07 December, 2012

இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

********************************************************** 
ண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...

**********************************************************

ண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

********************************************************* 
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...


தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..!
(Re-Post)

9 comments:

  1. ரோஜாவை வரைந்து விடலாம்
    அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

    இரசித்தேன் நண்பா.

    ReplyDelete
  2. மனம் கவர்ந்த அருமையான வாசகங்கள்
    படித்து மிகவும் மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனைத்துமெ ரசிக்கும் படியாக சிறப்பு.

    ReplyDelete
  4. யார் எழுதியதா இருந்தா என்ன ...சூப்பரா இருக்கில்ல!

    ReplyDelete
  5. அருமையா இருக்குய்யா போலீசு....!

    ReplyDelete
  6. இதில் சில வரிகள் எனக்கும் வந்தது, மிகவும் ரசித்தேன் நண்பரே!

    ReplyDelete
  7. படித்தேன் ..ரசித்தேன்...

    ReplyDelete
  8. அனைத்தும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. அனைத்துக் குறுங்கவிதைகளும் நன்று - ரோஜாவின் வாசம், மரணம் வரை நட்பு - நட்புக் கவிதைகள் அனைத்துமே அருமை- படங்களோ சூப்பர் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!