14 December, 2012

நீதானே என் பொன்வசந்தம்


பனிக்கால இரவுகளில்
என்னை சுற்றியிருக்கும் கதகதப்பு நீ...!

மழைக்கால பொழுதுகளில்
என்னை வருடிச் செல்லும் சாரல் நீ...!

‌கோடை கதிர்களை நெருங்கவிடாமல்
என்னை தொடரும் நிழல் நீ..!

வாடைக்காற்றுகள்  தீண்டாமல்
என்னை வாசம் செய்யும் வாசல் நீ..!

அந்தி சாயலில் சுகமாய்

என்னை வருடிச்செல்லும் தென்றல் நீ..!

என் வாழ்க்கையை எல்லாகாலத்திலும்
ஒளிரவைக்கும் பொன் வசந்தம் நீதானே....!

 

14 comments:

  1. அருமை அருமை
    சொல்லிச் சென்றவிதமும் முத்தாய்ப்பும்
    மிக மிக அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாவ்...இனிமை!அருமை!

    ReplyDelete
  3. நீ ...நீ...நீதான் அழகா சொன்னீங்க.

    ReplyDelete
  4. என்ன தல இப்டி ஒரு ஏமாத்தீட்டீங்க ,,ஹ்ம் நான் கூட சமந்தா பத்தி எதாச்சும் இருக்குமானு வந்தேன் :)

    ReplyDelete
  5. அருமை
    \\என் வாழ்க்கையை எல்லாகாலத்திலும்
    ஒளிர வைக்கும் பொன் வசந்தம் நீதானே....!//

    ReplyDelete
  6. சூப்பர் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அன்பின் சௌந்தர் - பொன் வசந்தம் அருமையான கவிதை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. பொன் வசந்தமாய் அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!