14 November, 2012

துப்பாக்கி படம் இஸ்லாமியத்திற்கு எதிராக உள்ளதா?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இஸ்லாமியத்திற்கு எதிராகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போலவும் சித்தரிக்கபட்டுள்ளதாக சில கருத்துக்கள் எழுந்துள்ளது.  சில இஸ்லாமி அமைப்புகள் விஜய் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் சில செய்திகள் வருகின்றது..


அப்படி என்ன இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்போம். பொதுவாக இந்தியத் திரைப்படங்கள் என்றாலே அந்த திரைப்படத்தில் தீவிரவாதி போன்ற கதாபாத்திரம் வந்தால் அதற்கு சரியான தேர்வாக ஒரு இஸ்லாமிரை காட்டுவது என்பது இத்தனை ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதுவும் தமிழ் படம்என்றால் தீவிரவாதியானவன் கண்டிப்பாக தீவிர இஸ்லாமியனாகத்தான் இருக்க வேண்டும் என்ற பார்முலாலை தமிழ் திரைவுலகம் கடைபிடித்து வருகிறது.


தமிழ் படத்திற்கு உள்ள பார்முலாபடி துப்பாக்கி படத்தில்  தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமியர்களைத்தான்  காட்டவேண்டும் என்று முடிவு செய்து படத்தில் வரும் அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் போல் காட்டப்பட்டுள்ளது. அவர்களை கொண்று நாட்டுக்கு ஏற்படும் தீமையை கதாநாயகன் போக்குவது போன்று படம் உள்ளது.



இந்த உலகிற்கு, மனித சமூகத்திற்கு, அடுத்த உயிருக்கு தீங்கு விளைவிக்கும் செயல் செய்தால் அது யாராக இருந்தாலும் தீவிரவாதியே ஆனால் உலகம் ஒரு சில சம்பவங்களை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் என்றால் அது இஸ்லாமிய இனம்தான் என்ற முடிவுக்கு வருவது கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தெரிகிறது. 


இந்தியாவில் பெரும்பாலன இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அந்த இனத்தையே தீவிரவாதிகள் போல் காட்டுவது அனைவரையும் நாம் இழிவு படுத்துவதுபோல்தான் ஆகும். இஸ்லாமியத்தில் தீவிரவாத கருத்துடைய சிலர் இருக்கிறார்கள் என்றால் தான் வாழும் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நாட்டுப்ற்றும் அவர்களில் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவுக்கா பாடும் இஸ்லாமிய இன இளைஞர்கள் இங்கு ஏராளம்.



கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் கூட தீரவாதிகள் நால்வரில் ஒருவர் இந்துவாக காட்டியிருப்பார்கள். அவர்களை அழிக்கும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக ஹாரீப் என்ற ஒரு முஸ்லீம் இருப்பார். அதனால் அந்தப்படம் பொதுமைபடுத்தி காட்டப்பட்டிருந்தது. 

ஆனால் துப்பாக்கி படத்தில் தீவிரவாதியாக இருக்கும் அனைவரும் இஸ்லாமியர் என்ற போர்வையில் இருந்தது. ஆனால் அவர்கள் குரான் படிப்பது உருது பேசுவது, இஸ்லாமியத்தை உயர்த்தி பேசுவது போன்ற காட்சிகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல். துப்பாக்கி படம் வெளிப்படையாக இஸ்லாமியத்தை தாக்குவதாக இல்லை அதற்காக படத்திற்கு வாக்காலத்து வாங்க எனக்கு விருப்பம் இல்லை.


பொதுவாக ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, ஒரு சமூகத்தையோ, ஒரு குழுவையோ தவறாக குறிப்பிடுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இனிவரும் இந்தியதிரைப்படங்கள் அதுபோன்ற காட்சி அமைப்பை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதுவும் ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து அதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கும்போது அந்த சம்பவம் இன்னும் தன்னுடைய வடுக்களை மறக்காமல் துன்பத்திலே நீடிக்கவைக்கிற செயலாகத்தான் அது தெரிகிறது. குண்டு வெடிப்பு என்றால் மும்பை என்பது அதனுடைய மற்ற புகழ்களை மறைக்க வைப்பது போல் உள்ளது.

