28 December, 2012

நித்தியானந்தாவே எல்லாம் - ரஞ்சிதா பேட்டி, நித்தியானநத்தாவை சந்தித்த திரை பிரபலங்கள்

 நாட்டில் எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. 

நித்தியானந்தா குறித்தும், சிடி சர்ச்சை குறித்தும் ரஞ்சிதா ஒரு டிவி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது... நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது. அதை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டார்கள். பணம் தராவிட்டால் விபசார வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர். அவர்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டில் ஏற்றுவேன். சிறு வயதிலேயே எனக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதுவே நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செல்ல தூண்டியது. 

நடிகர், நடிகைகள் பலர் ஆன்மீகத்தில் ஈடுபாடு வைத்துள்ளனர். ரஜினிகாந்த் ஆன்மீகவாதியாக இருக்கிறார். நான் நித்தியானந்தா பக்தையாவதற்கு முன்பே நடிகர் விவேக் அவரிடம் சென்று வந்தார். நடிகர் சந்தானம், நடிகை கவுசல்யா போன்றோரும் ஆசிரமத்துக்கு அடிக்கடி வருகிறார்கள். 

எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும். சி.டி. விவகாரத்துக்கு பிறகு முன்பைவிட அதிக பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள். 

வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.. நித்தியானந்தா தற்போது வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஜனவரி 6-ம் தேதி அவரது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என்றார் ரஞ்சிதா.

7 comments:

  1. திருமதி ரஞ்சிதா அம்மா சொல்ரது உண்மைதான், எப்படீன்னு சொன்னா அவங்களுக்கு பலவருடமாக அனுபவம் இருக்குள்ளே, அப்படியும் பார்தா வெளிநாடுகளில் இருந்து எல்லாம் நிறைய பக்தர்கள் வருகிறார்களாம், அதுவும் உண்மைதான்.

    ReplyDelete
  2. //நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது.

    //

    ஹீ .. ஹீ .. அப்ப உண்மையான சி . டி எங்கே ?

    ReplyDelete
  3. எல்லா நடிகர் நடிகைகளும் அங்கு போவதற்கு வேறு ஒரு காரணமும் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் சொன்னார்.

    எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ யாருக்கு தெரியும்.

    ReplyDelete
  4. அமா நீங்க எப்ப பூஜைக்கு போவிக

    ReplyDelete
  5. VIVEK IS A FRAUD RATIONALIST.,He is acting as a rationalist,not only in cinemas,but also in real life.

    ReplyDelete
  6. ஆமா பாரதிராஜா படத்துல ரஞ்சிதாவாமே..படத்துக்கு ஃபைனான்ஸ் நித்தியாமே......

    ReplyDelete
  7. அன்பின் சௌந்தர் - ரஞ்சிதாவிற்கு பேட்டி கொடுக்க உரைமை உள்ளது - அவ்வளவுதான் - அதனைப் பிரசுரித்த வரை சரி - அவ்வளவு தான் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!