01 November, 2012

விஜயகாந்தை கைது செய்து ஜனநாயக கடமையாற்றுவாரா ஜெயலலிதா..?


விஜயகாந்த் என்றால் எதாவது பரபரப்பு என்று ஆகிவிட்டது. அந்த பரபரப்பு ஆக்கபூர்வமான செயலுக்காக இருந்தால் நல்லது என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய பரபரப்பு எதுஎதற்கு என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்ட செய்தியாளரை நாயே...... என்றும் தாறுமாறாகவும் திட்டினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அப்போது அவருடன் இருந்த அவரது கட்சி எம்.எல்.ஏ.  அனகை முருகேசன் அவர்கள் நிருபரை தள்ளிவிட்ட வழக்கில் கைது செய்து தமிழக அரசு தன்னுடைய ஜனநாயக கடமையை செம்மையாக நிறைவேற்றியிருக்கிறது. தற்போது அவர்களது அடுத்த குறி விஜயகாந்த். அவரையும் கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த்திடம், வேண்டுமென்ற ஜெயா டிவி செய்தியாளர் பாலு  அவர்கள் கேள்விமேல் கேட்டு கேப்டனை இம்சை செய்திருக்கிறார். தலைவரும் உணர்ச்சி வசப்பட்டு தன்னுடைய வேலையை காட்ட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.


மற்ற செய்தியாளராக இருந்திருந்தால் அரசு வேடிக்கை பார்த்திருக்கும் ஜெயா டிவி நிருபர் என்ற உடன் அத்தனை அதிகாரிகளும் அநியாயத்துக்கு தன்னுடைய வேலையை செம்மையாக செய்துக்கொண்டிருக்கிறார்கள். நிருபர் இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முருகேசன் அவர்களை கைதும் செய்துவிட்டார்கள்.

“இந்த நிலத்தில் யாருக்கும் அச்சாத சிங்கம்”  முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார் விஜயகாந்த். அதையும் அம்மா அவர்கள் நேற்று பேரவை நேரத்தில் அழகா நக்கல் அடித்தார். சட்ட மன்றத்தில் தற்போது இந்த படம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது அதிமுக ஆட்சி என்றால் அது எதிர்கட்சியினரை பழிவாங்கும் ஆட்சி என்ற நிலை இன்றுவரைகூட நிடிக்கிறது. இதுவரை பிரதான எதிர்கட்சியான திமுக-வுக்கு எதிராக மட்டும் இருந்த இந்த கைது நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிக்கும் எதிராக திரும்பியிருப்பது கொஞ்சம் வேதனையாக இருக்கிறது...

தமிழகத்தில் நீலம் புயல் பாதிப்புகள், மின் பற்றாக்குறை, காவிரிப் பிரச்சனை, தேவர் கூட்ட கலவரம், கூடங்குளம் போராட்டம் என ஏகப்பட்ட பிரச்சனைகள் தமிழகத்தில் தவைவிரித்து ஆடும்போது கூட அம்மா அவர்கள் எதிர்கட்சியினரின் தவறுகளுக்கு தண்டனை வழங்குவதை செமமையாக செய்து வருகிறார். இன்னும் பாக்கி இருப்பது விஜயகாந்த கைது மட்டும்தான்.

வாழ்க அண்ணா நாமம்..!. வளர்க அம்மா தொண்டு...!

9 comments:


  1. எதுவும் நடக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. எதிர்கட்சிகளை பழிவாங்குவதில் காட்டும் அக்கறையை கொஞ்சம் எதிர்காலத்தின் மீது காட்டினால் தமிழகம் கண்டிப்பாக முன்னேறும்...

      இதைவிடுத்து வீணான நடவடிக்கைகள் தேவையற்றது...
      என்பதே என்னுடைய கருத்து ஐயா...!

      Delete
  2. அடாது பெய்யும் மழையிலும் கடமையாற்றும் அம்மாவையும்..., அவர் தலைமையின் கீழ் பணியாற்றும் காவல் துறையின் கடமை உணர்ச்சியையும் கண்டு நான் பெரு உவகை கொள்கிறேன்.

    ReplyDelete
  3. இந்த அம்மாவே இப்படித்தான்! நமக்குத்தான் வழியில்லாமல் இந்தம்மாவையும் அந்த ஐயாவையும் மாத்தி மாத்தி அரசாள வைக்கிறோம்! விஜயகாந்த் ஜோக்கராகி விட்டார்!

    ReplyDelete
  4. வெளுத்து வாங்கும் இந்த அம்மா .. நம்பி கெட்ட மக்கள் ,... அல்லோலப்பட்டு தான் ஆகணும்

    ReplyDelete
  5. தனி மனித விரோத போக்கு நல்ல முறை இல்லை.

    Tamil Breaking News

    ReplyDelete
  6. எலும்புக்கு ஆசைப்பட்டு ஆடு ஓநாய் வீட்டில நுழைஞ்சு கடைசியில தன எலும்பையும் இழந்த கதை...

    என்ன முழிக்கிறீங்க...நம்மளே எழுதுன கதை தான்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!