23 comments:

  1. உண்மைத் தமிழன் விமர்சனத்தின் கடைசி நாலு வரிபடியுங்கள் அப்புறம் சொல்லுங்கள்.

    இந்து தீவிரவாதம் இல்லையா, எடுத்தால் படம் ரிலீசாகாது. ஆனால்

    இங்கே முஸ்லீம் தீவிரவாதமென்பது தற்காத்து கொள்ள அல்ல இந்து தீவிரவாதித்தின் எதிர்வினையாக நிகழ்வதுதான்

    ReplyDelete
  2. அன்றைய படங்களிலிருந்து இது தொடர்வது நல்லதல்ல... தவறு...

    உங்களின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்...
    tm2

    ReplyDelete
  3. பத்த வெச்சாச்சா?! ரைட்டு

    ReplyDelete
  4. உண்மைதான்! இஸ்லாமியர்கள் அனைவரும் தீவீரவாதிகள் அல்ல! இந்துக்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல! சிறப்பான பகிர்வு!

    ReplyDelete
  5. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    மிக வேகமான திரட்டி
    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  6. "அவனைப்போல் அசிங்கமாக இன்னொருவன்"..! "த்தூ....ப்பாக்கி"...!

    கோவை&மும்பை என்று இரண்டே தீய எதிர்வினை உதாரணங்களை வைத்து மட்டுமே ஆண்டுக்கணக்காய் புனைவுக்கதை புனையும் பூனைகளே..!

    ஹிந்துத்துவ ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாதிகளை வைத்து... நம் நாட்டில் அவர்கள் வரிசையாக நிகழ்த்திய சுமார் பத்து குண்டுவெடிப்புகளை பற்றி படம் எடுக்க யாருக்காவது தில் இருக்கா..? இல்லையே..! ஏன்..?

    மெஜாரிட்டி மக்களிடம் அது ஓடாது... ஃப்ளாப் ஆகும் என்பதல்ல காரணம்..! மெய்யான காரணம் என்னவெனில்... எவனாவது பாகிஸ்தானிலிருந்து குஜராத் வழியே வந்து மாவீரர் ஹேமந்த் கர்கரேயே போட்டுத்தள்ளியது போல சுட்டுப்போட்டுட்டு போயிட்டே இருப்பான் என்ற பயம்தானே...?

    ஒரு சமூகத்தை பற்றி மட்டுமே 'தீய கருத்து-ஃபிக்சிங்' செய்யும் இவர்கள்தான்... நிஜ பயங்கரவாதிகள்..! இவர்களுக்கு கிரிக்கெட்டில் 'மேட்ச்-ஃபிக்சிங்' செய்தவர்களுக்கு தந்தது போல... 'சினிமா எடுக்க-நடிக்க வாழ்நாள் தடை' யை நீதி மன்றம் தரவேண்டும்..!

    ReplyDelete
  7. No Comments boss...

    ReplyDelete
  8. KAMALHASSAN NADIPPIL...UPO..

    ReplyDelete
  9. உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

    மிக்க நன்றி சகோ...

    ReplyDelete
  10. முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி...

    இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து!


    Published: Thursday, November 15, 2012, 13:09 [IST]
    Posted by: Shankar

    Thuppakki Press Meet Cancelled Due
    Mythri Press meet

    இன்று நடக்கிவிருந்த துப்பாக்கி பட சக்ஸஸ் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்குக் காரணம் துப்பாக்கியில் இஸ்லாமியரை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சைதான் என்கிறார்கள்.

    தீவிரவாதத்தைப் பற்றி படமெடுத்தாலே ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று கோஷம் எழுப்பி விஜய் வீட்டை முஸ்லிகம்ள் முற்றுகையிட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட் இன்று சென்னை ரெயின் ட்ரீ ஓட்டலில் நடப்பதாக இருந்தது.

    ஆனால் பிரஸ்மீட்டுக்கு வரும் செய்தியாளர்கள் யாராவது இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளிக்கப்போய் சிக்கலில் சிக்கிக் கொள்வோமோ என பயந்து பிரஸ் மீட்டையே ரத்து செய்து விட்டார்களாம்.

    தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பிரஸ் மீட் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நபிகளை அவமானப்படுத்தும் விதமாக படமெடுத்த ஹாலிவுட் டைரக்டரை கண்டித்து முஸ்லிம்கள் சென்னையையே ஸ்தம்பிக்க வைத்தது நினைவிருக்கலாம்.

    ஒருவேளை துப்பாக்கி தயாரிப்பாளர்களுக்கு அந்த போராட்டம் நினைவுக்கு வந்துவிட்டதோ என்னமோ..!

    source: http://tamil.oneindia.in/movies/news/2012/11/thuppakki-press-meet-cancelled-due-164684.html

    ReplyDelete
  11. இந்த விசயத்தைக் காய்தல் உவத்தல் அன்றி பேசுவோம்..
    ஒரு சினிமா மீடியம் என்பது பொதுப் பிரச்சனையை சுவையாக
    விவாதிக்கவேண்டியிருக்கிறது. சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
    இருக்கிறது. அப்போதுதான் அது அனைவரையும் சென்றடையும்
    தயாராரிப்பாளரும் தன் சொத்தை இழக்க நேராது. அப்படி தவறாக
    பொய் சொல்லும் படைப்பாக இருந்தால் அது நிச்சயம் நிலைக்காது
    இது ஒரு புறம் இருக்க.....
    கணவன்/மனைவி , அண்ணன் / தங்கை, கதாநாயகன் /வில்லன்,
    கதாநாயகன்/ லோக்கல் ரவுடி போன்ற விசயங்களைத் தாங்கிய
    முன்னாள் தமிழ்ப்படங்கள் ஏராளம்.. சிவாஜியும் எம்ஜியாரும்
    மேற்படி விசயங்களை துவைத்து காயப் போட்டு கர்சீப்பால் கண்ணீரை
    பீய்த்து அடித்து விட்டார்கள்.. மீதம் காதல் சமாச்சாரங்கள்.. அதை
    கமல் முதல் விமல் வரை கசக்கிப் (காதலியையும் ) பிழிந்து
    விட்டார்கள்.. பின்னர் என்ன செய்வது.. தற்போது எல்லாமே உலகமயமாகவிட்டது.
    அமெரிக்க ரெட்டை /கோபுர தாக்குதல் ஈராக் பிரச்சனை/ காசுமீர் பிரச்சனை /
    பம்பாய் தொடடடடடடர் குண்டு வெடிப்பு /விமானக்கடத்தல் /மேலும் அங்காங்கே
    இங்கும் அங்குமாக நிகழம் குண்டுவெடிப்பு...
    அதை செய்பவர்கள் by chance ஒரு குறிப்பட்ட மதவாதிகளாக
    இருப்பதால்தால் சர்ச்சசை வெடிக்கிறது.. இதற்கு மூன்றே தீர்வுதான்
    எனக்குத் தோன்றுகிறது
    1) அனைவரும் படம் எடுப்பதையையே கைவிட வேண்டும்
    2) ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மேற்படி நடக்கும் போது அதை கண்டிக்க வேண்டும்
    3) ஆர்ப்பாட்டக் காரர்கள் சொல்லும் ”எதிர்காரணததை” அவர்களே படமாக எடுத்துத்
    திரையிட வேண்டும்

    ReplyDelete
  12. //////இந்தியாவில் பெரும்பாலன இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அந்த இனத்தையே தீவிரவாதிகள் போல் காட்டுவது அனைவரையும் நாம் இழிவு படுத்துவதுபோல்தான் ஆகும். இஸ்லாமியத்தில் தீவிரவாத கருத்துடைய சிலர் இருக்கிறார்கள் என்றால் தான் வாழும் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நாட்டுப்ற்றும் அவர்களில் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவுக்கா பாடும் இஸ்லாமிய இன இளைஞர்கள் இங்கு ஏராளம்.///////

    உண்மையை வெளிச்சமிட்டதற்கு நன்றி சகோதரரே!

