14 November, 2012

விஜய்யின் துப்பாக்கி திரை விமர்சனம் - thuppakki tamil movie review


வணக்கம் நண்பர்களே.... தங்களை மீண்டும் ஒரு திரைவிமர்சனத்தோடு சந்திக்கிறேன்...


தீவிரவாதம்.. தீவிரவாதி.. குண்டு வெடிப்பு.. போன்ற கதைகள் கொண்ட படமாக இருந்தால் அதற்கு சரியான இடம் மும்பை என்று தீர்மானித்து விட்டார்கள் போலும் இந்திய சினிமாவினர்கள்.

துப்பாக்கி படமும் அதுபோன்று தீவிரவாதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே. பொதுவாக ஒரு குண்டு வெடித்தால் அதை வைத்தது யார்..? எதற்காக வைத்தார்கள்..? அவரை பிடித்து உண்மையை வரவைப்பது ‌போன்று தான் இது வரை படங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப்படம் மேற்கண்ட அத்‌தனை கேள்விகளையும் ஓரம் தள்ளிவைத்து விட்டு ஒரு குண்டு வெடிப்பில் அதை வைத்த தலைமைக்கும் அதை வைத்த கடைசி ஆளுக்கும் தொடர்பு இல்லாமல் கூட இருக்கலாம். அப்படி கடைமட்ட ஆட்கள் இந்தியா முழுக்க பரவியிருக்கிறார்கள்  என்றும் அவர்களை  ஸ்லிப்பர் செல் (Sleeper Cell) என்று இனம் கண்டு அவர்களை பிடித்து விசாரிப்பது வீண் அவர்களை வைத்து தலைமையை கண்டறிந்து அழிப்பதுதான் இவர்கள் செயல்படாமல் வைக்க முடியும் என்பதுதான் கதையின் கரு...


அதன்படி இந்த ஸ்லிப்பர்களை எப்படி கொன்றார்கள் இவர்களை வைத்து தலைமையாளனை எவவாறு அறிந்து அவர்களை ஹீரோ எப்படி அழிக்கிறார் என்பதுதான் துப்பாக்கி படத்தின் கதை.

நாயகன் விஜய் இரணுவத்தில் இருந்து 45 நாள் விடுமுறையில் மும்பை வருகிறார். அங்கு ஒரு பேருந்தில் குண்டு வெடிக்கிறது. அவனை பின்தொடர்ந்தபோது இன்னும் சில தினங்களில் 12 இடங்களில் குண்டி வெடிக்க போகிறது என்ற தகவல் கிடைக்கிறது. பின்பு தன்னுடன் விடுமுறைக்கு வந்த ராணுவ நண்பர்களுடன் அந்த 12 இடத்தில் குண்டு வைக்கும் 12 நபர்களை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கிறார்கள்.  அந்தகாட்சியில் துப்பாக்கியை பயன்படுத்தியதால் தான் படத்துக்கு துப்பாக்கி என்று வைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.



இந்த 12 ‌பேரும் அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்பு விஜய்யை தேடி வில்லனும்... வில்லனும் தேடி விஜய்யும் எப்படி காய்நகர்த்துகிறார்கள் என்பதை கொஞ்சம் விரிவாக  தமிழ் படத்துக்கே உரிய பாணியில் கொஞ்சம் விரிவாக  திரையில் ஓடவிட்டிருக்கிறார்கள்.

விஜய்யை பொருத்தவரை தீவிரவாத கதைக்கு விஜயகாந்த் மற்றும் அர்ஜூனுக்கு பிறகு நன்றாக பொருந்தியிருக்கறார். அவருக்கு நண்பராக காவல் துறை அதிகாரியாக சத்யன் கூடவே இருக்கிறார். சண்டைககட்சிகளில் நல்ல முறையில் செய்திருக்கறார் விஜய். 12 தீவிரவாதிகளை தாக்க எடுக்கும் முயற்சிகள் அழகாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. ஆனால் இந்த விறுவிறுப்பு படம் முழுக்க இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்.

