05 December, 2012

இவர்கள் மனித உருவில் வாழும் மிருகங்கள்...!


யார் எழுதியது என்று தெரியவில்லை
அடையாளம் தெரியாத சாதிக்கு
எத்தனை சட்டத்திட்டங்கள்...!

கலங்கிடாதே பெண்ணே...!
இனி வார்த்தைகளை சுருக்கி உன் கண்கள்
கடிதங்கள்  எழுத தேவையில்லை..!

உலகத்தின் பார்வைக்கு
நீ மின்மினியாய் தெரியலாம்
எனக்கு நீ நான் சூரியன்...!

வாக்காளர் பட்டியலில்இருந்து
நீக்கியிருக்கலாம் உன்னை
எனை ஆளும் பட்டத்தரசி நீ...!

வீழ்ந்த சிறு துளி நீர் என்று
ஒதுக்கப்படலாம் உன்னை
ஆனால் என் பிரபஞ்சத்தை நனைக்க வந்த
மாமழை நீ...!

கோடிமலர்களில் மலர்ந்ததால்
முகவரி தொலைத்தோம் என்று கலங்காதே
நான் சூடவிருக்கும் ஒற்றை மலர்கிரீடம் நீ...!

கல்லென்றும் மண்ணென்றும் உன்னை
ஒதுக்குபவரிடம் சத்தமாய் சொல்...
என் தேசத்தை ஒளிரவைத்த மாணிக்கம் நீ...

காலத்தால் கண்டுக்கொள்ளபடாத நாம்
காதலால் உயர்ந்த இடத்துக்கு போகிறோம்...

ஆறறிவில் ஒன்றை தொலைத்த
அறிவற்ற மாக்களுக்கு தெரியாது
காதல் கொண்டே துளிர்த்தது இந்து பூமியென்று...!

ஓ... மனித மிருகங்களே...!
தீமூட்டும் முன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...!

எப்பொழுதும்
தீயைத்தின்று உயிர் வாழும்
காதல்...

தீயில்வெந்து உயிர்துறக்கும்
சாதி...!

9 comments:

  1. // தீயைத்தின்று உயிர் வாழும்
    காதல்// - அருமையான வரிகள்

    ReplyDelete
  2. அற்புதமான வரிகள் மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete

  3. வாக்காளர் பட்டியலில்இருந்து
    நீக்கியிருக்கலாம் உன்னை
    எனை ஆளும் பட்டத்தரசி நீ...!

    கொடுத்து வச்சவங்க தான் வரிக்கு வரி அற்புதம்.

    ReplyDelete
  4. பெண்மையை வெகு அழகான அரியணையில் ஏற்றி விடீர்கள்!
    பாராட்டுக்கள்!
    http://ranjaninarayanan.wordpress.com
    http://pullikkolam.wordpress.com

    ReplyDelete
  5. அழகான வரிகள்...
    ரசித்தேன்

    ReplyDelete


  6. ஆழமான காதல் அழகான கவிதை!

    இரண்டு நாடகளாகா தங்கள் வலை எகிறிக் கொண்டே இருந்ந்தே! ஏன்?

    ReplyDelete
  7. உணர்ச்சிப் பூர்வமான கவிதை! அருமை!

    ReplyDelete
  8. மிகவும் அருமையான வரிகள்....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!