    ReplyDelete
  13. மக்களை சிந்திக்க வைக்கவும் - சிரிக்க வைக்கவும் அவர்களின் பொழுது போக்கிற்காகவும் படம் எடுத்து பணம் பார்க்கட்டும் திரைத்துறையினர்..ஆனால் திரைப்படம் மூலம் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது சமூக நல்லிணக்கதிற்கு ஊறு விளைவிப்பதோடு - ஏற்கனவே கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிற சமுதாயத்தினர் வெறுப்புணர்வு கொள்ளச்செய்யும்..அதனால் இனிமேலாவது திரைப்படத்துறையினர் சமுதாய பொறுப்புணர்வ்டன் நடந்துக் கொள்ளவேண்டும்.. ..

    ReplyDelete
  14. துப்பாக்கி படத்துக்கு காட்டிய எதிர்ப்பை மலாலாவுக்கு நடந்த கொடுமைக்கு காட்டியிருந்தால்...நல்லாயிருக்கும்!

    ReplyDelete
  15. PART 1. யார் தீவிரவாதி.............???

    இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய் அவர்களே...

    பொதுமக்கள் முன்னிலையில், மீடியா முன்னிலையில் நேரடி விவாதத்திற்கு தயாரா..........???


    இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா ? நீங்கள் உண்மையான செய்தியை தான் சொன்னீர் என்றால் யார் தீவிரவாதிகள் என்று விவாதிக்க தயாரா ?

    உன்னையும் உன்னை போன்ற காவி பயங்கரவாதிகளின் முகத்திரையும் கிழித்தெறியப்படும்,

    ராணுவத்துறையில் எங்களுக்கு கிடைக்கவேண்டிய (இடஒதுகீட்டின் அடிப்படையில் கூட) வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் சமுதாயத்தை இந்த அளவுக்கு புறம் தள்ள யாரிடம் பாடம் கற்றாய்?

    யார் தீவிரவாதி? பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் விவாதிக்க தயாரா?

    1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

    2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

    5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

    6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

    7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

    8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

    9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

    10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

    11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

    12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

    13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

    14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

    16) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

    16) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

    17) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

    2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.

    2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.

    2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.

    2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.

    2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.

    2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.

    2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.

    2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.

    2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

    2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.

    2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.

    2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.

    2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.

    1983 பிப்ரவரி 18: அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது. இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

    CONTINUED ........

    ReplyDelete
  16. PART 2. யார் தீவிரவாதி.............???

    1989 பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

    இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

    இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

    மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

    இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை (2002 பிப்ரவரி 28).

    அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.

    தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? இதை பற்றியெல்லாம் படமெடுக்க கேடுகெட்ட கமல், விஜய்,அர்ஜுன், விஜயகாந்த், மணிரத்னம், முருகதாஸ் போறவர்களுக்கு துணிவு இருக்கா ?

    பல பெண்களை கட்டிப்பிடித்து, தடவிக் கொடுத்து அதன் மூலமாக வாங்கிய பணத்தில் வயிற்றை நிறைக்கக் கூடிய மானங்கெட்டவர்களே?

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், தேசப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்து உள்ளாயே?

    இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்காவது உனக்கு தகுதியுள்ளதா?

    மூளை மழுங்கியவர்களையும், ஒன்றும் அறியாத ஏழை ரசிகர்களின் தயவில் வாழக் கூடிய நீ இந்த நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செய்தது என்ன?

    உனது திரைப்படத்தில் பெண்களை ஒரு போகப் பொருளாகவும், ஊருகாயாகவும் பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்திக் கொண்டிருப்பதுதான் நீ நாட்டுக்கு செய்யும் தேசப்பற்றா?

    பல சமூகத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய இடங்களில் இது போன்ற திரைப்படங்கள் மூலமாக மக்களின் மனதில் நஞ்சை விதைத்து உனது காவி சிந்தனையை காட்டுகின்றாயா?

    பல திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துவிட்டு, இதனை ஈடுகட்ட ஹீரோவின் நண்பனாக ஒரு குல்லாவும், தாடியும் வைத்து ஒருவனை நடிக்க வைப்பது. உங்களது நடுநிலை புல்லறிக்க வைக்கின்றது.

