20 December, 2012

திடீரென்று மாறிவிட்ட விஜய்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
இளைய தளபதி விஜய்க்கு திடீர் என்று என்ன ஆகிவிட்டது இப்படி மாறிவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் வியக்கின்றனர். 
 
விஜய் அழகான கலர்களில் ஆடை அணிந்து நடித்து வந்தார். அவருக்கு அது அழகாகத் தான் இருந்தது. யார் ஐடியா கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை மனிதர் திடீர் என்று சிங்குச்சா, சிங்குச்சான்னு டிரஸ் போட ஆரம்பித்துவிட்டார். 
 
சிவப்பு கலர் சிங்குச்சா, மஞ்சள் கலரு சிங்குச்சான்னு அவர் அணிந்து வரும் சட்டைகளைப் பார்த்தாலே ஐயோ என்றிருக்கும். நல்லா இருந்த மனுஷன் ஏன் இப்படி ஆயிட்டாரு என்று பலர் கேட்டனர். அதிலும் வேட்டைக்காரன் படத்தில் பட்டுச்சேலையை கிழித்து சட்டை தைத்து போட்டிருப்பார் பார்க்கணும். 
 
 
அந்த படத்தைப் பார்த்தும் விஜய் முதலில் உங்கள் காஸ்ட்யூம் டிசைனரை மாற்றிவிடுங்கள் என்று சொல்லத் தோன்றியது. 
 
இந்நிலையில் நண்பன், துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார். விஜய் பழையபடி ஒழுங்கான கலர்களில் டிரஸ் போட்டு நடித்துள்ளார். விஜயைப் பார்த்து சிங்குச்சா டிரஸ் போட்டு சுற்றிய அவரது ரசிகர்கள் தற்போது விஜயக்கு என்ன ஆச்சு கலர்புல்லா டிரஸ் போட மாட்டேன் என்கிறார் என பேசுகிறார்கள். 
 
அவர்கள் பேச்சைக் கேட்காதீர்கள் விஜய். இப்பொழுது தான் பார்க்க லட்சணமாக டிரஸ் போடுகிறீர்கள். அதையே தொடரவும். 
 
குறிப்பு: விஜயின் தீவிர ரசிகரான அதிகாரி ஒருவர் மஞ்சள் நிற பேண்ட்டும், மஞ்சள் நிற ஷூவும் போட்டு பார்ப்பவர்களை மிரள வைக்கிறார்.

4 comments:

  1. //அவர்கள் பேச்சைக் கேட்காதீர்கள் விஜய். இப்பொழுது தான் பார்க்க லட்சணமாக டிரஸ் போடுகிறீர்கள். அதையே தொடரவும்.//

    உங்கள் அறிவுரையை ஏற்பார் என்றே நம்புகிறேன்!

    ReplyDelete
  2. Neenga Vijay Rasikara illa Ajith Rasigara..?? But unmaiyaana Vijay rasikarkal ippo irukkira mathiri costumes pottale pothumnu than ninaippanka.. Athu sari yaar antha strict athikari..? !!!

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா !!! இதெல்லாம் விஜய் விரும்பி போடுகிறாரா என்பதில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது நண்பரே!

    படத்தின் இயக்குனர்கள்தான் இவரை இயக்குகிறார்கள் இருந்தாலும் உங்களுடைய வார்த்தைகளும் உண்மைதான். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!