07 December, 2012

பவர் ஸ்டார் மற்றும் புவனேஷ்வரி குண்டர் சட்டத்தில் கைதா..! அதிர்ச்சியில் திரையுலகம்..!



பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் இரண்டு மோசடிப்புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து விரைவில் அவர் குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவைச் சேர்ந்த ரத்தோர், கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சொத்து விற்பனை மற்றும் கொள்முதலில் முதலீடு செய்யலாம் என்று கூறி சீனிவாசன் மோசடி செய்ததாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.


சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.65 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதேபோல் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார் சீனிவாசன்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடையாறு பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவர் 5 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றுக்கொண்டு சீனிவாசன் ஏமாற்றிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் கொடுத்திருந்தார். இது பற்றி அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனரை விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் நடிகர் சீனிவாசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டன.

இப்போது கோவாவைச் சேர்ந்த ரத்தோர், கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சொத்து விற்பனை மற்றும் கொள்முதலில் முதலீடு செய்யலாம் என்று கூறி சீனிவாசன் மோசடி செய்ததாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே 2 மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்து 'லட்டு தின்று கொண்டிருக்கும்' நடிகர் சீனிவாசன் மீது மேலும் மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே விரைவில் இந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்படுவார் என்றும் இம்முறை அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் கூறப்படுகிறது.

சந்தானத்துடன் லண்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து வரும் பவர் ஸ்டார், சிறையில் அடைபட்டு களி திண்பாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறதாம்.
சமீக காலமாக நடிகை புவனேஷ்வரியின் மீது பல்வேறு வழக்குகள் பதிவாதி வருகிறது. அதைத்தொடர்ந்து அவரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.


தொடர்ந்து இரண்டு திரையுலகினர் குண்டர்சட்டத்தின் கீழ் அடைக்கப்படலாம் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியுள்ளாக்கியிருக்கிறது.

2 comments:

  1. அச்சச்சோ! பவர் ஸ்டார்க்கு வந்த சோதனை!

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்ம் இவர்களை எல்லாம் என்ன செய்வது ......

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!