    நாய்ப் புகழ் நடிகரைப் போல ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் இது போன்று திரைப்படங்களில் நடித்து அரசியலில் களம் இறங்க அடித்தளமிட்டால் இது உனது அறியாமையையும், அடி முட்டாள்தனத்தைத் தான் காட்டுகின்றது. என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து இருக்காது.

    நன்றி : Tntj Ottery

    Posted by கீழை ஜமீல் முஹம்மது

    ReplyDelete
  17. மன்னிப்புக் கோரியது துப்பாக்கி படக் குழு

    Thursday, 15 November 2012 21:46 administrator

    நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு சார்பாக இன்று(15.11.2012) காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    மாலை வரை நீடித்த இக்கூட்டத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும், நடிகர் விஜய் தரப்பில் எழுத்துமூலமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இதைச் செய்யத் தவறினால் போராட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர்களுடன் பேச தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பத்து பேர் கொண்ட குழு இன்று மாலை விஜய்யின் தந்தை சந்திரசேகர், படத்தின் டைரக்டர் முருகதாஸ், படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் அடங்கிய படக் குழுவினரை சந்தித்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

    படக்குழு, முஸ்லிம் குழுவிடம், இப்படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கவில்லை என்று கூறி மன்னிப்புக் கோரியது மட்டுமல்லாமல் எழுத்துமூலமாக மன்னிப்புக் கடிதம் வழங்குவதாகவும் தெரிவித்தது.

    படத்தில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்குவதாகவும் உறுதி அளித்தது.
    முஸ்லிம் சமூகத்தை மிகவும் புண்படுத்திய துப்பாக்கி படப்பிரச்சனையில் படக்குழுவினர் முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்பிற்கு தமுமுக முன்முயற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    http://www.tmmk.info/index.php?option=com_content&view=article&id=2832:2012-11-15-16-18-51&catid=58:2009-10-11-12-42-41

    ReplyDelete
  18. 'துப்பாக்கி தவறுக்கு பிராயச் சித்தம்...

    ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் விஜய்' - எஸ்ஏசி அறிவிப்பு!!


    Published: Friday, November 16, 2012, 9:22 [IST]
    Posted by: Shankar

    Vijay Will Appear As Muslim Next Movie
    Amala paul to act with Vijay

    துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று அறிவித்துள்ளார் அவர் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி அவமானப்படுத்திவிட்டதாக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.

    நபிகள் நாயகத்தை அவமதித்த ஹாலிவுட் பட விவகாரத்தில் இந்த அமைப்புகள் சில தினங்களுக்கு முன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

    இதே நிலை துப்பாக்கி படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ விஜய் ஆகியோர், அதிரடியாக சரண்டர் படலத்தை அரங்கேற்றிவிட்டனர்.

    அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களையும் நேற்று சென்னையில் சந்தித்த இயக்குநர் முருகதாஸ், தாணு, எஸ் ஏ சந்திரசேகரன், அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர். காட்சிகளை நீக்கவும் ஒப்புக் கொண்டனர்.


    அடுத்து எஸ்ஏ சந்திரசேகரன் அறிவித்ததுதான் இந்த சரண்டர் படலத்தின் உச்சகட்டம்.

    அதை அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், "என் மகன் விஜய் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. சாதி, மத வேறுபாடுகளே அவனுக்கு இல்லை.

    இந்தப் படத்தில் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக தெரியாமல் இடம்பெற்ற சில காட்சிகளுக்காக வருந்துகிறோம்.

    இதற்கு பிராயச்சித்தமாக என் மகன் ஒரு படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடிப்பார்," என்றார்.

    SOURCE: http://tamil.oneindia.in/movies/news/2012/11/ar-murugadass-thaanu-sac-apologise-164732.html.

    =======================

    விஸ்வரூபம் திரைப்படம்:

    முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-

    தமுமுக கோரிக்கை


    Thursday, 08 November 2012 18:03

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:

    பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார்.

    அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

    கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள்.

    ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ,

    60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை.

    இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை.

    எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.


    கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.

    இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம்.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான ஊடக திரிபுகளை அனுமதிக்க முடியாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்

    (ஜே.எஸ். ரிபாயி)

    source:http://www.tmmk.info/index.php?option=com_content&view=article&id=2810:2012-11-08-12-35-14&catid=42:press-reless&Itemid=160

    ReplyDelete
  19. அன்புள்ள சகோதரகளுக்கு,

    தன்னுடைய திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியினை தழுவி திரைஉலகினை விட்டு வெளியேற்றப்படுவோமோ என்றா பீதியில் இவ்வாறு இழிவான மலிவான செயலில் ஈடுபடுட்டுள்ள ஒரு கோமாளி இயக்குனர் மற்றும் கோமாளியின் படம்தான் இது

    வெளிவந்து இருக்கும் துப்பாக்கி என்ற திரைப்படத்தில் கோமாளி விஜய் நடித்து அதில் இஸ்லாமியர்களை குறிப்பாக பெயர் குறிப்பிட்டு ஸ்லீப்பர் ஸெல்ஸ் என்று குறிப்பிட்டு 12 நபர்களை கொல்லுவதாக வந்துள்ளது, நடிப்பது அவர்களது தொழிலாக இருந்தாலும் பொழுது போக்கு மற்றும் அரட்டை நிறைந்து அதில் வயிறு வளர்த்து வந்துள்ளனர். ஆனால் அதே நேரம் மற்ற மதத்தினை சேர்ந்தவர்கள் எதோ இந்திய திருநாட்டில் ஏய்த்து பிழைக்க வந்தவர்கள் போன்றும் சுட்டிக்காட்டுவதும் , அவர்களை அடித்து பின் அவர்களை திருந்துவது போன்று வரும் படங்களை ஆரம்பத்தில் அனுமதித்தன் விளைவு ( அர்சுன், விஜயகாந்த், சரத்குமார் போன்றோ கோமாளிகளின் படங்களை) தற்போது நேரடியாக தமிழ்கத்தில் உள்ளது போன்று சிறுக சிறுக செல்லரித்து வருகின்றனர்.


    ஜமால் முகம்மது
    மதுக்கூர்.

    ReplyDelete
  20. இதற்க்கு தீர்வு :

    1. இவனது பெயரில் இயங்கும் சங்கத்தின் உறுப்பினர் பதவில் விலகுதல் அதனை அந்த கோமாளிக்கு அறிவிப்பு செய்தல் வேண்டும் .

    2 திரைத்துறையினை கண்காணிக்கும் தணிக்கைத்துறையில் இஸ்லாமிய அதிகாரிகளை அனுமதி பெறுவது,

    3 திரைத்துறையினர் பெயரிட்டு குறிப்பிட்ட மதத்தினரை கூறினால் இந்திய குடியரசு இறையாணமை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்வது. அதை அரசாங்க செலவில் நடத்துவது, அப்போதுதான் பிற்காலங்களில் இது போன்று தன்மையுள்ள திரைப்படங்கள் வருவது தடுக்கப்படும்.

    4 குறிப்பிட்ட திரைத்துறை இயக்குனர் மற்றும் கோமாளிகளுக்கு நடிக்க தடைவிதித்தல்.

    5 இனிவருங்காலங்களில் இது போன்று படம் எடுக்க தடைகோருதல்

    ஏனெனில் இதையே போக்காக வைத்து உள்ளனர், இப்போதுதான் ஒரு இஸ்ரேலியனின் படத்திர்க்கு விளம்பரம் செய்யாமல் விளம்பரம் ஆனது, அதே பாணியினை என்று நினைத்து ஒதுக்கவும் முடியாது அதே நேரம் ஊடக துறையினர் இதனை வைத்து கொந்தளிப்பினை ஏற்ப்படுத்தி விடாமல் பார்த்து கொள்ளவேண்டும், மேலும் இதற்க்காக விட்டுவிடாமல் இதனை அனுமதித்த தணிக்கை அதிகாரிகள் மீது வழக்கு தொடர முயல வேண்டும்,

