04 January, 2013

ரஜினி கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் ! ரிலீஸ் தேதி அறிவித்து பரபரப்பு பேட்டி...!


சூப்பர் ஸ்டாரு்ககு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று தனக்குத் தானே பட்டம் வைத்துக் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 


பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சந்தானத்துடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். 


படத்தின் ட்ரெய்லரே இவ்வளவு காமெடியாக உள்ளது என்றால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தவிர பவர்ஸ்டார் ஷங்கரின் ஐ படத்தில் நடிக்கிறார். 


அதில் அவர் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிட்டி ரோபோ கதாபாத்திரம் போன்று நடிக்கிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 


சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டார் தான். சந்தானம் எனது தம்பி மாதிரி. அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு தம்பியாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 


ஆனந்த தொல்லையின் ரிலீஸை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளேன் என்றார்.

1 comment:

  1. அட இப்படி தலைப்பு வைச்சி ஏமாத்தீட்டீங்களே!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!