21 March, 2013

அட இதுக்குக்கூடவா வரி கட்டணும்...! தெரிஞ்சிக்கங்க மக்களே...!



நாம் பெறும் அன்பளிப்புக்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம், புதிதாக வந்திருக்கும் வருமான வரி சட்டம் யு/எஸ் 52 (2)ன் படி, நமது வருமானத்தைத் தவிர்த்து வேறு வழிகள் மூலமாக வரும் வருமானங்களுக்கும் நாம் வரி கட்ட வேண்டும். இந்த புதிய வருமான வரி சட்டத்தின்படி ரூ.50,000க்கு அதிகமாக பொருளாகவோ அல்லது ரொக்கமாகவோ அன்பளிப்பாகப் பெற்றால் அந்த அன்பளிப்பிற்கு வரி செலுத்த வேண்டும்.

அது அசையா சொத்தாகவோ அல்லது அசையும் சொத்தாகவோ இருக்கலாம். ஆனால் அதன் மதிப்பு ரூ.50,000க்கு அதிகமாக இருந்தால் புதிய சட்டத்தின் படி அதற்கு வரி செலுத்த வேண்டும்.

வரி செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு பெறும் அன்பளிப்புகள்:

1. திருமணத்தின் போது பெறும் அன்பளிப்புகள்
2. உயில் மூலம் பெறப்படும் பூர்வீக சொத்துகள்
3. ஒரு வேளை அன்பளிப்பு வாங்கியவர் இறந்துவிட்டால்
4. இறந்த தொழிலாளியின் போனஸ், ஓய்வூதியம் மற்றும் முதிர்வுத் தொகை
5. என்ஆர்ஐ கணக்கு மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பெற்றோருக்கு அளிக்கும் அன்பளிப்பு

அதுபோல் ஒரு மருமகள் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த தேவையில்லை. ஆனால் மருமகன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடமிருந்து ஒரு பெரிய தொகையையோ அல்லது பெரிய சொத்தையோ அன்பளிப்பாக பெற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

புரிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகள்:

எடுத்துக்காட்டு 1

ஹரி என்பவர் தனது திருமணத்தின் போது தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடமிருந்து ரூ.50,000க்கும் அதிகமான அன்பளிப்புகளைப் பெற்றால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை. அதே போல் அவர் அசையும் மற்றும் அசையா பூர்வீக சொத்துக்களைப் பெற்றாலும் அதற்கு அவர் வரி செலுத்தத் தேவையில்லை.

எடுத்துக்காட்டு 2

ரூ.10 லட்சம் மதிப்பில் ஹரி தனது மனைவி தீபாவிற்காக ஒரு அன்பளிப்பு வாங்கிக் கொடுத்தால் அதற்கு அவர் வரி செலுத்த தேவையில்லை.

எடுத்துக்காட்டு 3

ஆனால் திருமணத்திற்கு முன்பு தனது வருங்கால மனைவி தீபாவிற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான வைர நெக்லசை அன்பளிப்பாக வழங்கினால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு 4

ராகுல் என்பவர் ஹரி என்பவருக்கு ரூ.30,000 ரொக்க பணத்தை அன்பளிப்பாக வழங்குகிறார். அந்த பணத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அதே நிதி ஆண்டில் ராகுல் மேலும் ரூ.21,000ஐ ஹரிக்கு அன்பளிப்பாக வழங்குகிறார். தற்போது அந்த ஆண்டு முழுவதும் ராகுலிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற ரூ.51,000க்கும் ஹிர வரி செலுத்த வேண்டும்.

வரி செலுத்த வேண்டிய உறவினர்கள்:

1. வரி செலுத்த வேண்டியவரின் வாழ்க்கைத் துணைவர்
2. வரி செலுத்த வேண்டியவரின் சகோதரர் அல்லது சகோதரி
3. வாழ்க்கைத் துணைவரின் சகோதரர் அல்லது சகோதரி
4. வரி செலுத்த வேண்டியவரின் பெற்றோர்களின் சகோதரர் அல்லது சகோதரி
5. வரி செலுத்த வேண்டியவரின் வாரிசு அல்லது மூதாதையர்
6. வாழ்க்கைத் துணைவரின் வாரிசு அல்லது மூதாதையர்

7 comments:

  1. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி...

    ReplyDelete
  2. தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி..

    ReplyDelete
  3. புதிய தகவலுக்கு நன்றி!

    வரதட்சினை ஒழிக்க உதவும் என்று நினைக்கிறேன்...வரிப்பணத்தைக் கணக்கிட்டு ஆண்டுகள் தவணையில் கேட்காமல் இருந்தால் நல்லது!!!

    ReplyDelete
  4. வரி பத்தி வரி வரியா தெரிஞ்சுகிட்டேன். சரி! ங்க....

    ReplyDelete
  5. புதுசா இருக்கே தெரிஞ்ச்கிடேன் நன்றி

    ReplyDelete
  6. அது சரி....
    தெரிந்து கொள்ளச் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!