    மற்றொரு உலக கோமாளி என்று அழைக்கப்படும் ஒருவனின் படத்தின் முன் அறிவிப்பே இந்த படம், தற்போழுது இவர்களுக்கு இஸ்லாமிய தன்மையினையும், அதனுடைய தாக்கத்தினையும் தடுப்பதல்ல அதனைகொண்டு பணம் செய்யவும் விளம்பரம் செய்யவுமே இவ்வாறு செய்கின்றனர்,

    எனவே சகோதரர்கள் இதனை விளம்பர படுத்திவிடாமல் தடுத்து அறிவுப்பூர்வான நடவடிக்கை எடுக்க வேண்டும். தணிக்கை துறைக்கும் சம்பந்தபட்ட அரசு துறைக்கும் தந்தி அனுப்பி கண்டத்தினை பதிவு செய்யவேண்டும் ? அந்த அந்த பிராந்திய தூதரகம் மூலம் இத்துறைக்கு கண்டனத்தினை பதிவு செய்யுங்கள்.

    Ministry of Information and Broadcasting

    List of Members

    List of Board Members
    S. No.

    Name of Board Member
    1.

    Ms. Amal Allana
    2.

    Ms. Anees Jung
    3.

    Shri Dipesh Mehta
    4.

    Shri Pankaj Sharma
    5.
    Shri M.K. Raina
    6.
    Shri Rajeev Masand
    7.

    Shri Nikhil Alva
    8.

    Ms. Shubra Gupta
    9.

    Shri Shaji Karun
    10.

    Ms. Mamang Dai
    11.

    Shri Anjum Rajabali
    12.

    Smt. Arundhati Nag
    13.

    Ms. Ira Bhasker
    14.

    Shri Pankaj Vohra
    15.

    Shri Harnath Chakraborty
    16. Shri K.C. Sekhar Babu
    17. Smt. Lora K. Prabhu
    18. Shri T.G. Thyagarajan
    19. Shri Santokh Singh Choudhary


    Chairman


    LEELA SAMSON 01-04-2011 Till Date


    Important Contact Person for this field.

    Smt. Leela Samson
    Central Board of Film Certification
    Bharat Bhavan
    91-E Walkeshwar Road,
    Mumbai 400 006
    Tel No. 2363 1048
    Fax No: 2369 0083
    Email : chairperson.cbfc@nic.in

    Smt. Pankaja Thakur
    Chief Executive Officer
    Central Board of Film Certification
    Bharat Bhavan
    91-E Walkeshwar Road,
    Mumbai 400 006
    Tel No. 2363 1048
    Fax No: 2369 0083
    Email : ceo.cbfc@nic.in

    Shri. Jitendra Pratap Singh
    Regional Officer,
    CBFC, Mumbai
    Tel : 022-23625770
    E-Mail :
    romum.cbfc@nic.in

    Shri V.Packirisamy,
    Regional Officer,
    CBFC, Chennai
    Tel: 044-28278764
    E-Mail :
    rochen.cbfc@nic.in

    Shri Santanu Palodhi,
    Regional Officer,
    CBFC, Kolkata
    Tel: 033-22487266
    E-Mail :
    rokol.cbfc@nic.in
    Shri K.Nagaraja
    Regional Officer,
    CBFC, Bangalore
    Tel : 080-25525164
    E-Mail:
    robang.cbfc@nic.in

    Smt. A Dhanalaxmi,
    Regional Officer,
    CBFC, Hyderabad
    Tel: 040-23394910
    E-Mail :
    rohyd.cbfc@nic.in

    Shri Raj Kumar
    Regional Officer,
    CBFC, New Delhi
    Tel : 011-24362309/24361456
    E-Mail :
    rodel.cbfc@nic.in
    Shri T.Madhukmar,
    Addl. Regional Officer,
    CBFC, Thiruvananthapuram
    Tel : 0471-2320857
    E-Mail :
    adrotvm.cbfc@nic.in


    Shri Akhil Kumar Mishra,
    Regional Officer,
    CBFC, Cuttack
    Tel: 0671-2301220
    E-Mail :
    roctc.cbfc@nic.in