நாயகி கஜோல் அகர்வால் முதல் பெண்பார்க்க வந்து வேண்டாம் என்றும் பின்பு அவருடைய கேரக்டரை புரிந்து வேண்டும் என்றும்... படம் முழுக்க இடையிடையில் இந்த வேண்டும் வேண்டாம் என்ற விளையாட்டு ஓடுகிறது. இவர்களுக்கு இடையில் ராணுவ அதிகாரியாக வரும் ஜெயராமை நகைச்சுவைக்காகவே பயண்படுத்தியிருக்கிறார்கள்.

இறுதியில் வில்லனுடன் அரபிக்கடலில் ஒரு கப்பலில் நேருக்கு நேர் மோதி அவரை அழித்து திருப்புகிறார் விஜய்.

குண்டு எதற்கு வெடிக்கிறது. அதன் பின்னணி என்ன?  ‌போன்ற ‌கேள்விகளுக்கு விடையில்லை. படம்முழுக்க பாட்டு காதல் சண்டை என கலந்துக்கொடுத்துள்ளதால் எதுவும் முதன்மையானதாக கருதமுடியவில்லை.

முதல் முறையாக விஜய் படத்தில் எந்தபாட்டும் எடுபடவில்லை. எல்லாம் பாடல்களும் பாப் பாடல்கள் போல் தோன்றுகிறது. படத்திற்கு அவை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை. கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் பாடல் மட்டுமே கொஞ்சம் சுமார்...


எ.ஆர்.முருகதாஸிடம் அதிகம் எதிர்பார்த்து சென்றேன் ஆனால் அவருடைய முந்தைய படங்களை ஒப்பிடும்போது அவ்வளவு பிரமாதம் என்று சொல்லிவிடமுடியாது.

பாடல்களை தவிர்த்து, பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கும் கஜோலை தவிர்த்தால் ஒரு முறை பார்க்கலாம்.


விஜய்க்கு இந்தப்படம் கொஞ்சம் முன்னேற்றத்தை தரும் என்று நினைத்தேன் ஆனால் அதில் கொஞ்சம் பின்னடைவே மிஞ்சியிருக்கிறது.

13 comments:

  1. என்ன தல எல்லாரும் படம் அருமைனு சொல்றாங்க ..?? போடா போடி பார்த்த எபக்ட்ல இதையும் பார்த்ததால் அப்படி தோணுதோ ?

    ReplyDelete
    Replies
    1. படம் ந்ல்லாயில்லன்னு நேரடியா சொல்லவில்லை...

      ஏ.ஆர் முருகதாஸிடம் அதிகம் எதிர்பார்த்து படத்துக்சென்றேன். அதனால் எனக்கு இந்த ஏமாற்றம்.


      விஜய்யை பொருத்தவரை குறைசொல்வதற்க்கு ஒன்று இல்லை. படத்தில் அதிரடியான திருப்பங்களோ கதைக்காக காரணங்களோ,... காட்சி அமைப்பிற்கான யதார்த்தமோ படத்தில் சரியாக இல்லை.

      விஜய் படம் என்றால் காட்சிக்கு காடசி விசில் சத்தமும் கைதட்டலும் இருக்கும் ஆனால் இப்படத்தில் அதுபோன்று விசில் சத்தமும் கைதட்டலும் குறைவாகத்தான் பார்க்க முடிந்தது.

      விஜய் படத்தில் பாடல்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் படத்தில் கண்டிப்பாக ஒரு பாடலை ஒன்ஸ்மோர் கேட்டு ரகளை நடக்கும் அப்படி இந்த படத்தில் எந்த பாடலையும் ரசிகர்கள்திரும்ப கேட்கவில்லை. மேலும் பாடல்கள் போடும் போது கேண்டீன் போன ரசிகர் அதிகம்...

      சில பாடல்களை தவிர்த்திருந்தால் கூட படம் இன்னும் விறுவிறுப்பு அடைநதிருக்கும் என்று நினைக்கிறேன்.


      இதுபோன்ற படத்தில் அதிக அதிரடி வசனங்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் வசனங்கள் அதிக அக்கறைக்காட்ட வில்லை.

      ஒருசில காட்சிகளில் லாஜிக் உதைக்கிறது.

