும் கண்ணையும் தானம் பண்ணிவிடுங்கள் ............


கடைசியில் அவள் விருப்பதை அவர்கள் பெற்றோர்கள் நிறைவேற்றுனார்கள் நண்பர்களே இந்த நேரத்தில் அவளை நான் நினைத்து தான் பார்கிறேன் .........


அவளை எங்கள் கல்லூரியும் மறக்காது, ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் அந்த பெண்ணை மறக்கமாட்டார்கள் ............


அவள் அத்மா சாந்தி தான் கண்டிப்பாக அடைத்திருக்கும் ..........


அதில் எந்த சந்தேகமும் இல்லை .......


இந்த தினத்தில் நாமும் இந்த உலகத்தை விட்டு செல்லும் பொழுது நம் உடல் ஆவி சென்றல் கூடா பரவாயில்ல என் கண் இந்த உலகத்தை பார்க்கட்டும் என்று நினைத்து விட்டு கண்தானம் செய்யுங்கள்


நண்பர்களே


நானும் இறக்கும் பொழுது கண் தானத்தை செய்து விட்டு இறக்கிறேன் 
 
 
****************************************

மின்சாரம் பகல் 12 மணிக்கு  வந்தது.. என்ன பதிவு போடுறதுன்னு அப்படியே பேஸ்புக்கில் ஒரு ரவுண்ட் அடித்தேன்...
அப்போது சிக்கிய எனக்கு பிடித்த தகவல்களில் சில....
நன்றி...! நன்றி..!

21 comments:

  1. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கண்தானம் பற்றிய ஒரு புள்ளிவிபரம் (முன்பு எனது முகநூல் வாலில் பகிர்ந்தது)

    (தொராயமானது)

    இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 120 கோடி .

    ஒரு நாளைக்கு இறப்பவர்கள் - 62,389.

    ஒரு நாளைக்கு பிறப்பவர்கள்- 86,853.

    இந்தியாவில் கண் தெரியாதவர்கள் - 6,82,460.

    தினமும் இறப்பவர்கள் கண்களை தானம் செய்தால்

    10 நாட்களில்,
    அவர்கள் அனைவரும் பார்வை பெறுவார்கள்

    அப்போது இந்தியாவில் குருடர்களே இல்லை என்ற நிலை வரும், இதை வாசிக்கும் போதே மகிழ்ச்சியாய் இருக்கிறதல்லவா, ஆனால் நடைமுறையில் தான் எப்போது நிகழும் என்று தெரியவில்லை :((

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு தகவல் நண்பரே...


      உண்மையில் இன்னும் மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வு சென்று அடைய வி்ல.ை..

      இன்னும் அதிக கவனம் அக்கறைக்கொண்டு இது குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசு மற்றும் சமூகத்தின் கடமை....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. முன்பே எனது கண்களை தானம் தர பதிவு செய்துள்ளேன். கண்தானத்திற்கு முக்கியமான விஷயம்
      தகுந்த நேரத்திற்குள் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
      அடுத்து நெருங்கிய உறவினர் அனுமதித்தாலே அவர்கள் கண் தானம் பெற்றுக்கொள்வர்.

      என் தந்தையின் இறப்பின் போது காலம் கடந்துவிட்ட படியால் கண்களை தானம் தரமுடியவில்லை மேலும் நான் சொன்ன உறவின் அனுமதியும் மிக முக்கியமே.

      Delete
  3. ஒரு ரவுண்டுக்கே இப்படியா?? அப்ப...இன்னும் ஒரு ரவுண்டு என்றால்???? ஹி ஹி ஹி

    வேற என்ன இன்னும் நாலு நல்ல விடயம் தெரிந்து இருக்கும்.... நன்றி நண்பரே தகவலுக்கும் பகிர்வுக்கும்

    ReplyDelete
  4. அரசாங்கமே சீக்கிரம் மதுக்கடைகளை மூடுங்கப்பா...

    ReplyDelete
  5. மதுவின் நல்ல அலசல்
    கவிதையும் நல்லா இருக்கு
    விழிப்புணர்வு பயனுள்ள கட்டுரை கவிஞரே

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு! கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
  7. விழிப்புணர்வு சிறந்த தகவல் அருமை.

    ReplyDelete
  8. நகைச்சுவை +கவிதை+கண்தானம்
    இவற்றில் கண் தானத்திற்கே முதலிடம் நல்ல பகிர்வு நண்பரே!

    ReplyDelete
  9. கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு நன்றி சௌந்தர்

    ReplyDelete
  10. தண்ணியாலே எரிகிற நெருப்பை
    எதைக் கொண்டு அணைப்பது
    அசத்தல் வரிகள்
    பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. கண் தானம் என்ன...
    உடல் உறுப்புகள் தானங்கள் கூட... அருமை பகிர்வு... (அதற்கு முதல் படத்தில் உள்ள பச்சை கோபுரம் உயர வேண்டும்...[to 100% ரொம்ப தான் ஆசை எனக்கு...!])

    சிறப்பான தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  12. அன்பின் சௌந்தர்

    அட இப்படிக் கூட பதிவு போடலாமா .... பலே பலே - சூப்பர் கவிதை - தகவல்கள் நன்று - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. விழிப்புணர்வு கட்டுரை நன்றாக இருந்தது. பிடித்த கவிதையில் கடைசி இரண்டு வரிகள் அருமை.
    போராசை தான் 61.65 சதவீதம் 100 சதவீதமாக உயர்ந்தால் நன்றாகயிருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள் நன்றி.

    ReplyDelete
  14. கண் தானம் பற்றிய தகவல்கள் நன்று

    ReplyDelete
  15. //பிடித்த கவிதை// எங்களுக்கும் பிடித்தது

    ReplyDelete
  16. சாரே!ஏதும் போட்டுத் தேத்தவேண்டியதுதன்னே!கொள்ளாம்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!