    Shri B. Narzarey
    Regional Officer,
    CBFC, Guwahati
    Tel : 0361-2380541
    E-Mail :
    roguw.cbfc@nic.in

    ReplyDelete

  21. நடந்த சம்பவத்திற்க்கும் எடுக்க பட்ட விதத்திர்க்கும்
    திரைபடக்குழுவினர் மன்னிப்பு கேட்டு கொண்டனர், என்றும் வரும் காலங்களில் இஸ்லாமிய நணபர்களாக நடிப்பார் என்றும் இஸ்லாமிய கருத்துக்களை சொல்லுவார் என்றும் கூறியுள்ளார், இவர்களைபோன்ற கோமளிகளின் விளக்கம் கேட்ட இஸ்லாத்தினை எற்றனர் இன்றைய இஸ்லாமியர்கள்.

    இத்திரைப்படம் உலகின் தமிழ் மக்கள் உள்ள பகுதி முழுவதும் வெளியாகி உள்ளது அதே நேரம் எல்ல இடத்திலும் அது நீக்கபட வில்லை, காரணம் முடியாது, அவர்களின் எண்ணம் இதுவேதான் இதை வைத்து வியாபாரம், விளம்பரம் அதுவே அந்த கோமளிகளின் நோக்கம் இல்லையெனில்,

    1 தலைமைசெயலகத்தில் பதுகாப்பு மனு கொடுத்து தன்னுடைய
    திரைப்படம் வெளியிடும் அரங்குகளுக்கு பாதுகாப்பு கேட்டது எதற்க்கு

    2 படம் எடுக்கும் போதே அது தெரியாத இது இஸ்லாமிய மக்களுக்கு
    செய்யும் துரோகம் என்று,

    3 புரட்சி திரைப்பட இயக்குனர் சந்திரசேகரனுக்கு புரியாததா இது ?

    இன்னும் எவ்வளவோ கேட்கலாம் மன்னிப்பு என்ற வார்த்தைக்குள் ஒழிந்து கொள்ளும் வேஷாதாரிகள்

    இவர்களுக்கும்,

    இஸ்லாமிய நாடுகளுள புகுந்து அடித்து துவேஷம் செய்து விட்டு பல்லயிரகணக்க மக்களை கொன்றும், அவர்களை நிர்கதியாக்கி விட்டு
    பிறகு அங்கு ஒன்றும் இல்லை என்று கூறும் கேவலமான ஐ.நா கூட்டமைப்பின் மன்னிப்புக்கும் வித்தியாசம் இல்லை

    காரணம் இன்று இவர்களை போன்று கூறும் வெற்று வசனங்களை நம்பி பலியாகும் சில மாற்றுமத நபர்களின் தவறான புரிதல்களே இது போன்ற சம்பவங்களுக்கு அடித்தளம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்,

    தீர்வு : """ முழூஅளவில் இத்திரைப்படம் வெளியிட்ட இடங்களில் தடுக்கப்படவேண்டும் இதனால் எற்பட்ட பொருளாதர இழப்பினை உணர்ந்தால் தான் இது போன்ற கருத்துக்களுடன் வெளியாகும் திரைப்படங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படமுடியும் ""

    எடுப்பதுபோல் எடுத்து விட்டு அதை வெளியிடுவதுபோல் வெளியிட்டு விட்டு பிறகு மன்னிப்பு கேட்டு விட்டால் விட முடியாது, இது போன்று எதிர்காலத்தில் நடக்காது என்று என்ன நிச்சயம்,

    உலக கோமளியின் அடுத்த படம் ஒன்று தயாராகி வெளியிட உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

    நம்முன்னே உள்ள எத்தனையோ உயிரோடு இருக்கும் அப்துல்லாவுக்கும், ஹமிதுகளுக்கும், உமர்களுக்கும் எவ்வளவு மனவேதனை அளிக்கும் என்று அந்த கோமாளிகளுக்கு புரிவது இல்லை.

    புரியவைக்கவும், திரும்பவும் அவர்களின் நினைவுகளில் இது போன்ற எண்ணங்கள் உதிக்கமல் இருக்கவுமே மேற்கூறிய தீர்வாக இருக்கும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!