      இந்த தீபாவளிக்கு நிறைய படங்கள் வந்திருந்தால் துப்பாக்கியை விமர்சனம் தெரிந்திருக்கும் போட்டிக்கு படங்கள் இல்லை என்பதால் பார்க்கலாம் என்ற ரகத்திலே என்னுடைய விமர்சனம் இருக்கிறது.

      Delete
    2. போடா போடியை ஒப்பிடும் போது இது மிகசிறந்தப்படம் தான்...


      தீவிரவாத கதை என்ற பாணியில் பார்த்தால் இன்னும் முயற்சி தேவை.

      Delete
    3. தீவிரவாதி கதாநாயகனின் குடும்பத்தாரை அல்லது அவரது தங்கையை கடத்தி ஹீரோவை வரவைப்பதை எந்த தமிழ் படத்திலும் தாங்கள் பார்த்ததே இல்லையா...

      அடுத்து ஹீரோவை தனியாக வரவைத்து சண்டைப்போடுவதும் புதுமையில்லை பார்த்து பழகிய காட்சிகளே...

      சண்டைக்காட்சிகள் பரவாயில்லை...

      பாடல்கள் அத்தனையும் படு போர்...

      ஒரு சில மொக்கை காமெடிக்காக ஒரு பெரிய நடிகரான ஜெயராமை பயன்படுத்தியது வீண்...

      மேலும் தீவிரவாத்துக்கு விஜய்க்கு துணையாக ஜெயராமை பயன்படுத்தியிருக்கலாம்...

      ஆனால் காமெடி ந்டிகர் சதயனை பயன்படுத்தியிருப்பது எனக்கு நன்றாக படவில்லை....

      Delete
    4. படத்தை பார்த்துவிட்டு வாங்க ராஜா இன்னும் விரிவாக விவாதிப்போம்...

      Delete
  2. Replies
    1. DEAR ALL...PLEASE FOLLOW THE LINK WILL UNDERSTAND ABOUT THUPPAKKI FILM.

      http://kavithaiveedhi.blogspot.com/2012/11/blog-post_14.html

      Delete
  3. வாங்க அருள் சார்...

    படத்தில் புகைபிடிக்கும் காட்சி இருக்கிறதா இல்லையா என்று சரியாக சொல்ல முடியவில்லை அருள் சார்...

    இல்லை என்றே நினைக்கிறேன்...

    ஆனால் மேற்கண்ட புகைப்படம் அந்த படத்திற்காக எடுக்கப்பட்டதே...

    ReplyDelete
  4. மேலும் ஒரு காட்சியில் கஜோலிடம் தம்மடிக்கிற பழக்கம் இருக்கிறதா.. என்று விஜய் கேட்க

    அதற்கு கஜோல் இல்லை என்று சொல்ல

    விஜய் எனக்கு தம்மடிக்கிற பெண்களைத்தான் பிடிக்கும் என்கிற வசனம் மட்டும் படத்தில் இருக்கிறது...

    ReplyDelete
  5. முதல் நாள் படம் பார்த்தால் இப்படித்தான்....

    ReplyDelete
  6. செம ஹிட்...

    விமர்சனத்திற்கு நன்றி...
    tm4

    ReplyDelete
  7. This is the only right review i read in the entire tamil blog!!!

    ReplyDelete
  8. யோவ் வாத்தி, புள்ளைகளுக்கு ஒழுங்கா பாடம் நடத்தச் சொன்னா, முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு விமர்சனமா எழுதுதீரு....

    சார்...சார். வாத்தியைப் பிடுச்சி உள்ளே போடுங்க சார்.....

    // ஏ.ஆர் முருகதாஸிடம் அதிகம் எதிர்பார்த்து படத்துக்சென்றேன். அதனால் எனக்கு இந்த ஏமாற்றம். //

    மிஸ்டேர் பன்னிகுட்டி ரம்ஸாமியோவ்வ்வ்வ்வ்வ் வந்து இதுக்கு பதில் சொல்லுப்பேய்ய்ய்ய்ய்ய் :-))))))))))

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!