02 March, 2013

வாழ்க்கையில் அஜீத் கற்றுக்கொண்ட பாடம்..! மனந்திறந்த பேட்டி

கடுமையாக உழைக்க வேண்டும்... ஒழுங்காக வரி செலுத்த வேண்டும்.. பெரியவர்களை மதிக்க வேண்டும், என இளம் நடிகருக்கு அஜீத் அட்வைஸ் செய்துள்ளார். 
 
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அஜித்குமார் அடுத்ததாக 'சிறுத்தை' சிவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சமீப காலமாக தமிழ்த் திரையுலகின் இளம் நடிகர்களுடன் நடிப்பதிலும், திரைத்துறையில் அவர்கள் முன்னேற பல வழிகளில் ஊக்கமளிப்பதிலும் ரஜினியின் வாரிசாகத் திகழ்கிறார் அஜித். 
 
அந்த வகையில் விஜயா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயிரடபடாத படத்தில் பாலா, விதார்த், முனீஸ், சுஹைல் என இளம் நடிகர்கள் அஜீத்துடன் நடிக்கின்றனர். 
 
இவர்களில் ஒருவரான முனீஸ் சமீபத்தில் அஜீத்தை விஷ்ணுவர்தன் படப்பிடிப்பில் சந்தித்து வாய்ப்புக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது முனீஸிடம் தான் இந்த இடத்துக்கு வருவதற்கு பட்ட பாடுகளை விளக்கிக் கூறினார் அஜீத். 
 
அஜீத் கூறுகையில், "கடுமையாக உழைத்து நாணயமாக வரி கட்ட வேண்டும். குடும்பத்தை குறிப்பாக மூத்தவர்களை மதித்து நடப்பதுடன் அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடவேண்டும். வருமானத்திலிருந்து ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும். 
 
அடுத்தவர்கள் வாழ்வில் உன் கருத்தை திணிக்காமலும், உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க விடாமலும் இருக்கவேண்டும். நீ யாருடன் பணி புரிய வேண்டும் என்று வெறும் பணத்தை நிர்ணயிக்க விடாதே. வாழு வாழ விடு. இது என்னுடைய அறிவுரை அல்ல, என் வாழ்கை எனக்கு கற்று கொடுத்த அனுபவம்," என்று கூறி விடை கொடுத்தனுப்பியிருக்கிறார். 
 
அஜித்தின் வாழ்த்து மற்றும் அறிவுரை குறித்து முனீஸ் கூறுகையில், "அஜீத் கூறியது என்னால் என்றென்றும் மறக்க முடியாதது. அவர் கூறிய சில உபயோகரமான குறிப்புகள் என் திரைப் பயணத்தில் மட்டுமின்றி என் வாழ்க்கையிலும் நிச்சயம் உதவும்," என்றார். (சினிமா செய்திகள்)

1 comment:

  1. அன்பின் சௌந்தர் - மூத்தவர்கள் இளையவர்களுக்கு வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில கொள்கைகளை அஜீத் கூறி இருக்கிறார் -- நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!