19 December, 2012

விஜயின் நண்பன், அஜித்தின் பில்லா - 2012-ல் படைத்த சாதனை...

 
இந்த ஆண்டு தமிழகத்தில் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளில் துப்பாக்கி, பில்லா 2 மற்றும் நண்பன் ஆகிய படப்பெயர்களும் அடக்கம். 
 
2012-ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகளில் துப்பாக்கி, பில்லா 2 மற்றும் நண்பன் ஆகிய படப்பெயர்களும் அடக்கம். 
 
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் ஏராளமானோர் சினிமா என்ற வார்த்தையை கூகுள் தேடலில் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக தென்னிந்திய நகரங்களான கோவை, சென்னை மற்றும் விஜயவாடாவில் தான் அதிகமானோர் சினிமா குறித்து கூகுளில் தேடியுள்ளனர். 
 
பிற மாநிலங்களில் உள்ளவர்கள் பல்வேறு பொருட்கள் குறித்து கூகுளில் தேடியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் மகக்ள் படங்கள் குறித்து தான் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
துப்பாக்கி, நண்பன் ஆகிய படங்கள் விஜய் நடித்தது. பில்லா 2 அஜீத் குமார் நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. நமக்கெல்லாம் சினிமாதானே முக்கியம்!

    ReplyDelete
  2. இப்படியாவது சாதனை பண்ணியிருக்காங்களே! வாழ்த்துவோம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. வித்தியாசமான அலசல்.

    மிக்க நன்றி.

    Tamil Advertisements

    ReplyDelete
  4. ஒவ்வொரு வருசமும் ஒண்ணொன்னு... ம்ஹூம்...

    ReplyDelete

  5. \\துப்பாக்கி, நண்பன் , பில்லா 2 \\ இதைத்தான் தேடினாங்களா.......... எங்கே போயி முட்டிக்கிறதோ தெரியலை.. :(

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!