02 November, 2012

2012 தீபாவளிப்படங்கள் ஒரு பார்வை மற்றும் டிரைலர்


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 7 படங்கள் ரீலிஸ் ஆகின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம் படங்கள் தள்ளிப்போகின்றன. 

பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் மாற்றான் தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி துப்பாக்கி, கும்கி, போடா போடி, அம்மாவின் கைப்பேசி, கள்ளத்துப்பாக்கி, அஜந்தா, லொள்ளு தாதா பராக்பராக் ஆகிய 7 படங்கள் மட்டுமே தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது. இதில் இன்னும் சில படங்கள் உறுதிசெய்யப்படவில்லை.

துப்பாக்கி’யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.



 ***********************************************88
போடா போடியில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது.     

*****************************************
ரவிதேவனின் கள்ளத்துப்பாக்கி திரில்லர் படமாக தயாராகியுள்ளது. 
 

***************************************
கும்கி படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. லிங்குசாமி இப்படத்தை தயாரித்துள்ளார்.   
*************************************
அம்மாவின் கைபேசி படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார்.  


**********************************
லொள்ளு தாதா பராக் பராக் படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது.

இப்படங்களில் என்ன மாற்றங்கள் வரும் என்று தெரியவில்லை. இப்படங்களில் எது டாப்பு... எது டூப்பு.. என்று பொருத்திருந்து பார்ப்போம்....

8 comments:

  1. முன்கூட்டிய தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. neenga, soundar, raja laam ipdiye ulagam therinja vishayatha padhiva potu aaga kadavulai praathikiren.

    ReplyDelete
  3. இது முன்னெச்சரிக்கையா ?

    ReplyDelete
  4. சும்மா சும்மாங்க படங்களை பார்த்துட்டு சொல்வோம்.

    ReplyDelete
  5. நான் எதிர்பாக்குறது எங்க தாதாவின் லொள்ளை தான் ..

    ReplyDelete
  6. வரட்டும் - இன்னும் 10 நாட்கள் தானே ! பார்ப்போம். பதிவினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. தகவல்களுக்கு நன்றி அய்யா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!