02 March, 2013

அம்மா உணவகத்திற்கு பிரபல பதிவர்கள் திடீர் விஜயம்...! உண்மை பிண்ணனி என்ன?


சென்னை மாநகரில் வாழும் ஏழை மக்கள், கூலிப்பணியாளர்கள். ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள், பணி நிமித்தமாக சென்னை வந்து செல்பவர்கள் என, அனைவரும், சுகாதார மற்றும் தரமான உணவை, மலிவு விலையில் பெறும் வகையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

1 ரூபாய்க்கு, இட்லி; 3 ரூபாய்க்கு தயிர் சாதம் மற்றும், 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம் என வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் தயிர்சாதத்துக்கு ஊறுகாய் தருவார்களா அல்லது தரமாட்டார்களா என்ற பட்டிமன்றமெல்லாம் தற்போது ஓடி முடிந்திருக்கிறது.

இந்நிலையில் பிரபல பதிவர்கள்  சென்னை தி.நகரில் உள்ள இந்த உணவகங்களை தேடி சென்று காலை உணவாக இட்லி சாப்பிட்டு விட்டு திரும்பியிருக்கிறார்கள். 

இவர்கள் எத்தனை இட்லி சாப்பிட்டார்கள், அதற்கான செலவு எவ்வளவு, அதற்கான தொகையை செலுத்தியது யார் என்ற கேள்விகளும், அங்கு சென்றதற்கான காரணம் மற்றும் பிண்ணனி என்னவென்று இதுவரை மர்மமாகவே இருக்கிறது.


ஒருவேளை இவர்கள் அம்மா உணவகத்தை ரகசியமாக ஆய்வு மேற்கொண்டார்களா... அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த உணவகத்தைப்பற்றி நல்ல முறையில் அல்லது எதிராக கருத்து தெரிவிப்பார்களா என்று பதிவுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.


எப்பூடி....

13 comments:

  1. இதற்காகத் தான் நீங்களும் செல்லவில்லை (!) என்று நம்புவோம்...

    ReplyDelete
  2. அங்குமா ? சரியா போச்சி.

    ReplyDelete
  3. துப்பறிய நம்ம சேட்டைக்காரன் சாரை அனுப்பலாமா.

    ReplyDelete
  4. வயிற்றுப் பசிக்காக சென்று இருக்க மாட்டார்கள்.
    பதிவுப் பசிக்காக சென்றிருப்பர். பார்ப்போம்.
    எப்படியும் நமக்கு விருந்து தான்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சௌந்தர் - நமது பதிவர்கள் பதிவெழுடஹ் பல்வேறு இடங்க்ளுக்கும் சென்று தகவல் திரட்டுவது இய்லபான செயல் தானே ! பதிவினை எதிர்பார்ப்போம்,. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
  5. பதிவர்களின் கடமை உணர்ச்சியைப் பாராட்டுவோம் ..

    ReplyDelete
  6. ஏழைப்பதிவர்கள்...சோறு சாப்புட போனோம். வேறெந்த ரகசியமும் இல்லீங்க.

    ReplyDelete
  7. இட்லி சாப்பிடவில்லை. சாம்பார், தயிர் சாதம்தான்.

    http://www.madrasbhavan.com/2013/03/blog-post_3.html

    ReplyDelete
  8. Replies
    1. எது சாம்பார் சாதமும் தயிர் சாதமுமா?

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!