15 November, 2012

இது பெண்களுக்கு பிடிக்காதது...!


 
மெய்போல் பொய் பேசியது
அவளது கண்கள்...!  


சிறகுகள் போல் படபடத்தது
அவளது இமைகள்...!  

கொடிகள் போல் அசைந்தாடியது
அவளது இடை...!  

காற்றில் வீணை மீட்டியது
அவளது கைகள்...! 

சிறகை விரித்து பறந்தாடியது
அவளது தாவணி...! 

குழுக்களாய் கூடவே தாளம் போட்டது
அவளது வளையல்கள்...! 

நாணத்தோடு கோலமிட்டது
அவளது பாதங்கள்...! 

எப்போதும்...
காதலை கண்டால் வெறுத்து ஓடுகிறது
அவளது இதயம்...!   

12 comments:

  1. கவிதை அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.........

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. சிறப்புங்க..

    ReplyDelete
  3. மெய்யான கவிதை இதுவே !

    ReplyDelete
  4. ////எப்போதும்...
    காதலை கண்டால் வெறுத்து ஓடுகிறது
    அவளது இதயம்...!
    ////
    பைனல் டச் செமயாக இருக்கு

    வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

    ReplyDelete
  5. // எப்போதும்...
    காதலை கண்டால் வெறுத்து ஓடுகிறது
    அவளது இதயம்...!
    //
    - பொய்யை 'மெய்' ஏற்பதில்லை அதனாலோ?

    ReplyDelete
  6. காதல் வரிகளில் கடைசி வரிகள் அசத்தல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. கவிதை நல்லா இருக்கு..., ஆனா, தலைப்புக்கும்,கவிதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு அடுத்த பதிவுல சொல்லுங்கோ...,

    ReplyDelete
  8. சொல்லிச்சென்ற விதம் அழகு.

    ReplyDelete
  9. என்ன ஒரு ரசனை....!

    முடிவில் இப்படி ஆயிட்டுதே...

    ReplyDelete
  10. அன்பின் சௌந்தர்

    இதயத்தைத் தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் காதல் செய்யும் போது இதயம் மட்டும் தனித்து நிற்க இயலுமா ? கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!